search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.91.61 லட்சத்தில் புதிய திட்ட பணிகள் மேற்கொள்ள ஒப்புதல்
    X

    ரூ.91.61 லட்சத்தில் புதிய திட்ட பணிகள் மேற்கொள்ள ஒப்புதல்

    • கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம்
    • துப்புரவு பணிக்கு கூடுதலாக 5 பேர் நியமனம்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சுபபிரியா குமரன் தலைமை தாங்கினார், செயல் அலுவலர் உமாராணி முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு துணைத் தலைவர் வசீம்அக்ரம் அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர் சந்தோஷ் முக்கிய தீர்மானங்களை வாசித்தார். அதில் தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளிகொண்டா பேரூராட்சியில் ரூ.58.30 லட்சம் ஒதுக்கீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பது, ரூ.30.50 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைப்பது, ரூ.2.81 லட்சத்தில் புதிய கல்வெர்ட் அமைப்பது எனவும்.

    ஒட்டுமொத்தமாக இந்த பணிகளை ரூ.91.61 லட்சம் நீதி ஒதுக்கீட்டில் ஒப்பந்ததாரருக்கு பணி உத்தரவு வழங்க 18 வார்டு கவுன்சிலர்களின் ஒப்புதலுடன் ஒருமனதாக தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.

    பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் மழைநீர் வடிகால் அமைத்தல், எரி மேடை அமைத்தல், தெரு விளக்கு அமைத்தல், குடிநீர் வசதிகள், சாலை அமைத்தல், சமுதாயக்கூடம், பொது கழிப்பிடம், கல்வெர்ட் அமைத்தல் போன்ற அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

    இப்பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகளில் 120க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன இதில் சுகாதார பணிகளை மேற்கொள்ள துப்புரவு பணியாளர்கள் பணியிடங்கள் 20 நபர்கள் மட்டுமே உள்ளனர்.

    இதனால் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளதால் தற்போது தற்காலிகமாக தூய்மை பணி மேற்கொள்ள 5 நபர்கள் பணி அமர்த்திகொள்ள கவுன்சி லர்களின் ஒப்புதலுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×