என் மலர்
வேலூர்
- சிரசு திருவிழாவை முன்னிட்டு நடந்தது
- பக்தர்கள் ஏராளமானோர் பால் ஊற்றி வழிபாடு
குடியாத்தம்:
தமிழகத்தில் மிகவும் பிரபலமான திருவிழாக்களில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா முக்கியமான ஒன்றாகும். கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவை முன்னிட்டு கோவிலில் பால் கம்பம் நடும் விழா இன்று காலை நடைபெற்றது.
நிகழ்ச்சியையொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து பால் கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து பால் கம்பம் நடப்பட்டது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பால் ஊற்றினர்.
கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 30-ந்தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், மே மாதம் 14-ந்தேதி தேர் திருவிழாவும், மே மாதம் 15-ந்தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடைபெறுகிறது.
- ரஜினிகாந்த் அன்பு இல்லம் எனும் பெயரில் கான்கிரீட் தளத்துடன் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
- நேற்று கிரகப்பிரவேஷம் செய்து அதற்கான சாவியை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் 47 ஆண்டாக கலைத்துறையில் சேவையாற்றி தமிழக மக்களை மகிழ்வித்து வருவதற்காகவும், இந்திய அரசின் திரைத்துறை சார்ந்த உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றமைக்காகவும் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சென்னை, நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் மார்ச் மாதம் 26-ந்தேதி பாராட்டு விழாவும், நலிந்த ரசிகர் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவையும் நடத்த திட்டமிட்டு அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நிகழ்ச்சி திடீரென தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் செயலாளருமான சோளிங்கர் என்.ரவி அப்போது வெளியிட்ட அறிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் அவர்களிடத்தில் நேரில் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.

அதனடிப்படையில் ரசிகர்களின் குடும்ப சூழலுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நலத்திட்ட உதவிகளுள் ரஜினிகாந்த் அன்பு இல்லம் எனும் பெயரில் கான்கிரீட் தளத்துடன் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 5 பேருக்கு இந்த வீடு வழங்கப்பட்டுள்ளது. நேற்று கிரகப்பிரவேஷம் செய்து அதற்கான சாவியை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தவர்களுக்கு பங்க் அமைத்து கொடுத்துள்ளனர். கணவனால் கைவிடப்பட்டு வருவாய் இன்றி தவித்து வந்த பெண்களுக்கு வீட்டிலிருந்தபடியே வருவாய் ஈட்ட ஊதுவத்தி தயாரிக்கும் எந்திரம், 2 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இட்லி மாவு அரைக்கும் எந்திரம், தையல் எந்திரம் 5 பேருக்கும், மேற்படிப்பு படிக்க இயலாமல் தவித்து வந்த 15 மாணவர்களுக்கு முழு கல்விக்கான நிதியும், உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதியும், ஏழ்மையில் தவித்து வந்த குடும்ப தலைவிகளுக்கு குடிசை தொழில் தொடங்க நிதியும், மாற்றுத்திறனாளி ரசிகர்களுக்கு 3 சக்கர மோட்டார் வாகனங்களும் வழங்கப்பட்டது. 2 பேருக்கு கறவை மாடுகள் வழங்கினர்.
நலத்திட்ட உதவிகள் பெற்றுக்கொண்ட பயனாளிகள் நடிகர் ரஜினிகாந்த்துக்கு நன்றியை தெரிவித்து ஒருமுறையாவது தங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பை வழங்குமாறு மிகுந்த உருக்கத்துடன் கேட்டுக் கொண்டனர்.
- ராகுல் காந்தி எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டது குற்றத்தின் அடிப்படையில் நடந்ததாக யாரும் கருதவில்லை.
- ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் இந்தமுறை ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும்.
வேலூர்:
வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக, தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார். வேலூர் கதிர் ஆனந்த் எம்.பி, மாநகர செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. வரவேற்றார்.
கூட்டத்தில், முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது, அடுத்த லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள முதலமைச்சர் அறிவித்தவாறு வாக்காளர் பட்டியலின்படி பூத் கமிட்டி உறுப்பினர்கள் பட்டியல் தயாரிப்பது, கட்சியில் மேலும் ஒரு கோடி உறுப்பினர்களை இணைப்பது, ஈரோடு இடைத்தேர்தலில் வேலூர் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பூத்களில் அதிக ஓட்டுகளை சேர்த்த தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் செப்டம்பர் 15-ந்தேதி முதல் வழங்கப்படும் என அறிவித்த முதல்வருக்கும் பாராட்டு தெரிவிப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-
ராகுல் காந்தி எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டது குற்றத்தின் அடிப்படையில் நடந்ததாக யாரும் கருதவில்லை. அவகாசத்தின் அடிப்படையில் மேல்முறையீட்டுக்கு செல்லும் வாய்ப்பு இருந்தது. கோர்ட் கதவு திறக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அவர் அதை பயன்படுத்தும் முன்பாகவே அவசரமாக தண்டனை வழங்கியிருப்பது ஜனநாய கருத்துக்கு உகந்ததல்ல.
ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டை மெஜாரிட்டியுடன் ஆளும் ஒரு கட்சி தனிமனிதனை கண்டு அஞ்சுகிறதோ என்ற எண்ணம் அரசியல் நோக்கர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எல்லா தலைவர்களுமே இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கூறியுள்ளனர்.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் இந்தமுறை ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும். இனி, அதை படுக்கைக்கு அடியிலேயே அவர் வைத்திருக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டினார்
- ரெயில் பயணிகளின் உடமைகள் சோதனை
வேலூர்:
தமிழக -ஆந்திர எல்லையான கிறிஸ்டியான் பேட்டையில் சோதனை சாவடி உள்ளது. ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா, செம்மரகட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்திற்கு கடத்தப்படுகிறது. இதனை தடுக்க போலீசார் பகல், இரவு என 24 மணி நேரமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், காட்பாடி டிஎஸ்பி பழனி மற்றும் போலீசார் கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் திடீர் சோதனை நடத்தினர். ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தார். பின்னர் வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டினார்.
இதனையடுத்து காட்பாடி ரெயில் நிலையத்திலும், அந்த வழியாக வந்த ரெயில்களிலும் போலீசார் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.
- சென்னைக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு
- தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல்
வேலுார்:
வேலூர் காகிதப்பட்டறை அருகே, சமூக பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு பாதுகாப்பு இல்லம் இயங்குகிறது.
இங்கு, பல குற்றச்செயல்க ளில் ஈடுபட்ட 18 வயதுக்கு உட்பட்ட மைனர் சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அவ்வப்போது வேறு மையங்களுக்கு மாற்றப்படுவது வழக்கம்.
இந்நிலையில், சேலம் செவ்வாய் பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு உட் பட்ட பகுதியில் நடந்த ஒரு வழிப்பறி வழக்கில் கைதான 17 வயது சிறுவன் இங்கு தங்க வைக்கப்பட்டி ருந்தான். அவனை சென்னை கெல்லீஸ் பகுதியில் உள்ள பாதுகாப்பு இல்லத்துக்கு மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதற்கான பணி களில் அதி காரிகள் ஈடுபட்டிருந்தனர். ஆனால், அதற்கு அந்த சிறுவன் எதிர்ப்பு தெரி வித்ததாக கூறப்படுகிறது.
திடீர் ரகளையில் ஈடுபட்டான். மேலும், அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது.
பின்னர், கட்டடத்தின் மீது ஏறிநின்று, கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து ள்ளான். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்ததும் வேலுார் வடக்கு போலீசார் மற்றும் பாதுகாப்பு இல்ல அலுவலர்கள் சிறுவனை சமாதானப்ப டுத்த முயன்றனர்.
ஆனால், அவன் கீழே இறங்க மறுத்துவிட்டான். இதையடுத்து, வேலுார் இளஞ்சிறார் நீதித்துறை நீதிக் குழும நீதிபதி பத்மகுமாரி அங்குவந்து சிறுவனிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அவரது அறிவுரையை ஏற்று, சிறுவன் கீழே இறங்கினான். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.
- கலெக்டர் தகவல்
- 100 கிராம ஊராட்சிகள் தேர்வு
வேலூர்:
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச் சித் திட்டத்தின் கீழ், வேலூர் மாவட்டத்தில் தரிசு நிலங்களை மேம்படுத்தும் வகையில், ரூ.3.70 கோடியில் திட்டப் பணிகள் மேற் கொள்ளப்பட்டுவருகிறது.
இதுகுறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் அனைத்து கிரா மங்களும் 5 ஆண்டுகளில் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சி, தன்னிறைவு அடைந்திடும் வகையில், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.
புதிய நீர் ஆதாரங்களை உரு வாக்கி, தரிசு நிலங்களை சாகுப டிக்கு ஏற்ற நிலங்களாக மாற்றி, சாகுபடி பரப்பை அதிகரித்தல், வேளாண் உற்பத்தி, உற்பத்தி திறனை அதிகரித்தல், உழவர்க ளின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல் ஆகியவை இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் சமு தாய நீர் ஆதாரத்தை உருவாக் குதல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், சிறுபாசன குளங் கள், ஊரணிகள், நீர் வரத்துக் கால் வாய்களைத் தூர்வாரி மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிற 2021 - 2022- ஆம் ஆண்டில் 317 சிறு கிராமங்களை உள் ளடக்கிய 43 கிராம ஊராட்சிக ளில் 390.26 ஏக்கர் பரப்பளவில்22 தொகுப்புகள் தேர்ந்தெடுக் கப்பட்டு 293 விவசாயிகள் பயன் பெறும் வகையில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறி யியல் துறை மூலம் ரூ.2 கோடியே 73 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2022 - 2023 ஆம் ஆண்டில் 271 சிறு கிராமங்களை உள்ளடக்கிய 57 கிராம ஊராட்சிகளில் 293.10 ஏக்கர் பரப்பளவில் 20 தொகுப்பு கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 230 விவ சாயிகள் பயன்பெறும் வகையில் மொத்தம் ரூ.95 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, 2021 - 2023 ஆகிய இரு நிதியாண்டுகளில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100 கிராம ஊராட்சி களில்தேர்வு செய் யப்பட்டு, அந்த கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களை மேம்படுத் தும் வகையில் இதுவரை ரூ.3.70 கோடி மதிப்பிலான திட்டப் பணி கள் மேற்கொள்ளப்ப ட்டுள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குடியாத்தம் நகர மன்ற தலைவர் வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் எதிரில் கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை தொழிலாளி. இவரது மகள் தமிழரசி.
இவர் ஆற்காட்டில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். ஏழுமலை உடல்நிலை சரியில்லாததால் தமிழரசி கல்வி கட்டணம் கட்ட இயலாததால் கல்வி கட்டணம் கட்ட உதவி செய்யுமாறு குடியாத்தம் நகர் மன்ற தலைவர் சவுந்தரராஜனிடம் கோரிக்கை விடுத்தார்.
இதனை தொடர்ந்து நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன் அந்த மாணவியை அழைத்து கல்வி கட்டணம் செலுத்த ரூ.15 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
- போக்குவரத்து பாதிப்பு
- அதிகாரிகள் பேச்சுவார்த்தை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம்சீவூர் ஊராட்சி உள்ளது. இந்த சீவூர் ஊராட்சியின் வார்டான கள்ளூர் அடுத்த குறிஞ்சிநகர், முல்லைநகர், ராயல்நகர், பாபாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சரியானபடி குடிநீர் விநியோகம் இல்லை.
கழிவுநீர் சரியாக செல்லாமல் தேங்கிருப்பதாகவும், கழிவுநீர் கால்வாய்களை தூர் எடுக்க வலியுறுத்தியும், மழைக்காலங்களில் கழிவுநீர் வீடுகளில் புகுவதை தடுக்க வலியுறுத்தியும், ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் குறைகளை கூறினால் அலட்சியப்ப டுத்துவதாகவும் அதனை கண்டித்து நேற்று காலையில் அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் திடீரென குடியாத்தம்-பலமநேர் சாலையில் கள்ளூர் பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், தாசில்தார் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், ஆர்.திருமலை, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், யுவராஜ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தீபிகாபரத், அமுதாலிங்கம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அஜீஸ், வார்டு உறுப்பினர் ஷாஹிதா அல்தாப் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- நந்தகுமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:
கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்ன பாலம்பாக்கத்தில் பகுதி நேர ரேசன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது.
கணியம்பாடி ஒன்றிய குழு துணை தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், ஊராட்சி மன்ற தலைவர்கள் சசிகலாகோபி, வெங்கடேசன், பாபு, ஒன்றிய கவுன்சிலர் லதாசீலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகராஜ், கவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெயபிரகாஷ் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக அணைக்கட்டு நந்தகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பகுதிநேர ரேசன் கடையை திறந்து வைத்து பேசினார்.
இதனை தொடர்ந்து காட்டுப்புத்தூரில் புதிய பால் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா, 4 ஆண்டுகளாக கோரிக்கையாக இருந்து வந்த பாப்பான்தோப்பில் புதிய பஸ் நிலையம் திறப்பு விழா, சோழவரத்தில் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இதில் பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர் பவானிசசிகுமார் துணை தலைவர் ஜீவசத்தியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் நடந்தது
- மனுக்கள் விசாரணைக்கு அனுப்பட்டது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் காலதாமத பிறப்பு, இறப்பு வேண்டி மனுக்களை பதிவு செய்தவர்களுக்கு உத்தரவு ஆணைகள் வழங்கும் முகாம் நடந்தது.
இதில் வேலூர் ஆர்டிஓ கவிதா தலைமை தாங்கினார், அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீராபெண்காந்தி முன்னிலை வகித்தனர். மண்டல துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், விஏஓக்கள் ஆகியோர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களின் மனுக்களை பெற்று பதிவு செய்தனர்.
இதில் தாலுகா அலுவலகத்தில் இருந்து விசாரனை நடத்தி ஆர்டிஓவுக்கு மனுக்கள் அனுப்பட்ட மனுதார்களுக்கு அழைப்பு விடுத்து அனைவரும் பங்கேற்றி ருந்தனர். அவர்களிடம் ஆர்டிஓ தனித்தனியாக நேரடியாக விசாரனை மேற்கொண்டார்.
இதனையடுத்து முகாமிலே மனு அளித்த தகுதியான நபர்களிடம் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற்று கொள்வதற்கான உத்தரவு ஆணைகளை ஆர்டிஓ கவிதா வழங்கினார்.
இதில் காலதாமத பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வேண்டி விண்ணப்பித்து இருந்தவர்களில் 34 நபர்களுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற்றுக் கொள்வதற்கான உத்தரவு ஆணைகள் வழங்கப்பட்டது.
அதேபோல் புதியதாக காலதாமத பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கேட்டு 50 பேர் மனுக்களை அளித்தனர். அந்த மனுக்கள் பதிவு செய்யபட்டு விசாரணைக்கு அனுப்பட்டது.
- குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் அளித்தனர்
- நடவடிக்கை எடுக்கப்பதாக அதிகாரி உறுதி
குடியாத்தம்:
குடியாத்தம் வட்டம் ராமாலை ஊராட்சியை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் 100 பேருக்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ராமாலையை அடுத்த கணகர் குட்டை பகுதியிலும், பிள்ளை யார் கோவில் அருகிலும் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
ஆனால் இதுவரை பட்டா வழங்கிய இடத்தை அளந்து உட் பிரிவு செய்து கொடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.
மேலும் கணகர்குட்டையில் வழங்கப்பட்ட மனைகளில் வீடு கட்டாததால், அந்த இடத்தை வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இங்கு வீட்டுமனை பட்டா பெற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து குடியாத்தம் நகர மன்ற உறுப்பினர் பி.மேகநாதன், ராமாலை ஒன்றியக் குழு உறுப்பினர் குட்டி வெங்கடேசன் உள்ளிட்ட ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் வீட்டு மனை பெற்ற கிராம மக்கள் நேற்று தாலுகா அலுவல கத்தில் துணை தாசில்தார் ரமேஷிடம், பட்டா வழங்கிய இடத்தை உடனடியாக அளந்து தருமாறு மனு அளித்தனர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட அவர் இது குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி அளித்தார்.
- மாவட்ட கல்வி அலுவலரை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ் முன்னிலை வகித்தார். தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் அங்கீகாரம் வழங்காமல் அலைக்கழிக்கும் மாவட்ட கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளில் 4.50 லட்சம் மாணவர்கள் படிப்பதற்காக ஆர்.டி.இ 2 ஆண்டு கல்வி கட்டண பாக்கியை உடனே வழங்க வேண்டும்.பள்ளி பாதுகாப்பு சட்டத்தை உடனே இயற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் ராஜா மாநில துணை பொதுச்செ யலாளர் விஜயகுமார், மாநில துணை தலைவர் இன்பராஜ், சட்ட ஆலோசகர் ஜெயவேலு உள்பட தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






