என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஸ்சில் பெண்களிடம் செயின் பறித்த வாலிபர் கைது
- 4 பவுன் நகை, பைக் பறிமுதல்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விநாயகம் இவரது மனைவி சரஸ்வதி (வயது 61). இவர், நேற்று முன்தி னம் விருபாட்சிபுரத்தில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக பஸ்சில் சென்றார்.
பஸ்சிலிருந்து இறங்கிய போது அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் செயின் மாயமாகி இருந்தது. பஸ்சில் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பஸ்சில் பயணித்தபோது மர்ம நபர்கள் அவரது செயினை திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் செய்தார்.
இதேபோல், வேலூர் துத்திப்பட்டு எடப்பாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் கண் ணன். இவரது மனைவி ஜீவா (65). இவர், நேற்று முன்தினம் வேலப்பாடியில் இருந்து துத்திப்பட்டு செல்வதற் காக அரசு பஸ்சில் பயணித்தார். பஸ்சிலிருந்து இறங்கியபோது அவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி மாயமாகி இருந்தது. இதுகுறித்து பாகாயம் போலீசில் ஜீவா புகார் செய்தார்.
இதுதொடர்பாக பாகாயம் போலீசார் தனித்தனியே வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாகாயம் போலீசார், விருபாட்சிபுரம் பகுதி யில் ரோந்து சென்ற போது, சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர் காட்பாடி வண்டறந்தாங்கல் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கவுதம் (24) என்பதும், பஸ்சில் மூதாட்டிகளிடம் நகைகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து கவுதமை போலீசார் கைது செய்து, அவரிட மிருந்து 4 பவுன் நகை, மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






