என் மலர்
உள்ளூர் செய்திகள்

5,579 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9.35 கோடியில் நலத்திட்ட உதவி
- மாணவிக்கு பாராட்டு சான்றிதழ் கேடயம் வழங்கப்பட்டது
- கலெக்டர் தகவல்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத்திறனாளிகள் நல வாரிய சமூக பாதுகாப்பு திட்டம், முதலமைச்சரின் விரிவாக மருத்துவ காப்பீடு திட்டம், வங்கி கடன் மானியம், 6 வயதுடைய மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான ஆரம்ப கால பயிற்சி மையங்கள் செவிதிறன் குறைவு உடைய குழந்தைகளுக்கான பயிற்சி மையம், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆரம்ப கால பயிற்சி மையம் உள்ளிட்ட திட்டங்கள் மாற்றுத்திறனாளி நலத்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதலில் 3-ம் இடம் பிடித்து சாதனை செய்த ஹோலி கிராஸ் செவித்திறன் குறைவு உடையோர் பள்ளி மாணவிக்கு பாராட்டு சான்றிதழ் கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் 5579 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9 கோடியே 35 லட்சத்து 84 ஆயிரத்து 769 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.






