என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டு நலப்பணி திட்டம்"

    • பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நல பணி திட்ட மாணவர்கள் சார்பில் சிறப்பு முகாம் குடியாத்தம் அடுத்த மேல்முட்டுக்கூர் ஊராட்சி கல்மடுகு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒரு வார காலம் நடைபெற்றது.

    இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. நிறைவிழாவுக்கு மேல்முட்டுக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார்.ஒன்றிய குழு உறுப்பினர்கள் செல்விசிவகுமார், சூரியகலாமனோஜ்குமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நித்யாவாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆனந்திமுருகானந்தம் அரிமா சங்க நிர்வாகி பொன்னம்பலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட நிர்வாகி முருகானந்தம், திமுக மாவட்ட பிரதிநிதி பாபு, அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி உள்பட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

    • தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.
    • நேரு யுவகேந்திரா துணை இயக்குநர் திருநீலகண்டன் தலைமை தாங்கினார்.

    சுவாமிமலை:

    விவேகானந்தா கலாம் பவுண்டேஷன், கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவை இணைந்து "எனது மண், எனது தேசம்" விழிப்புணர்வு நிகழ்ச்சி கும்பகோணத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியல் நேரு யுவகேந்திரா துணை இயக்குநர் திருநீலகண்டன் தலைமை தாங்கினார். மத்திய மக்கள் தொடர்பக சென்னை மண்டல இயக்குனர் காமராஜர், கல்லூரி முதல்வர் யூஜின் அமலா, கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தராஜ், பூங்குழலி ஆகியோர் முன்னிலை வகித்தார்.விழாவை விவேகானந்தா கலாம் பவுண்டேசன் தலைவர் கணேசன் ஒருங்கிணைத்தார். இதில் கும்பகோணம் ரெட்கிராஸ் துணை தலைவர் ரோசரியோ, திருச்சி மக்கள் தொடர்பு அலுவலர்கள் தேவி பத்மநாபன், ரவீந்திரன், ஜெயகணேஷ், கும்பகோணம் ஒன்றிய வட்டார ஒருங்கிணைப்பா ளர் துரை.கார்த்திகேயன், கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மற்றும் என்.எஸ்.எஸ்., ஒய்.ஆர்.சி. மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×