என் மலர்
வேலூர்
- ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்
வேலூர்:
முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் காட்பாடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
விளையாட்டு போட்டி
கூட்டத்தில் கலெக்டர் குமரவேல் பாண்டியன் பேசியதாவது;
44 -ஆவது சதுரங்க ஒலிம்பியாட் நிறைவு விழாவின்போது, முதல்வா் மு.க.ஸ்டாலின், ஒலிம்பிக் விளையாட்டுகள், கபடி, சிலம்பாட்டம் ஆகிய பாரம்பரிய விளையாட்டு களுக்காக மாநிலம், மாவட்ட அளவில் முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என அறிவித்தாா்.
அதன்படி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
42 போட்டிகள் மாவட்ட அளவிலும், 8 போட்டிகள் மண்டல அளவிலும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படும். இந்த 50 போட்டிகளுக்கும் மாநில அளவிலான இறுதிப் போட்டிகள் மே மாதம் நடத்தப்பட உள்ளன.
பள்ளிகளில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள், வீரா்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இந்தப் போட்டிகள் மூலம் சிறந்த வீரா்கள் தோ்வு செய்யப்பட்டு, மாவட்டத்தின் அணி உருவாக்கப்படும்.
மாவட்ட அணிகள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறும். மாநில போட்டிகளுக்காக ஒவ்வொரு மாவட்ட அணிக்கும் தனியாக சீருடை, பயணச் செலவு, தங்குமிடம், உணவு ஆகியன வழங்கப்படும்.
மாநிலப் போட்டிகளின் நிறைவு விழா முதல் அமைச்சர் தலைமையில் நடைபெறும்.முதல் 3 இடங்கள் பெரும் மாவட்டங்களுக்கு முதல்அமைச்சா் கோப்பை வழங்கப்படும்.
விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலா் நொய்லின்ஜான், கல்லூரி கல்வி இணை இயக்குநா் காவேரியம்மாள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
- பயனாளிகளுக்கு வீடு கட்ட, சிறுதொழில் புரிய கடன் உதவிகளை வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கூட்டுறவு நகர வங்கியின் 111வது ஆண்டு விழா பேரவை கூட்டம் நேற்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு குடியாத்தம் கூட்டுறவு நகர வங்கியின் தலைவர் எம்.பாஸ்கர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எஸ்.என். சுந்தரேசன், நிர்வாகக்குழு உறுப்பி னர்கள் எஸ்.ஐ.அன்வர் பாஷா, ஜி.ஜெயக்குமார், ஆர்.ரவிசங்கர், என். கோவிந்தராஜ், ஆர். தமிழரசி, பி.கவிதாபாபு, எஸ்.சம்பத்குமார், எஸ்.கே.சிலம்பு செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கியின் பொது மேலாளர் ஏ.எஸ். கோபிநாத் வரவேற்றார். வங்கியின் மேலாண்மை இயக்குனர் த.ரா.ராஜதுரை ஆண்டறிக்கை வாசித்தார்.
நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கியும், பயனாளிகளுக்கு வீடு கட்ட, சிறுதொழில் புரிய, கூட்டுறவு சங்கத்திற்கும், ஆட்டோ வாங்க உள்ளிட்ட பல்வேறு கடன் உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் வங்கி இயக்குனர்கள் ஏ.நடராஜன், தனக்கோடி எஸ்.எம்.தேவராஜ், நகர மன்ற உறுப்பினர் சி. என்.பாபு, முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் பேரணாம்பட்டு கங்காதரன், வி.இ.கருணா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பொது மேலாளர் கே.அருள் நன்றி கூறினார்.
- சாமி நகைகள், கிரீடம் பறிமுதல்
- வாடகை வீட்டில் தங்கி கைவரிசை
வேலூர்:
வேலூர் செல்லியம்மன் கோவில், பள்ளிகொண்டா நாகாத்தம்மன் கோவில், சாத்துமதுரை முருகன் கோவில்களில் சாமி நகைகள், கிரீடம் கொள்ளை போனது.
மேலும் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நகை பணம் கொள்ளை போனது. பல்வேறு கோவில்களில் உண்டியல் உடைத்து பணத்தை திருடிச் சென்றனர்.
திருட்டு கும்பலைப் பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
பள்ளிகொண்டா போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் வேலூர் செல்லியம்மன், சாத்துமதுரை, பள்ளிகொண்டா கோவில்களில் கொள்ளையடித்த கும்பல் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். அவர்களிடமிருந்து வேலூர் மாவட்டத்தில் கோவில்களில் திருடப்பட்ட 4½ கிலோ வெள்ளி உள்ளிட்ட நகைகள், சாமி கிரீடம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவை சேர்ந்த கும்பல் அ.கட்டுப்படி கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளை கும்பலிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த தட்டாங்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் துர்கா (வயது 17) குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் துர்காவின் தாயார்பத்மா வேலைக்கு சென்றிருந்தார். பின்னர் மீண்டும் வீடு திரும்பினார். அப்போது துர்கா வீட்டில் கூரையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் உதவியுடன் துர்காவை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் துர்கா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் உள்ளிட்டோர் வழக்கு பதிவு செய்து துர்காவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண் போலீசார் மாறுவேடத்தில் கண்காணிப்பு
- போலீசார் கடும் எச்சரிக்கை
வேலூர்:
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 31-ந் தேதி இரவு பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாடவும் அமைதியாக கொண்டாடும் பொருட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான பஸ் நிலையங்கள் ரெயில் நிலையங்கள் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் கூடுதலாக ஆன் மற்றும் பெண் காவலர்கள் சீருடைகளும் சாதாரண உடைகளிலும் நியமிக்கப்படுவார்கள் இப்பனிக்காக வேலூர் மாவட்டத்தில் 1200 போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் கேக் வெட்டி பட்டாசு வெடித்து ஒளி பெருக்கிகள் வைக்க கூடாது. மேலும் நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட யாருக்கும் அனுமதி கிடையாது. இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .இதனை உறுதி செய்யவும் அசம்பாவிதங்களை தவிர்க்கவும் மொத்தம் 60 இருசக்கர ரோந்து வாகனங்கள் மற்றும் 244 சக்கர ரோந்து வாகனங்கள் ஈடுபடுத்தப்படும்.
கேளிக்கை விடுதிகளில் இரவு நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சட்டத்திற்கு உட்பட்டு விதிமீறல்கள் இன்றி நடத்தப்பட வேண்டும்.
மாவட்டத்திலுள்ள சுங்கச்சாவடிகள் காவல் சோதனைச் சாவடிகள் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பிற முக்கிய இடங்களில் வாகன தணிக்கை செய்து மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
அதிவேகமாகவும் மோட்டார் பந்தயத்தில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற அத்துமீறல்களை தவிர்க்க மாவட்டத்தில் 58 தடுப்புகள் அமைத்து வாகன சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் அவர்கள் வெளிநாட்டிற்கு செல்ல வேலை வாய்ப்பு பெற காவல்துறை மூலமாக நன்னடத்தைச் சான்றிதழ் பெற பரிந்துரை செய்ய இயலாது.
காவல்துறையினரின் அறிவுரைகளை கடைப்பி டித்து அசம்பாவிதம் இல்லாத மற்றும் விபத்து இல்லாத புத்தாண்டை கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சினிமா பணியில் போலீசார் மடக்கி பிடித்தனர்
- வேலூரில் பரபரப்பு
வேலூர்:
வேலூர் கோட்டை அருகே நேற்று இரவு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சினிமா பாணியில் மடக்கினர்
இரவு 2 மணிக்கு பைக்கில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சினிமா காட்சி போல அவர்களை விரட்டி சென்றனர். அண்ணா சாலையில் வாலிபர்கள் வந்த பைக்கை போலீசார் மடக்கினர்.
அப்போது அதிலிருந்த வாலிபர் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பைக் ஓட்டி வந்த மற்றொரு வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சிறுமூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் (வயது 28) தப்பி ஓடியவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என தெரியவந்தது.
சந்தன மரங்கள் பறிமுதல்
அவர்கள் வந்த பைக்கில் 20 கிலோ எடை கொண்ட 6 சந்தனமரக்கட்டைகள் இருந்தன. மேலும் சந்தன மரங்களை வெட்ட பயன்படுத்தும் கத்தி 2 ரம்பம் ஆகியவை இருந்தன.
பைக்குடன் அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வாலிபர் ராஜசேகர் மற்றும் பறிமுதல் செய்த சந்தன கட்டைகள் பைக் ஆகியவற்றை வேலூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே மணிகண்டன் சந்தன மரங்களை ஒரு கும்பலிடம் வாங்கி வைத்துவிட்டு என்னை அழைத்தார். நான் பைக்கில் வந்து அவரை அழைத்துக் கொண்டு ஆரணி நோக்கி சென்றேன் வேறு எதுவும் எனக்கு தெரியாது என ராஜசேகர் கூறியுள்ளார். ஆனாலும் அவர்கள் கத்தி ரம்பம் ஆகியவை வைத்திருந்ததால் வேலூர் பகுதியில் இருந்து சந்தன மரங்களை வெட்டி கடத்தியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வேலூர் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜி.வி.சம்பத் தொடங்கி வைத்தார்
- கள்ளக்குறிச்சி சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது
வேலூர்:
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் கட்டிட பொறியாளர்களுக்கான புரோ லீக் ( ஐ.சி.பி.எல்.)என்ற கிரிக்கெட் போட்டி தொடர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வேலூர் சி.எம்.சி. மைதானத்தில் 2 நாட்கள் நடத்தப்பட்டது. போட்டிகளை வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜி.வி.சம்பத் தொடங்கி வைத்தார். இதில் 6 அணிகள் கலந்து கொண்டன.
கள்ளக்குறிச்சி சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் ரீஜியன் 5 அணியை வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இதில் கட்டிட பொறியாளர்கள் அமைப்பு நிர்வாகிகள், இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகத்தைச் சேர்ந்த சி.புகழேந்தி, நாகசுந்தரம், ஜி.சரவணமூர்த்தி, எம்.டி.பாலச்சந்தர், ஜெ.சிவசக்தி, பி முரளிதரன். ஏ.கோகுல தாஸ், ஆர்.சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பயனாளிகளுக்கு வீடு கட்ட, சிறுதொழில் புரிய கடன் உதவிகளை வழங்கினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கூட்டுறவு நகர வங்கியின் 111வது ஆண்டு விழா பேரவை கூட்டம் நேற்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு குடியாத்தம் கூட்டுறவு நகர வங்கியின் தலைவர் எம்.பாஸ்கர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எஸ்.என். சுந்தரேசன், நிர்வாகக்குழு உறுப்பி னர்கள் எஸ்.ஐ.அன்வர் பாஷா, ஜி.ஜெயக்குமார், ஆர்.ரவிசங்கர், என். கோவிந்தராஜ், ஆர். தமிழரசி, பி.கவிதாபாபு, எஸ்.சம்பத்குமார், எஸ்.கே.சிலம்பு செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கியின் பொது மேலாளர் ஏ.எஸ். கோபிநாத் வரவேற்றார். வங்கியின் மேலாண்மை இயக்குனர் த.ரா.ராஜதுரை ஆண்டறிக்கை வாசித்தார்.
நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கியும், பயனாளிகளுக்கு வீடு கட்ட, சிறுதொழில் புரிய, கூட்டுறவு சங்கத்திற்கும், ஆட்டோ வாங்க உள்ளிட்ட பல்வேறு கடன் உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் வங்கி இயக்குனர்கள் ஏ.நடராஜன், தனக்கோடி எஸ்.எம்.தேவராஜ், நகர மன்ற உறுப்பினர் சி. என்.பாபு, முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் பேரணாம்பட்டு கங்காதரன், வி.இ.கருணா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பொது மேலாளர் கே.அருள் நன்றி கூறினார்.
- உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த தட்டாங்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் துர்கா (வயது 17) குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் துர்காவின் தாயார்பத்மா வேலைக்கு சென்றிருந்தார். பின்னர் மீண்டும் வீடு திரும்பினார். அப்போது துர்கா வீட்டில் கூரையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் உதவியுடன் துர்காவை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் துர்கா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் உள்ளிட்டோர் வழக்கு பதிவு செய்து துர்காவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சினிமா பணியில் போலீசார் மடக்கி பிடித்தனர்
- வேலூரில் பரபரப்பு
வேலூர்:
வேலூர் கோட்டை அருகே நேற்று இரவு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இரவு 2 மணிக்கு பைக்கில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சினிமா காட்சி போல அவர்களை விரட்டி சென்றனர். அண்ணா சாலையில் வாலிபர்கள் வந்த பைக்கை போலீசார் மடக்கினர்.
அப்போது அதிலிருந்த வாலிபர் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பைக் ஓட்டி வந்த மற்றொரு வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சிறுமூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் (வயது 28) தப்பி ஓடியவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என தெரியவந்தது.
அவர்கள் வந்த பைக்கில் 20 கிலோ எடை கொண்ட 6 சந்தனமரக்கட்டைகள் இருந்தன. மேலும் சந்தன மரங்களை வெட்ட பயன்படுத்தும் கத்தி 2 ரம்பம் ஆகியவை இருந்தன.
பைக்குடன் அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வாலிபர் ராஜசேகர் மற்றும் பறிமுதல் செய்த சந்தன கட்டைகள் பைக் ஆகியவற்றை வேலூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே மணிகண்டன் சந்தன மரங்களை ஒரு கும்பலிடம் வாங்கி வைத்துவிட்டு என்னை அழைத்தார். நான் பைக்கில் வந்து அவரை அழைத்துக் கொண்டு ஆரணி நோக்கி சென்றேன் வேறு எதுவும் எனக்கு தெரியாது என ராஜசேகர் கூறியுள்ளார். ஆனாலும் அவர்கள் கத்தி ரம்பம் ஆகியவை வைத்திருந்ததால் வேலூர் பகுதியில் இருந்து சந்தன மரங்களை வெட்டி கடத்தியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வேலூர் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விநோதமாக நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் கன்றுக்குட்டிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
- பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறினர்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள பென்னாத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் மகன்கள் உதயகுமார் (வயது 25), சூரியா (20) விவசாயி. இவர்கள் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார்.
இதில் ஜூனியர் வேலூர் பைபாஸ் என்னும் அழைக்கப்படும் ஒரு வயதான கன்றுக்குட்டியை வளர்த்து வருகின்றனர். இந்தகுட்டிக்கு நேற்று பிறந்தநாள்.
இதனை வெகுவிமரிசையாக கொண்டாட உதயகுமார், சூர்யா இருவரும் முடிவு செய்தனர்.
இதற்காக உறவினர்கள், தெரிந்தவர்களை பிறந்தநாள் விழாவுக்கு அழைத்தனர். வீட்டில் பிரமாண்டமாக அலங்காரம் செய்தனர். மேலும் கன்று குட்டியை குளிப்பாட்டி அலங்காரம் செய்து அழைத்து வந்தனர்.
உறவினர்கள் ஊர் பொதுமக்கள் எல்லோரும் நேற்று இவர்கள் வீட்டுக்கு வர இந்த மாட்டின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி விருந்து வைத்து கொண்டாடினர். விநோதமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் கலந்து கொண்டு, கன்றுக்குட்டிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறினர். கிராமங்களில் பொதுவாக பிறந்தநாளை கொண்டாடுவது இல்லை. கோவில்களுக்கு சென்று சாமி கும்பிடுவதோடு சரி. ஆனால், அதே கிராமத்தில் ஒரு கன்றுகுட்டிக்கு இப்படி பிரம்மாண்டமாக பிறந்தநாள் விழா எடுத்ததை ஊரே நெகிழ்ச்சியுடன் பார்த்தது. அவர்கள் வீட்டுக்குச் சென்று மனதார வாழ்த்தி சென்றனர்.
- கருணை அடிப்படையில் பணி நிரந்தரம்
- பாதிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்
வேலூர்:
வேலூர் அடுத்த மேல்மாயில் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 24). இவர் வேலூர் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் மின் கம்பத்தில் பகுதி நீக்கிய போது திடீரென மின்சாரம் பாய்ந்து அவரது வலது கை துண்டிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குமாரை கருணை அடிப்படையில் பணி நிரந்தரம். செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்.
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின் படி தமிழகம் முழுவதும் உள்ள ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.