என் மலர்tooltip icon

    வேலூர்

    • காலை, மாலை உணவு வழங்கப்படுகிறது
    • சிறைத்துறை அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம்.வானில் தோன்றும் பிறையை வைத்து ரம்ஜான் நோன்பு தொடங்கப்படுகிறது.

    இந்தாண்டு ரம்ஜான் நோன்பு நேற்று தொடங்கியது. இதனை முன்னிட்டு அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெறுகிறது.

    வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் 62 பேர் ரம்ஜான் நோன்பு தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இதையடுத்து அவர்களுக்கு நோன்பு இருக்க சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது.

    இதையடுத்து, இன்று முதல் 62 கைதிகள் ரம்ஜான் நோன்பை தொடங்கி யுள்ளனர். இவர்களுக்கு அதிகாலை 5 மணிக்கு உணவும், மாலை 6 மணிக்கு மேல் உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் ஜாப்பேட்டை, ஜியாவுதீன் தெருவை சேர்ந்த மஸ்தான் இவருடைய மகன் இர்பான் (வயது 25) இவர் கட்டிட மேஸ்திரி.

    நேற்று முன்தினம் இரவு வேலூரில் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்று பைக்கில் பொய்கை அடுத்த மோட்டூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனி எதிரே வந்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு இர்பானை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றுவது சிரமமாக இருந்து
    • ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் நன்றி

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பி நாள் தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால், கடந்த சில நாட்களாக மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் ஓடியது. மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றுவது சிரமமாக இருந்து வந்தது.

    இதனால், பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல்கள் இருந்து வந்தது. எனவே சேதமடைந்த குடிநீர் குழாய்களை உடனே சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தற்போது, கோடை காலம் தொடங்கி விட்டதால் குடிநீர் பற்றாகுறை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா உமாபதி முன்னி லையில் சேதமடைந்த குழாய்கள் துரிதமாக நேற்று சீரமைக்கப்பட்டன.

    இதனால் பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்க்கு நன்றி தெறிவித்து மகிழ்ந்தனர்.

    • காளை விடும் விழா நடந்தது
    • 300 காளைகள் பங்கேற்றன

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே எர்த்தாங்கல் கிராமத்தில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருவிழாவை முன்னிட்டு 49-ம் ஆண்டு காளை விடும் விழா நடைபெற்றது.

    இதில் குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் சித்தூர், பங்காருபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

    காளை ஓடும் வீதிகளின் இரு பகுதியிலும் தடுப்பு கம்புகள் அமைக்க ப்பட்டிருந்தன. விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்தனர்.தொடர்ந்து போட்டிகளில் பங்கு பெற்ற காளைகள் சீறிப் பாய்ந்து ஓடின. நிகழ்ச்சியில் குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், குடியாத்தம் தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    காளைவிடும் விழா விழாவில் ஆயிரக்க ணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆரவாரம் செய்தனர். 

    விழாவில் காளைகள் முட்டியதில் 13 பேர் காயமடைந்தனர். அவர்களை அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.பலத்த காயமடைந்த ஒருவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகி ச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    வெற்றி பெற்ற 72 காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    விழாவில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் உள்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், எர்த்தாங்கல் ஊராட்சி பொதுமக்கள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

    • கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம்
    • துப்புரவு பணிக்கு கூடுதலாக 5 பேர் நியமனம்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சுபபிரியா குமரன் தலைமை தாங்கினார், செயல் அலுவலர் உமாராணி முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு துணைத் தலைவர் வசீம்அக்ரம் அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர் சந்தோஷ் முக்கிய தீர்மானங்களை வாசித்தார். அதில் தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளிகொண்டா பேரூராட்சியில் ரூ.58.30 லட்சம் ஒதுக்கீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பது, ரூ.30.50 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைப்பது, ரூ.2.81 லட்சத்தில் புதிய கல்வெர்ட் அமைப்பது எனவும்.

    ஒட்டுமொத்தமாக இந்த பணிகளை ரூ.91.61 லட்சம் நீதி ஒதுக்கீட்டில் ஒப்பந்ததாரருக்கு பணி உத்தரவு வழங்க 18 வார்டு கவுன்சிலர்களின் ஒப்புதலுடன் ஒருமனதாக தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.

    பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் மழைநீர் வடிகால் அமைத்தல், எரி மேடை அமைத்தல், தெரு விளக்கு அமைத்தல், குடிநீர் வசதிகள், சாலை அமைத்தல், சமுதாயக்கூடம், பொது கழிப்பிடம், கல்வெர்ட் அமைத்தல் போன்ற அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

    இப்பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகளில் 120க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன இதில் சுகாதார பணிகளை மேற்கொள்ள துப்புரவு பணியாளர்கள் பணியிடங்கள் 20 நபர்கள் மட்டுமே உள்ளனர்.

    இதனால் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளதால் தற்போது தற்காலிகமாக தூய்மை பணி மேற்கொள்ள 5 நபர்கள் பணி அமர்த்திகொள்ள கவுன்சி லர்களின் ஒப்புதலுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • காட்பாடி ரெயில் நிலையத்தில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கம், குரு, ஆர்.கே அறக்கட்டளை, கோரமண்டல், கேலக்சி லயன் சங்கம் இணைந்து காட்பாடி ரெயில் நிலையத்தில் பணி செய்து வரும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு இலவச பொது மருத்துவ முகாம் இன்று காட்பாடி ெரயில் நிலைய சுமை இறக்கும் மையத்தில் நடைபெற்றது.

    மாநகராட்சி துணை மேயர் எம்.சுனில்குமார் 1-வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். முன்னதாக ரமேஷ் குமார் ஜெயின் வரவேற்றார்.

    கோரமண்டல் பெர்டிலைசர் நிறுவன மண்டல மேலாளர் என். சங்கர், அலுவலர் கோபி, ஆர்.கே.அறக்கட்டளை இயக்குநர் ஆர்.ராதா கிருஷ்ணன், ரெட்கி ராஸ் துணைத்தலைவர்கள் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி, ருக் ஜி ராஜேஷ் குமார், ஜனசிக்க்ஷா நர்சிங்கல்லூரி முதலவர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வேலூர் மாநகராட்சியின் 5வது வார்டு உறுப்பினர் சித்ரா மகேந்திரன், மேலாண்மைக்குழு உறுப்பினர்டாக்டர் வீ.தீனபந்து, ஜி.செல்வம், எஸ்.ரமேஷ்குமார்ஜெயின், டி.செல்வமணி, ஜெ.கஜேந்திரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் எல்.நவீன், ஆர்.சுடரொளியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 250 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

    • உழவர் சந்தை விரைவில் இடமாற்றம்
    • விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் தகவல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைவு தீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, வன அலுவலர் பிரின்ஸ் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    வேலூர் மாவட்டத்தில் வனவிலங்குகளால் ஏற்படும் இழப்பீடுகளுக்கு வனத்துறை சார்பில் முறையாக இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

    அப்போது வனத்துறை அலுவலர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விவசாயி ஒருவர் அதிகாரிகளை பார்த்து கைநீட்டி பேசினார்.

    இதனை கண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அதிகாரிகளை பார்த்து கைநீட்டிய விவசாயியை வெளியேறும்படி கூறினார்.அவருக்கு ஆதரவாக மற்ற விவசாயிகளும் அரங்கத்தை விட்டு வெளியே செல்வோம் என தெரிவித்தனர்.

    பின்னர் விவசாயிகள் சார்பில் வருத்தம் தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஒடுகத்தூர் அணைக்கட்டு பகுதியில் காட்டு எருமைகள் தொல்லை அதிக அளவில் உள்ளது.இதனை கட்டுப்படுத்த வேண்டும். குடியாத்தம் பேரணாம்பட்டு பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் தொல்லை நீடித்து வருகிறது.

    அதனை கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. யானைகள் வரும்போது வனத்துறையினர் உடனடியாக வருவதில்லை.

    சென்னை பெங்களூர் விரைவு சாலை திட்டம் மேல் பாடி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த சாலைக்காக நீர் நிலைகள் மூடப்படுகிறது. கால்வாய்கள் அடைக்கப்படுகின்றன.

    அதனை தடுத்து நிறுத்த வேண்டும் தற்போது கோடை காலம் என்பதால் விவசாயத்திற்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க கூடுதல் மின்மாற்றிகளை அமைக்க வேண்டும்.

    உழவர் சந்தைகளுக்கு கொண்டு செல்லும் காய்கறிகளுக்கு அரசு பஸ்களில் டிக்கெட் வசூல் செய்வதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

    கூட்டத்தில் பேசிய விவசாயி ஒருவர் காட்பாடி உழவர் சந்தை யில் கீரைகள் விற்பனை செய்வதற்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.

    இதற்கு பதில் அளித்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் காட்பாடி உழவர் சந்தை அமைந்திருக்கக் கூடிய பகுதியில் புதிதாக ரெயில்வே மேம்பாலம் விரைவில் கட்டப்படவுள்ளது.

    இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்ப ட்டுள்ளன. எனவே காட்பாடி உழவர் சந்தை விரைவில் இடமாற்றம் செய்யப்படும் என தெரிவித்தார்.

    • ஆண்டுக்கு 5 சதவீதம் வாடகை உயர்த்தப்படும்
    • ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பு

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான பொது ஏலம் மற்றும் பொது ஒப்பந்த புள்ளியில் குத்தகை இனங்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடைகள் ஏலம் 2-வது மண்டல அலுவலகத்தில் உதவி கமிஷனர் சுதா தலைமையில் இன்று நடந்தது.

    இதில் உதவி வருவாய் அலுவலர் குமரவேல் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

    2023-24 ஆம் ஆண்டு முதல் 26-ம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளுக்கான குத்தகை ஏலம் நடந்தது.

    இதில் பழைய மீன் மார்க்கெட் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி கடைகள், இருசக்கர வாகன வசூல் உரிமம், பொருள் பாதுகாப்பு பெட்டகம், அருகில் உள்ள கட்டண கழிப்பிடம், பழைய பஸ் நிலைய பொருள் வைப்பு பாதுகாப்பு அறை உரிமம், பழைய பஸ் நிலையத்தின் அருகில் உள்ள பைக் நிறுத்துமிடம் பஸ் உள்ளிட்ட இடங்களுக்கு ஏலம் நடந்தது.

    குத்தகை விடப்பட்ட கடைகளுக்கு ஆண்டுக்கு 5 சதவீதம் வாடகை உயர்த்தப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • மாநகராட்சி கமிஷனர் கடும் எச்சரிக்கை
    • தடுப்பு கம்பிகள் பல இடங்களில் சேதம் அடைந்துவிட்டது

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதியில் மாடுகளை வளர்க்கும் பலர் தெருவில் சர்வ சாதாரணமாக கட்டி வைக்கின்றனர்.

    மேலும் சாலைகள் தெருக்களிலும் மாடுகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இந்த மாடுகளால் தினந்தோறும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. சாலைகளில் படுத்து கிடக்கும் மாடுகளால் விபத்துகளும் ஏற்படுகின்றன.

    இதற்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் மாநகராட்சி நிர்வாகம் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியில் உள்ள தெருக்களில் நடைமேடை அமைக்கப்பட்டு தடுப்பு கம்பிகள் வைத்துள்ளனர்.

    இந்த கம்பிகள் மாடுகள் வளர்ப்பவர்களுக்கு நல்ல வசதியாக உள்ளது.

    அதில் மாடுகளை கட்டி போடுகின்றனர். இதனால் தடுப்பு கம்பிகள் பல இடங்களில் சேதம் அடைந்து விட்டது.

    இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி இன்று காலை காகிதப்பட்டறை பகுதியில் உள்ள தெருக்களில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது சில இடங்களில் நடைமேடை தடுப்பு கம்பிகளில் மாடுகளை கட்டியிருந்தனர்.

    இந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு கமிஷனர் கடும் எச்சரிக்கை விடுத்தார். இது போன்ற மாடுகள் கட்டி வைக்கக் கூடாது என அறிவுறை வழங்கினார். அந்த மாடுகளை அங்கிருந்து அவிழ்த்து செல்ல உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து காந்திரோடு பாபுராவ் தெரு கே வி எம் செட்டி தெரு பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    காந்தி ரோட்டில் லாட்ஜிகள் முன்பாக பல இடங்களில் குப்பைகளைக் கொட்டி வைத்திருந்தனர். அந்த லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களின் லைசன்சு ரத்து செய்யப்படும் என எச்சரித்தார்.

    கே.வி.எம் செட்டி தெருவில் உடைந்து போன குடிநீர் குழாயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கூறினார்.

    மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வால் அந்த பகுதியில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

    • நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது
    • 1300 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

    வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதி கமில் 1300 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, ஆதார் எண் விவரங்களை படிவம்-6 பி-ல் வாக்காளர்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையில் பெற்று வருகின்றனர்.

    இந்த பணியில் போதிய முன்னேற்றம் காணப்படாததால் பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணினை இணைப்பதற்கு வசதியாக நாளை சனிக்கிழமை மற்றும் 26-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆதார் எண் இணைப்பு படிவம் பெற உள்ளனர்.

    எனவே, பொதுமக்கள் அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு, தங்களது ஆதார் எண் விவரத்தினை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்து, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • விடிய விடிய பீதியில் உறைந்த கிராம மக்கள்
    • விளைநிலத்தில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தியது

    குடியாத்தம்:

    குடியாத்தம் வனப்பகுதி, ஆந்திர மாநில எல்லைப் பகுதியை ஒட்டியபடி உள்ளது.ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் உள்ளது. அந்த சரணாலயத்தில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது.

    அந்த யானைகள் பல குழுக்களாகப் பிரிந்து தமிழக வனப்பகுதியில் உள்ள சைனகுண்டா, மோர்தானா, கொட்டமிட்டா, தனகொண்டபள்ளி, டி.பி. பாளையம், கொத்தூர், கதிர்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன.

    வனத்துறையினர் கடும் சிரமத்திற்கு இடையே கிராம மக்கள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்தும் மேளங்கள் அடித்தும் ஆந்திர மாநில வனப்பகுதிக்கு பல கிலோ மீட்டர் தொலைவுக்கு விரட்டிவிட்டனர்.

    கடந்த சில மாதங்களாக யானைகள் தொல்லை சற்றே குறைந்திருந்தது, ஆங்காங்கே ஓரிரு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களைசேதப்படுத்தி வந்தது. விவசாயிகள் யானைகள் கூட்டம் குறைந்ததையடுத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டு வந்தனர்.

    இந்நிலையில் குடியாத்தம் அடுத்த கொட்டமிட்டா கிராமத்தில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் இரண்டு குழுக்களாக தலா மூன்று என ஆறு யானைகள் கொண்ட கூட்டம் குடியிருப்பு பகுதியில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது அமாவாசை இருட்டு என்பதால் கிராம மக்கள் அருகே செல்ல அச்சமடைந்தனர் உடனடியாக இது குறித்து வனத்துறை ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.

    இரவு 10 மணி வரை வனத்துறையினர் யாருமே கொட்டமிட்டா பகுதிக்கு வரவில்லை செல்போன் மூலம் தொடர்பு கொண்டாலும் போன் எடுப்பதில்லை எடுக்கும் ஓரிரு வனத்துறையினர் வருகிறேன் வருகிறேன் என்று கூறுவதாக கூறி விட்டு வரவில்லை என கூறப்படுகிறது.

    இதனையடுத்து அச்சமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு மேளங்கள் அடித்து பட்டாசு வெடித்து குடியிருப்பு பகுதிக்கு நுழையா வண்ணம் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வனத்துறையினர் உரிய நேரத்திற்கு வந்து யானைகள் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டி விடாததால் விவசாய நிலங்களுக்குள் புகுந்த யானைகளால் விவசாயிகளுக்கு பெருத்த சேதாரம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    யானைகள் வீடு அருகே நின்றதால் அச்சத்துடன் பொதுமக்கள் இரவை கழித்தனர்.

    வேலூர் கலெக்டர் யானைகள் பிரச்சனையில் தனி கவனம் செலுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

    யானைகளை விளைநிலங்களுக்குள் தடுக்க நடவடிக்கை எடுக்காத வனத்து றையினரை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இரவு 10 மணிக்கு மேல் வனத்துறையினர் கொட்டமிட்டா பகுதிக்கு வந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்

    அப்போதும் அந்த யானைகள் கூட்டம் கிராம மக்கள், வனத்துறை யினருக்கு போக்குக்காக காட்டி விட்டு பக்கத்தில் உள்ள மேல்கொல்லப்பல்லி கிராமத்திற்கு நுழைந்து ஏராளமான பயிர்களை நாசம் செய்ததாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

    • போலீசார் கைது செய்தனர்
    • தனியார் மண்டபத்தில் அடைப்பு

    வேலூர்:

    ராகுல்காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து குஜராத் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் டீக்காராமல் தலைமையில் அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

    மறியல் போராட்டத்தில் எஸ்சி, எஸ்டி மாநில செயலாளர் சித்தரஞ்சன் மண்டல தலைவர் ரகு, மாநில பொதுச் செயலாளர் கப்பல் மணி சுரேஷ், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் வாஹித் பாஷா வசிஷ்டன், காட்பாடி இளங்கோ. ரவி. மனோகரன். அசோக் குமார். உட்பட 20 பேர் கலந்து கொண்டனர்

    ×