என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக் விபத்தில் தொழிலாளி பலி"

    • தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் ஜாப்பேட்டை, ஜியாவுதீன் தெருவை சேர்ந்த மஸ்தான் இவருடைய மகன் இர்பான் (வயது 25) இவர் கட்டிட மேஸ்திரி.

    நேற்று முன்தினம் இரவு வேலூரில் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்று பைக்கில் பொய்கை அடுத்த மோட்டூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனி எதிரே வந்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு இர்பானை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பைக் நிலை தடுமாறி சாலையோரம் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த ஒருவர் சம்பவ இடத்தி லேயே பலியானார்.
    • மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    செம்பட்டி:

    மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்தவர் கோபால் (வயது48). இவர் தனது மகன் மணிகண்ட பிரபுவுடன் மோட்டார் சைக்கிளில் கன்னிவாடியில் உள்ள உறவினரை பார்க்க சென்றார்.

    செம்பட்டி அருகே பழனி சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது திடீரென பைக் நிலை தடுமாறி சாலையோரம் கீழே விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த கோபால் சம்பவ இடத்தி லேயே பலியானார்.

    காயங்களுடன் மீட்க ப்பட்ட மணிகண்டபிரபு திண்டுக்கல் அரசு ஆஸ்ப த்திரி யில் சேர்க்கப்பட்டு ள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

    ×