என் மலர்
நீங்கள் தேடியது "Pilgrims throng the forts"
- வாகனங்கள் உள்ளே செல்ல தடை
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
வேலூர்:
வேலூர் கோட்டையில் புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை இன்று அதிகமாக இருந்தது.
கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். குடும்பம் குடும்பமாக கோவிலுக்கு வந்திருந்தனர். கோட்டை முழுவதும் மக்கள் நிறைந்து காணப்பட்டனர். மதில் சுவர் பகுதியில் சுற்றுலா பயணிகள் சென்று பொழுதை கழித்தனர். அருங்காட்சியகத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
கோட்டையில் குதிரை சவாரி களைகட்டியது. சிறுவர், சிறுமிகள் குதிரைகளிலும், குதிரை பூட்டப்பட்ட வண்டியில் சென்று குதூகலித்தனர்.
கோட்டைக்கு வெளியே உள்ள பூங்காவிலும் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்திருந்து பொழுதை கழித்தனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்ததால் நுழைவு வாயில் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் கோட்டைக்குள் இருந்து வாகனங்கள் வெளியே வர முடியாமல் திணறின.
மதியம் 12 மணிக்கு மேல் கோட்டைக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. அந்த வாகனங்கள் அனைத்தும் அண்ணா சாலையில் அணிவகுத்து நின்றன. கோட்டை பூங்கா மற்றும் காந்தி சிலை பகுதிகளில் விளையாட்டு பொம்மைகள் திண்பண்டங்கள் விற்பனை களை
கட்டியது. கோவில் மற்றும் நுழைவு பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அண்ணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலிலும் சாமி தரிசனம் ஏராளமான பக்தர்கள் செய்தனர். அங்கு திருப்பதி தேவஸ்தான காலண்டர்கள் மற்றும் டைரி விற்பனை செய்யப்பட்டது. அதனை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.






