என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீடு வீடாக சென்று வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி
- நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது
- 1300 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம்
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதி கமில் 1300 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, ஆதார் எண் விவரங்களை படிவம்-6 பி-ல் வாக்காளர்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையில் பெற்று வருகின்றனர்.
இந்த பணியில் போதிய முன்னேற்றம் காணப்படாததால் பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணினை இணைப்பதற்கு வசதியாக நாளை சனிக்கிழமை மற்றும் 26-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆதார் எண் இணைப்பு படிவம் பெற உள்ளனர்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு, தங்களது ஆதார் எண் விவரத்தினை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்து, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






