என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    அம்மன் சிலையை பெயர்த்து சேதப்படுத்திய கும்பல்
    X

    சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி. (அடுத்த படம்) சேதப்படுத்தப்பட்ட அம்மன் சிலை கல்வெட்டு.

    அம்மன் சிலையை பெயர்த்து சேதப்படுத்திய கும்பல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி காங்கேயநல்லூர் மேலாண்ட தெரு புளியந்தோப்பு பகுதியில் படவேட்டம்மன் கோவில் உள்ளது. இதில் அம்மன் உருவப்பொறித்த கல்வெட்டு அமைத்து பொதுமக்கள் பல ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர்.

    நேற்று இரவு இந்த அம்மன் சிலை கல்வெட்டை மர்ம நபர்கள் பெயர்த்து சேதப்படுத்தியுள்ளனர்.

    இன்று காலையில் அந்த பகுதி பொதுமக்கள் வந்து பார்த்தபோது அம்மன் சிலை கல்வெட்டு கீழே சாய்ந்து கிடந்தது.

    தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அந்த பகுதியில் மதுபோதையில் கும்பல் அட்டகாசம் செய்கின்றனர். அம்மன் கல்வெட்டை சாய்த்து சேதப்படுத்திய நபர்களை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    போலீஸ் விசாரணை

    விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களை சமாதானம் செய்தனர்.மேலும் அம்மன் கல்வெட்டை சேதபடுத்திய நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர்.

    சிலை சேதபடுத்திய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×