என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பாலாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
  X

  வேலூர் பாலாற்றில் சீறிபாய்ந்து செல்லும் வெள்ளம்.

  பாலாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தண்ணீரில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை
  • 4 ஆயிரம் கன அடி நீர்வரத்து உள்ளது

  வேலூர்:

  திருப்பத்தூர், வேலூர் மாவட்டம் மற்றும் எல்லையோர ஆந்திர மாநில வனப்பகுதியில் கன மழை காரணமாக பாலாறு மற்றும் அதன் துணை ஆறுகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.

  ஆந்திர மாநில வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் புல்லூர் தடுப்பணையை கடந்து வெள்ளநீர் தமிழகத்துக்கு வந்தது.

  பாலாற்றின் துணை ஆறுகளான வாணியம்பாடி அருகே மண்ணாற்றில் இருந்து 280 கன அடி, கல்லாற்றில் இருந்து 40 கன அடியும், மலட்டாற்றில் இருந்து 1,600 கன அடியும், பள்ளிகொண்டா அகரம் ஆற்றில் இருந்து 25 கன அடியும் பாலாற்றுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

  பாலாற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றான கவுன்டன்யா ஆற்றில் இருந்து 250 கன அடிக்கு நீர் வரத்து இருந்தது. கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மோர்தானா அணை ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் கிடைக்கப்பெறும் மொத்த நீர்வரத்தும் அப்படியே ஆற்றில் உபரி நீராக வெளியேறி வருகிறது.

  வெள்ளக்கல் கானாறு, ஆணைமடுகு கானாறு, கண்டித்தோப்பு கானாறுகள் மூலம் பாலாற்றுக்கு 20 கன அடியும், பள்ளிகொண்டா ஏரி நிரம்பியுள்ளதால் அதிலிருந்து பேயாறு வழியாக பாலாற்றுக்கு 10 கன அடி நீர் வரத்தும் கிடைக்கிறது.

  இதன்மூலம் பள்ளிகொண்டா பாலாறு பாலத்தையும், வேலூர் பாலாறு பாலத்தையும் கடந்து 4,100 கன அடிக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ளப்பெருக்கை பொதுமக்கள் ஏராளமானவர்கள் ரசித்துச் செல்கின்றனர்.

  பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு தொடர்பாக வேலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ராமமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தென்மேற்கு பருவமழையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழை மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்த கனமழையால் அம்மாநில நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் நீரினால் வேலூர் மாவட்டம் பாலாற்றில் தற்போது 4 ஆயிரம் கன அடிக்கு நீர்வரத்து உள்ளது.

  இந்த சூழ்நிலையில் பாலாற்றின் இரு கரையோர மக்கள் எவரும் பாலாற்றில் இறங்கி குளிப்பது, ஆற்றில் துணிகளை துவைப்பது, விடுமுறை நாட்களில் தங்களது குழந்தைகளை ஆற்றின் அருகே விளையாட அனுமதிப்பது, குறுக்குச்சாலையாக ஆற்றை கடப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்''. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×