என் மலர்
வேலூர்
- வேலூர், திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் செய்யப்பட்டது
- தாய்மார்களுக்கு டாக்டர்கள் வாழ்த்து
வேலூர்:
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் சுகப்பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தைகள் பிறக்கின்றன.
2023 ஆங்கில புத்தாண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது.
புத்தாண்டு பிறப்பு முதல் நாளான நேற்று மாலை 5 மணி வரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 குழந்தைகள் பிறந்தன.
குழந்தைகள் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு டாக்டர்கள் நர்சுகள் ஆஸ்பத்திரி ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் தினமும் 3-க்கும் மேற்பட்ட கர்பிணிகளுக்கு பிரசவம் நடக்கிறது. ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை 12. 1 மணி முதல் மாலை 6 மணி வரை 5 ஆண் 3 பெண் குழந்தைகள் என மொத்தம் 8 குழந்தைகள் பிறந்தன. குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருமால் பாபு, மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதி திலகம், குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் மற்றும் டாக்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
நேற்று பிறந்த இந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு தினத்தில் பிறந்தநாள் கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நல பணி திட்ட மாணவர்கள் சார்பில் சிறப்பு முகாம் குடியாத்தம் அடுத்த மேல்முட்டுக்கூர் ஊராட்சி கல்மடுகு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒரு வார காலம் நடைபெற்றது.
இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. நிறைவிழாவுக்கு மேல்முட்டுக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார்.ஒன்றிய குழு உறுப்பினர்கள் செல்விசிவகுமார், சூரியகலாமனோஜ்குமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நித்யாவாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆனந்திமுருகானந்தம் அரிமா சங்க நிர்வாகி பொன்னம்பலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட நிர்வாகி முருகானந்தம், திமுக மாவட்ட பிரதிநிதி பாபு, அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி உள்பட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
- ரூ.50 ஆயிரம் வசூல்
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாடக்கூடாது. மது விருந்து கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை போதையில் ஓட்டும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
புத்தாண்டையொட்டி நேற்று இரவு 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 58 இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் விதி மீறிய வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
பள்ளிகொண்டா சுங்கசாவடியில் வேலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது குடிபோதையில் வாகனங்களை ஓட்டி வந்ததாக 50 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். ரூ.50 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது.
- வாகனங்கள் உள்ளே செல்ல தடை
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
வேலூர்:
வேலூர் கோட்டையில் புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை இன்று அதிகமாக இருந்தது.
கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். குடும்பம் குடும்பமாக கோவிலுக்கு வந்திருந்தனர். கோட்டை முழுவதும் மக்கள் நிறைந்து காணப்பட்டனர். மதில் சுவர் பகுதியில் சுற்றுலா பயணிகள் சென்று பொழுதை கழித்தனர். அருங்காட்சியகத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
கோட்டையில் குதிரை சவாரி களைகட்டியது. சிறுவர், சிறுமிகள் குதிரைகளிலும், குதிரை பூட்டப்பட்ட வண்டியில் சென்று குதூகலித்தனர்.
கோட்டைக்கு வெளியே உள்ள பூங்காவிலும் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்திருந்து பொழுதை கழித்தனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்ததால் நுழைவு வாயில் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் கோட்டைக்குள் இருந்து வாகனங்கள் வெளியே வர முடியாமல் திணறின.
மதியம் 12 மணிக்கு மேல் கோட்டைக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. அந்த வாகனங்கள் அனைத்தும் அண்ணா சாலையில் அணிவகுத்து நின்றன. கோட்டை பூங்கா மற்றும் காந்தி சிலை பகுதிகளில் விளையாட்டு பொம்மைகள் திண்பண்டங்கள் விற்பனை களை
கட்டியது. கோவில் மற்றும் நுழைவு பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அண்ணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலிலும் சாமி தரிசனம் ஏராளமான பக்தர்கள் செய்தனர். அங்கு திருப்பதி தேவஸ்தான காலண்டர்கள் மற்றும் டைரி விற்பனை செய்யப்பட்டது. அதனை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
- மதுபானங்கள் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டு இருந்தன
- இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்து புத்தாண்டை கொண்டாடினர்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கே இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்து, 'கேக்' வெட்டி புத்தாண்டை கொண்டாடினர். மதுபான பிரியர்கள் புத்தாண்டு தினத்தில் மதுபானத்தைக் குடித்து உற்சாகமாக காணப்பட்டனர்.
வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை நிர்வாக வசதிக்காக டாஸ்மாக் நிர்வாகம் வேலூர், அரக்கோணம் என இரு மாவட்டங்களாக செயல்பட்டு வருகிறது. வேலூர் நிர்வாக மாவட்டத்தில் உள்ள வேலூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் 123 கடைகள் உள்ளன.
டாஸ்மாக் கடைகளில் புத்தாண்டு தினத்தின்போது மது விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனைத்து வகையான ரம், விஸ்கி, பிராந்தி போன்ற 'ஹாட்' வகைகளும், பீர் வகைகளும் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டு இருந்தன.
மதுபானங்களை வாங்க மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். இதனால் மது விற்பனை களை கட்டியது. வேலூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று அதிகளவில் பீர் மற்றும் ஹார்ட் வகைகள் விற்பனையானது.
நேற்று ஒரே நாளில் வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.4.28 கொடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.
ராணிப்பேட்டையில் ரூ.2.76 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
- குடியாத்தத்தில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூரில் ஆங்கில புத்தாண்டையொட்டி கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். நள்ளிரவு 12 மணி ஆனதும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. செல்போன்களில் வாட்ஸ் அப் பேஸ்புக் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
வேலூர் பழைய பஸ் நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே காவல்துறை சார்பில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு கேக்குகளை வெட்டினர்.
மேலும் பொதுமக்களுக்கு கேக் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பொதுமக்களும் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசாருக்கு வாழ்த்துக்களை கூறினர். பொதுமக்கள் பலர் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுடன் செல்போனில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கர், குணசேகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
காட்பாடி ரெயில் நிலையத்தில் நடந்த புத்தாண்டையொட்டி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு கேக் வெட்டினார்.
டி.எஸ்.பி. பழனி, ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே போலீசார் சார்பில் புத்தாண்டு நிகழ்ச்சி நடந்தது இதில் போலீஸ் பிரிண்டர் ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது இரவு பகல் பாராமல் பணியாற்றும் போலீசாருக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.வரும் ஆண்டில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சேகர், டி.எஸ்.பி ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் லட்சுமி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், கவுன்சிலர் அரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பஸ் நிலையங்களில் பக்தர்களை சிரமம் இல்லாமல் ஏற்றி அனுப்புவதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.
- பயணிகள் எளிதில் டிக்கெட் பெறும் வகையில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
வேலூர்:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.
இதனையொட்டி திருப்பதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஊர்களில் இருந்து திருப்பதிக்கு 354 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதில் தமிழகத்தில் சென்னை மற்றும் வேலூரில் இருந்து கூடுதலாக 25 சிறப்பு பஸ்கள் திருப்பதிக்கு இயக்கப்பட உள்ளது.
இதற்காக கூடுதலாக போக்குவரத்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பதி மத்திய பஸ் நிலையம், ரெயில் நிலையம், திருமலையில் உள்ள ராம் பகிதா விடுதி வளாகம், பாலாஜி பஸ் நிலையம் திருப்பதி ஏழு குண்டல வாடு பஸ் நிலையங்களில் கூடுதலாக மேலாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
பஸ் நிலையங்களில் பக்தர்களை சிரமம் இல்லாமல் ஏற்றி அனுப்புவதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். மேலும் பயணிகள் எளிதில் டிக்கெட் பெறும் வகையில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
சிறப்பு பஸ்கள் வைகுண்ட ஏகாதசி முதல் தொடர்ந்து 5 நாட்கள் வரை இயக்கப்படும். பக்தர்கள் வருகை அதிகரித்ததால் அதற்கு ஏற்ப பஸ்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பெற்றோர்களுக்கு அறிவுரை
- துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சியில் பெண் குழந்தைகள் வன்புணர்வு தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் சமூக பாதுகாவலர் வசந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல் பற்றியும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் போது குட் டச், பேட் டச் பற்றி பெற்றோர்களுக்கு விளக்கமளித்தார்.
அதேபோல், பெற்றோர்களும் பெண் பிள்ளைகளிடம் அன்புடன் நடந்து கொண்டு நாள்தோறும் அவர்களின் மனநிலை பற்றி தெரிந்து கொள்ளவது மிகவும் அவசியம் என்றார்.
நிகழ்ச்சியில், மாணவர்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், அனைவருக்கும் விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
- 4 பவுன் நகை, பைக் பறிமுதல்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விநாயகம் இவரது மனைவி சரஸ்வதி (வயது 61). இவர், நேற்று முன்தி னம் விருபாட்சிபுரத்தில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக பஸ்சில் சென்றார்.
பஸ்சிலிருந்து இறங்கிய போது அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் செயின் மாயமாகி இருந்தது. பஸ்சில் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பஸ்சில் பயணித்தபோது மர்ம நபர்கள் அவரது செயினை திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் செய்தார்.
இதேபோல், வேலூர் துத்திப்பட்டு எடப்பாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் கண் ணன். இவரது மனைவி ஜீவா (65). இவர், நேற்று முன்தினம் வேலப்பாடியில் இருந்து துத்திப்பட்டு செல்வதற் காக அரசு பஸ்சில் பயணித்தார். பஸ்சிலிருந்து இறங்கியபோது அவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி மாயமாகி இருந்தது. இதுகுறித்து பாகாயம் போலீசில் ஜீவா புகார் செய்தார்.
இதுதொடர்பாக பாகாயம் போலீசார் தனித்தனியே வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாகாயம் போலீசார், விருபாட்சிபுரம் பகுதி யில் ரோந்து சென்ற போது, சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர் காட்பாடி வண்டறந்தாங்கல் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கவுதம் (24) என்பதும், பஸ்சில் மூதாட்டிகளிடம் நகைகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து கவுதமை போலீசார் கைது செய்து, அவரிட மிருந்து 4 பவுன் நகை, மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளிகொண்டா பேரூராட்சி கூட்டம் நடந்தது
- கவுன்சிலர்கள் எராளமானோர் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா மற்றும் ஒடுகத்தூர் ஆகிய இரண்டு பேரூராட்சிகளில் ஒவ்வொரு மாதமும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் கட்டமைப்புகள் மேற்கொள்வது தொடர்பாக கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, பள்ளிகொண்டா பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது . கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சுபபிரியா குமரன் மற்றும் செயல் அலுவலர் உமாராணி ஆகியோர் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு துணைத் தலைவர் வசீம்அக்ரம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர் சந்தோஷ் முக்கிய தீர்மானங்களை வாசித்தார் அதில் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளிகொண்டா பேரூராட்சியில் ரூ.58.30 லட்சம் ஒதுக்கீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பது, ரூ.30.50 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைப்பது, ரூ.2.81 லட்சத்தில் புதிய கல்வெர்ட் அமைப்பது எனவும்.
ஒட்டுமொத்தமாக இந்த பணிகளை ரூ.91.61 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்வது என 18 வார்டு கவுன்சிலர்களின் ஒப்புதலுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் மின்விளக்கு, குடிநீர் வசதி, சுகாதார வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகள் செய்து முடிப்பது எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
இதேபோல ஒடுகத்தூர் பேரூராட்சியில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் 15 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் தற்போது நடந்து வரும் திட்ட பணிகள் குறித்து விவாதித்தனர்.
அனைத்து வார்டுகளிலும் தேவைப்படும் அடிப்படை வசதிகளான சாலை, மினி டேங், இலவச வீடு வழங்குதல், நிலுவையில் உள்ள ஈமச்சடங்கு பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- மாணவிக்கு பாராட்டு சான்றிதழ் கேடயம் வழங்கப்பட்டது
- கலெக்டர் தகவல்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத்திறனாளிகள் நல வாரிய சமூக பாதுகாப்பு திட்டம், முதலமைச்சரின் விரிவாக மருத்துவ காப்பீடு திட்டம், வங்கி கடன் மானியம், 6 வயதுடைய மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான ஆரம்ப கால பயிற்சி மையங்கள் செவிதிறன் குறைவு உடைய குழந்தைகளுக்கான பயிற்சி மையம், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆரம்ப கால பயிற்சி மையம் உள்ளிட்ட திட்டங்கள் மாற்றுத்திறனாளி நலத்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதலில் 3-ம் இடம் பிடித்து சாதனை செய்த ஹோலி கிராஸ் செவித்திறன் குறைவு உடையோர் பள்ளி மாணவிக்கு பாராட்டு சான்றிதழ் கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் 5579 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9 கோடியே 35 லட்சத்து 84 ஆயிரத்து 769 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
- விவசாயிகள் வேதனை
- நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டத்தில் தொடர் கன மழையால் உள்ள ஏரி, குளம், குட்டைகள் என அனைத்து நீர்நிலை பகுதிகள் தற்போது வரை நிரம்பி வருகிறது.
இந்நிலையில், ஒடுகத்தூர் அடுத்த குச்சிபாளையம் கிராம பகுதிகளில் உள்ள பெரிய ஏரிக்கு மலைப்பகுதியில் ஏற்ப்பட்டுள்ள நீருற்று பிச்சாநத்தம், கீழ்கொத்தூர், வரதலம்பட்டு, கரடிகுடி, தேவிசெட்டிகுப்பம் போன்ற கிராமங்கள் வழியாக கானாற்று படுகையில் இருந்து தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த, ஒரு வார காலமாக இந்த ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் ஏரி முழு கொள்ளளவு எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால், ஏரி அருகே உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்து. அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகியுள்ளது.
மேலும் பயிரிடப்பட்டு 3 மாதங்கள் பாதுகாத்து வந்த பயிர்கள் அருவடை நேரத்தில் நீரில் மூழ்க்கி இருப்பதைப் பார்த்து விவசாயிள் மன உளைச்சல் ஏற்ப்பட்டுள்ளது.
மேலும் சேதமான பயிர்களுக்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.






