என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cows should not be tied"

    • மாநகராட்சி கமிஷனர் கடும் எச்சரிக்கை
    • தடுப்பு கம்பிகள் பல இடங்களில் சேதம் அடைந்துவிட்டது

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதியில் மாடுகளை வளர்க்கும் பலர் தெருவில் சர்வ சாதாரணமாக கட்டி வைக்கின்றனர்.

    மேலும் சாலைகள் தெருக்களிலும் மாடுகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இந்த மாடுகளால் தினந்தோறும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. சாலைகளில் படுத்து கிடக்கும் மாடுகளால் விபத்துகளும் ஏற்படுகின்றன.

    இதற்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் மாநகராட்சி நிர்வாகம் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியில் உள்ள தெருக்களில் நடைமேடை அமைக்கப்பட்டு தடுப்பு கம்பிகள் வைத்துள்ளனர்.

    இந்த கம்பிகள் மாடுகள் வளர்ப்பவர்களுக்கு நல்ல வசதியாக உள்ளது.

    அதில் மாடுகளை கட்டி போடுகின்றனர். இதனால் தடுப்பு கம்பிகள் பல இடங்களில் சேதம் அடைந்து விட்டது.

    இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி இன்று காலை காகிதப்பட்டறை பகுதியில் உள்ள தெருக்களில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது சில இடங்களில் நடைமேடை தடுப்பு கம்பிகளில் மாடுகளை கட்டியிருந்தனர்.

    இந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு கமிஷனர் கடும் எச்சரிக்கை விடுத்தார். இது போன்ற மாடுகள் கட்டி வைக்கக் கூடாது என அறிவுறை வழங்கினார். அந்த மாடுகளை அங்கிருந்து அவிழ்த்து செல்ல உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து காந்திரோடு பாபுராவ் தெரு கே வி எம் செட்டி தெரு பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    காந்தி ரோட்டில் லாட்ஜிகள் முன்பாக பல இடங்களில் குப்பைகளைக் கொட்டி வைத்திருந்தனர். அந்த லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களின் லைசன்சு ரத்து செய்யப்படும் என எச்சரித்தார்.

    கே.வி.எம் செட்டி தெருவில் உடைந்து போன குடிநீர் குழாயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கூறினார்.

    மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வால் அந்த பகுதியில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

    ×