என் மலர்
நீங்கள் தேடியது "62 prisoners fasted during Ramadan"
- காலை, மாலை உணவு வழங்கப்படுகிறது
- சிறைத்துறை அதிகாரிகள் தகவல்
வேலூர்:
ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம்.வானில் தோன்றும் பிறையை வைத்து ரம்ஜான் நோன்பு தொடங்கப்படுகிறது.
இந்தாண்டு ரம்ஜான் நோன்பு நேற்று தொடங்கியது. இதனை முன்னிட்டு அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெறுகிறது.
வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் 62 பேர் ரம்ஜான் நோன்பு தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இதையடுத்து அவர்களுக்கு நோன்பு இருக்க சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது.
இதையடுத்து, இன்று முதல் 62 கைதிகள் ரம்ஜான் நோன்பை தொடங்கி யுள்ளனர். இவர்களுக்கு அதிகாலை 5 மணிக்கு உணவும், மாலை 6 மணிக்கு மேல் உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






