என் மலர்
வேலூர்
- பயணிகள் ஏமாற்றம்
- காலை 7.05 மணிக்கு காட்பாடியை கடந்து சென்றது
வேலூர்:
தமிழ்நாட்டின் முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றான காட்பாடி ரெயில் நிலையத்துக்கு தினமும் சராசரியாக சுமார் 38,000 பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ரெயில் நிலையத்தில் ரூ.360 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.
இந்திய ரெயில்வேயின் மதிப்புமிக்க ரெயில் சேவைகளில் ஒன்றாக கருதப்படும் வந்தே பாரத் ரெயில் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 10 வந்தே பாரத் ரெயில்கள் 17 மாநிலங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வருகின்றன.
அதில் சென்னை-மைசூர் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த வந்தே பாரத் ரெயில் புதன்கிழமை தவிர அனைத்து வார நாட்களிலும் சென்னையிலிருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.20-க்கு மைசூரை சென்றடைகிறது. இடையில் காட்பாடி மற்றும் பெங்களூரு ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது.
இதனால் காட்பாடி, வேலூர், அரக்கோணம், ராணிபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய அனைத்துப் பகுதி மக்களும் பயனடைந்து வருகின்றனர்.
இந்த ரெயிலில் 4 மாதத்தில் காட்பாடியில் இருந்து மட்டும் 19,176 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்.
காட்பாடியில் சென்னை- மைசூர் வந்தே பாரத் ரெயிலுக்கு காட்பாடி சுற்றுப்புற மக்கள் பெரும் ஆதரவை அளித்து வருவதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னை - கோவை இடையே விரைவில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இந்த வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் இன்று காலை நடந்தது. சென்னையில் இருந்து புறப்பட்ட வந்தே பரத் ரெயில் காலை 7.5 மணிக்கு காட்பாடியை கடந்து சென்றது.
கோவையில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரெயில் மாலை 5 மணிக்கு காட்பாடி ெரயில் நிலையத்தை கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ெரயில் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காட்பாடி ரெயில் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சென்னை மைசூர் வந்தே பாரத் ரெயிலுக்கு அதிக வரவேற்பு உள்ள நிலையில் சென்னை கோவை வந்தே பாரத் ரெயில் காட்பாடியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- கலெக்டர் பங்கேற்று பார்வையிட்டார்
- விவசாய பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்தால் லாபம் கிடைக்கும் என்று பேச்சு
வேலூர்:
விரிஞ்சிபுரம் வேளாண் அறிவியல் மையத்தில் பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி இன்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கண்காட்சியை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-
இங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் பாரம்பரிய உள்ளூர் ரக சிறுதானியங்கள் இடம் பெற்றுள்ளன. பாரம்பரிய ரகங்களை முன்னெடுத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். சிறுதானியங்களை மதிப்பு கூட்டி விற்றால் மட்டுமே லாபம் பெற முடியும்.
வெளிநாடுகளில் சிறுதானியங்களை பலர் அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர்.
இன்றளவும் அந்த நிலை நீடிக்கிறது. விவசாயிகள் தங்களது பொருட்களை மதிப்பு கூட்டி விற்றால் லாபம் கிடைக்கும். வேலூர் மாவட்டத்தில் நிலக்கடலை பயிரிடுகின்றனர்.
இந்த நிலக்கடலையை எவ்வாறு உணவுப் பொருட்களாக பயன்படுத்த வேண்டும் என அறிந்திருக்க வேண்டும். விவசாயிகள் விவசாயப் பணிகளை மட்டும் மேற்கொள்ளாமல் கால்நடைகளையும் வளர்க்க வேண்டும்.
ஏனென்றால் ஆண்டுதோறும் விவசாயத்தில் லாபம் கிடைக்காது. மற்ற நேரங்களில் கால்நடைகள் வளர்த்தால் அதன் மூலமும் வருவாய் கிடைக்கும்.
தமிழக அரசு சட்டமன்றத்தில் தமிழகத்தை அங்கு நிலவும் தட்பவெப்ப நிலை மற்றும் பயிர்களின் அடிப்படையில் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நடைமுறை எதற்கு என்றால் அந்தந்த பகுதியில் விளைவிக்கப்படும் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கவும் அதை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டுள்ளது.
அங்காடிகளில் வெளிநாட்டு பொருட்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். அந்த அங்காடிகளில் பாரம்பரிய உள்ளூர் சிறுதானியங்கள் மற்றும் உணவு வகைகள் இடம்பெற வழிவகை செய்ய வேண்டும். அந்த காலத்தில் முருங்கையில் முருங்கைக்காய் காய்ந்து விட்டால் அதை அப்படியே விட்டுவிடுவார்கள்.
ஆனால் தற்போது முருங்கைக்காைய பொடியாக்கி இலையை காய வைத்து பொடியாக்கி விற்பனை செய்கின்றனர்.
இதே போன்று ஒவ்வொரு பொருளையும் மதிப்பு கூட்டும் வகையில் அதை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் வேளாண்மை இணை இயக்குந ர்ஸ்டீபன் ஜெயக்குமார், கால்நடை பராமரி ப்புத்துறை, மண்டல இணை இயக்குநர், ஜெ.நவநீத கிருஷ்ணன், மாநில ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குனர் செந்தில்கு மாரன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறி யாளர் ஸ்ரீதர், வேளாண்மை துணை இயக்குநர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை), ஏ.வெங்கடேஷ் தோட்டக்கலை துணை இயக்குநர் மோகன், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) கலைச்செல்வி, வேளாண்மை துணை இயக்குநர் சோமு ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூரை சேர்ந்த மாணவி ஒருவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டு கோட்டை பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தார்.
அவர் சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கல்லுரியில் விடுதி அறையில் மாணவி தூக்கில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் விரைந்து வந்து மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரியில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு மாணவி தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- படாத பாடுபடும் வாகன ஓட்டிகள்
- பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் மாநகரில் பரபரப்பாக காணப்படும் சாலைகளில் ஆற்காடு சாலையும் ஒன்று. இங்குள்ள மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வருவதால் ஏராளமான ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் இயக்கப்படுகிறது.
இதனால் தனியார் ஆஸ்பத்திரி முன்பு அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இது தீர்க்க முடியாத பிரச்சினையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில்வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை கால்வாய்கள் அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், கோட்டையை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. வேலூர் ஆற்காடு சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது.
இதனால் ரோடு தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக உள்ளது.
மெத்தனப் போக்கில் பணிகள் நடைபெற்று வருவதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
கடந்த மாதம் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் தவறி விழுந்த சத்துவாச்சாரி வாலிபர் அரசு பஸ்சில் சக்கரத்தில் சிக்கி பலியானார். மேலும் பலர் விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளனர்.
இதனால் 20 முதல் 25 அடியாக சுருங்கிப்போன சாலையில் வாகன ஓட்டிகள் செல்லவும், பொதுமக்கள் நடமாடவும் வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பள்ளி, கல்லூரி, வேலை செல்பவர்களுக்கு வேலூர் ஆற்காடு சாலையை கடக்க படாத பாடுபடுகின்றனர்.
வாகனங்கள் செல்லும்போது அதிக அளவில் புழுதி கிளம்புவதால் வீடு, கடைகளில் புழுதி படிந்து விடுகிறது.
எனவே ஆற்காடு சாலையில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடியும் வரை போலீசார் கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஆற்காடு சாலையில் பணிகளை விரைந்து முடித்து சாலையை சீரமைப்பதில் மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- போட்டி போட்டு கேட்டனர்
- 45 நிமிடங்கள் நடைபெற்றது
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதி வேலூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் உள்ளது. அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் தொடங்குகிறது.
பரதராமில் வாரச்சந்தை மிகவும் பிரபலம் பரதராமி சுற்றுப்புற பகுதிகள் மட்டும் இல்லாது ஆந்திராவில் இருந்து ஏராளமானோர் பரதராமி வாரச் சந்தைக்கு தங்களின் கால்நடைகள், காய்கறி உள்ளிட்டவைகளை கொண்டு வருவார்கள்.
வேலூர் மாவட்டத்தில் மிகவும் முக்கியமான வார சந்தைகளில் பரதராமி வாரச் சந்தையும் ஒன்றாகும் 2023-2024 ஆம் ஆண்டிற்கான பரதராமி வாரச்சந்தை ஏலம் விடும் நிகழ்ச்சி குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவ லகத்தில் நடைபெற்றது. குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் வார சந்தை ஏலம் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வைப்புத் தொகை செலுத்தி ஏலத்தை கேட்டனர். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஏலத்தில் 21 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு இந்த ஆண்டுக்கான பரதராமி வாரச்சந்தை ஏலம் விடப்பட்டது.
கடந்த ஆண்டு பரதராமி வாரச் சந்தை 15 லட்சத்தி 57 ஆயிரம் ரூபாய்க்கு விடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு கூடுதலாக 5 லட்சத்து 58 ஆயிரத்திற்கு ஏலம் சென்றது. ஏலத்தி ற்கான ஏற்பாடுகளை வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் எஸ்.அசோக்குமார், காசாளர் எம்.சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியர் துப்புரவு தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் குடியாத்தம் நகராட்சி அலுவலகம் முன்பாக ஒப்பந்த முறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் கே. சாமிநாதன் தலைமை தாங்கினார்.நிர்வாகிகள் எம்.முருகானந்தம், டி.பாலகுருவையா, எம். யுவராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்க மாவட்ட தலைவர் எம்.காசி துவக்க உரையாற்றினார்.மாவட்ட செயலாளர் எம்.சரவணன் நிறைவுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பி.காத்தவராயன், மாவட்ட துணை செயலாளர் சி.சரவணன், சங்க செயலாளர் சி.எம். லாரன்ஸ், மாவட்ட துணைத் தலைவர் வி.குபேந்திரன், குணசேகரன், சிலம்பரசன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். சங்கப் பொருளாளர் சி.எம்.தசரதன் நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த முறையை ஒழித்திட வேண்டும், ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துக, சட்டப்படி தினக்கூலி தொழிலாளர்களுக்கு ரூ.507 வழங்க வேண்டும்.
நிரந்தர துப்புரவு தொழிலாளிகள் ஏற்கனவே பணி செய்த பகுதியிலேயே பணி செய்யவும், கூடுதல் தொழிலாளிகளை அவர்களுடன் இணைத்திடு, தனியார் மயமாக்கலை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- குடிப்பழக்கத்திற்கு அடிமையான கார்த்தி செலவுக்கு பணம் இல்லாததால் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது.
- கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி வேறு ஏதாவது குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
கடந்த மாதம் திருவண்ணாமலையில் ஏடிஎம் எந்திரங்கள் தொடர்ச்சியாக உடைக்கப்பட்டு ரூ.73 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவையே உலுக்கியது.
இதனைத் தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தினம்தோறும் இரவு வேலைகளில் ஏடிஎம் மையங்கள் உள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் வேலூர் மாவட்டத்திலும் ஏடிஎம் மையங்கள் உள்ள பகுதிகளில் போலீசாரின் ரோந்து பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் இருந்து கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. அதன் பக்கத்திலேயே வங்கிகள் உள்ளன.
அதில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள ஏடிஎம் மையத்தை இன்று அதிகாலை மர்மநபர் உள்ளே புகுந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து தன் கையில் இருந்த சுத்தியலால் ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது இரவு ரோந்து பணியில் இருந்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசார் அந்த வழியாக சென்றனர். அப்போது ஏடிஎம் எந்திரம் உள்ள இடத்தில் உள்ளே ஒருவர் இருப்பதை கண்டதும் சந்தேகத்தின் பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி பார்த்தபோது கையில் சுத்தியலுடன் வாலிபர் ஒருவர் எந்திரத்தை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்ததை பார்த்தார்.
சுதாரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் லட்சுமி அவனை சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஏடிஎம் ஏந்திரத்தை உடைக்க முயற்சி செய்தவர் குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவில் பின்புறம் உள்ள நரசிம்மர் கோவில் தெருவை சேர்ந்த முரளி மகன் கார்த்தி (வயது 24) என்றும் கூலி வேலை செய்பவர் என்பதும் தெரியவந்தது.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான கார்த்தி செலவுக்கு பணம் இல்லாததால் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்து அவரிடமிருந்து சுத்தியல் கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி வேறு ஏதாவது குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு ஏடிஎம் கொள்ளை முயற்சியை தடுத்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசாரை வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கே.வி.குப்பம்:
கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் உள்ள குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் எதிரில் அங்கன்வாடி பணியா ளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார தலைவர் விஜயநிர்மலா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கள் ஜூலி, உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் சத்யா வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், 10 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள அங்கன்வாடி மையங்களை பிரதான மையங்களோடு இணைக்கக்கூடாது. கியாஸ் சிலிண்டருக்கான முழு தொகையை வழங்க வேண்டும்.
10 ஆண்டுகள் நிறைவு செய்த பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு உண்டான மின் கட்டணத்தை அரசே வழங்க வேண்டும்.
வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
- குப்பைகளால் வாகன ஓட்டிகள் அவதி
வேலூர்:
வேலூர் கருகம்புத்தூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ், சாலையோரம் ஏராளமானவர்கள் குப்பைகளை தொடர்ந்து கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மருத்துவக்கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள் அதிகளவு கொட்டப்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதிகாலை மற்றும் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் குப்பைகளை கொண்டு வந்து போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த குப்பைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிக ளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. மேலும் அங்கு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுதவிர சில நேரங்களில் இறந்த நாய்களின் உடல்களை சாலையோரம் போட்டுவிட்டு செல்கின்றனர். அவை அழுகி அப்பகுதி முழுவதும் துர்நாற் றம் வீசும் நிலை ஏற்படுகிறது.
தற்போது இறந்த கன்றுக்குட்டி யினை சாலையோரம் வீசிவிட்டு சென்றுள்ளனர். மேலும் அங்கு மருத்துவக்கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளது.
கழிவுகளை கொட்டும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்திள்ளனர்.
- நிலத்தை ஆக்கிரமித்து அரசு நூலகம் கட்டுவதாக புகார்
- நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் அருகே உள்ள அரியூரை சேர்ந்த சூரிய நாராயணன் (வயது 62) இவர் இன்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் முன்பு தரையில் அமைந்து தனியாக போராட்டத்தில் ஈடுபட்டார்.
சத்துவாச்சாரி போலீசார் வந்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது அரியூரில் எனது தந்தை சிவானந்த முதலியாருக்கு சொந்தமான 14 சென்ட் காலி இடத்தை அரசு ஆக்கிரமித்து பொது நூலகம் கட்டி வருகின்றனர்.
நான் அரசு அதிகாரிகளிடம் சென்று முறையிட்டும் அதிகாரிகள் இந்த இடம் அரசுக்கு சொந்தமானமதாக அலட்சியமான பதிலை கூறுகிறார்கள்.
தாசில்தார், கிராம நிர்வாகி, கலெக்டர் ஆகியோரிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை, இந்த சொத்துக்குரிய ஆவணங்கள் அனைத்தும் இன்று வரை எனது தந்தை சிவானந்த முதலியார் பெயரில் உள்ளதிற்கான அனைத்து முறையான ஆவணங்கள் எங்களிடம் உள்ளது.
சர்வேயருக்கு பணம் கட்டியும் அவர் இதுநாள்வரை அளப்பதற்கு வரவில்லை. ஆகையால் சம்மந்தப்பட்ட அதிகாரி மேற்படி நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் எனக் கூறினார்.
இதையடுத்து அவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு சென்றார்.
- மகனின் கண்முன்னே துடித்துடித்து இறந்த பரிதாபம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஏரிபுதூர் கிராமத்வதை சேர்ந்தவர் விஜயன் (வயது 40). இவருக்கு ஜெயப்பிரியா என்ற மனைவியும், 2 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர்.
இவர் அருகில் இருக்கும் ஊர்களுக்கு சென்று ஊசி மணிகளை விற்பனை செய்து வந்தார்.
அதே பகுதியில் எதிர் வீட்டில் வசிக்கும் தங்கராஜ் என்பவர் வீட்டில் மின்சாரம் வரவில்லை என கூறப்படுகிறது. அதனை சீர் செய்வதற்காக விஜயன் சென்றார். அப்போது அங்குள்ள கம்பியில் மின்சாரம் பாய்ந்தது தெரியமால் அதனை பிடித்தார்.
இதில் மின்சாரம் தாக்கி தன் 5 வயதுடைய மகனின் கண்முன்னே துடித்துடித்து விஜயன் பரிதாபமாக இறந்தார்.
இதனை பார்த்த சிறுவன் அப்பா அப்பா என கதறி அழுத சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.
அவரை மீட்டு பரிசோதனை செய்து பார்த்த போது அவர் மின்சாரம் தாக்கி இறந்து இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தகவலறிந்து வந்த அணைக்கட்டு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விஜயனின் மனைவி ஜெயப்பிரியா கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவம் குறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
- அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்
- கலெக்டர் அறிக்கை
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டத்தில், எருதுவிடும் விழா நடத்துவது தொடர்பாக அரசினால் தெரிவித்துள்ள கட்டுபாடுகள், நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றி விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
அனுமதி அளிக்கபட்ட கிராமங்களில் மட்டுமே எருதுவிடும் விழாக்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஒரு சில கிராமங்களில் கட்சி சார்பாகவும், அமைப்புகள் சார்பாகவும் மாடு விடும் விழா நடத்தப்படும் என சுவரொட்டிகள், பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படுவது தெரியவருகின்றது.
இது நெறிமுறைகளை மீறிய செயலாகும். கட்சி சார்பாகவும், அமைப்புகள் சார்பாகவும் சுவரொட்டிகள், பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு எருதுவிடும் விழா நடத்தப்படுவது கண்டறியப்பட்டால் அந்த விழாவினை தடைசெய்வதுடன், இனி வருங்காலங்களில் அந்த கிராமத்தின் பெயரை அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்ப இயலாது. அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடித்து எருதுவிடும் விழாவினை விழாக்குழுவினர்கள் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






