என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Financial assistance to the student"

    • குடியாத்தம் நகர மன்ற தலைவர் வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் எதிரில் கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை தொழிலாளி. இவரது மகள் தமிழரசி.

    இவர் ஆற்காட்டில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். ஏழுமலை உடல்நிலை சரியில்லாததால் தமிழரசி கல்வி கட்டணம் கட்ட இயலாததால் கல்வி கட்டணம் கட்ட உதவி செய்யுமாறு குடியாத்தம் நகர் மன்ற தலைவர் சவுந்தரராஜனிடம் கோரிக்கை விடுத்தார்.

    இதனை தொடர்ந்து நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன் அந்த மாணவியை அழைத்து கல்வி கட்டணம் செலுத்த ரூ.15 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

    ×