என் மலர்
வேலூர்
- ஒடுகத்தூர் பேரூராட்சி கூட்டம் நடந்தது
- பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சத்தியவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார், செயல் அலுவலர் உமாராணி முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு துணைத் தலைவர் ரேணுகாதேவி பெருமாள்ராஜா அனைவ ரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் சரவணன் முக்கிய தீர்மானங்களை வாசித்தார். அதில் தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒடுகத்தூர் பேரூராட்சியில் ஒட்டுமொத்தமாக பணிகளை மேற்கொள்ள ரூ.86.2 லட்சம் நீதி ஒதுக்கீட்டில் ஒப்பந்த தாரருக்கு பணி உத்தரவு வழங்க 15 வார்டு கவுன்சில ர்களின் ஒப்புதலுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேரூரா ட்சிக்கு ட்பட்ட 15 வார்டு களிலும் மழைநீர் வடிகால் அமைத்தல், எரி மேடை அமைத்தல், தெரு விளக்கு அமைத்தல், குடிநீர் வசதிகள், சாலை அமைத்தல், சமுதாயக்கூ டம், பொது கழிப்பிடம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஏகமனதாக தீர்மானி க்கப்பட்டது.கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
- தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 50).வேலூர் மாநகராட்சியில் துப்புரவு ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவர் இன்று காலை கழிஞ்சூரில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாஸ்கரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில் தண்டவாள பகுதியில் பொதுமக்கள் எந்த காரணத்தை கொண்டும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
- ஆக்கிரமிப்புகள் அகற்றி வலியுறுத்தல்
குடியாத்தம்:
குடியாத்தம் நகரமன்ற அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, பொறியாளர் பெ.சிசில்தாமஸ்,நகராட்சி மேலாளர் சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கெங்கையம்மன் கோவில் அருகே ஆற்றின் குறுக்கே நீர் போக்குகளுடன் கூடிய தரைப்பாலம், தாழையாத்தம் முதல் சேம்பள்ளி ஆற்றங்கரை வரை சாலை மற்றும் நடைபாதை அமைக்க 47 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்த தமிழக முதல்-அமைச்சர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், வேலூர் எம்.பி.கதிர்ஆனந்த், குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன் ஆகியோர்களுக்கு குடியாத்தம் நகரமக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு குடியாத்தம்- வேலூர் செல்லும் சாலையில் நகராட்சி எல்லைக்குள் நூற்றாண்டு பிறந்தநாள் நினைவு வளைவு அமைத்திட வேண்டும்.
குடியாத்தம்-மேல்பட்டி செல்லும் சாலைக்கு சுதந்திரபோராட்ட தியாகி அண்ணல்தங்கோ பெயரும், அண்ணாசிலை முதல் சந்தைப்பேட்டை வரை பேரறிஞர் அண்ணா சாலை என்ற பெயரும், பெரியார் சிலை முதல் புதிய பஸ்நிலையம் வரை பெரியார் சாலை எனவும் பெயர் வைக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
குடியாத்தம் நகரில் உள்ள முக்கிய பெரிய கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றி கழிவுநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என நகரமன்ற தலைவர் தெரிவித்தார்.
- தம்பதி காயம்
- பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய டிரைவர் கைது
குடியாத்தம்:
குடியாத்தத்தம் அடுத்த குளிதிகைகிராமத்தை சேர்ந்த வர் லட்சுமணன். (வயது 42), தூய்மை பணியாளராக வேலைபார்த்து வருகிறார். இவர் தனது மனைவி வெண் மதியுடன் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கி ளில் குடியாத்தம்- மாதனூர் சாலையில் உள்ளி மேம்பா லத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மாதனூரில் இருந்து குடியாத்தம் நோக்கி கார் ஒன்று வேகமாக தாறு மாறாக வந்துள்ளது.
இந்த கார் ரெயில்வே மேம் பாலம் அருகே லட்சுமணன் ஓட்டி வந்த மோட்டார் சைக் கிள் மீது மோதியது. இதில் கணவன், மனைவி இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். இதனை கண்ட அவ்வ ழியாக சென்ற பொதுமக்கள், அவர்கள் இருவரையும் மீட்ட னர். அப்போது காரை தாறு மாறாக ஓட்டி வந்த நபர் குடி போதையில் இருந்து உள் ளார். அவர் பொதுமக்களை பட்டா கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.
உடனடியாக பொதுமக்கள் இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத் திற்கு தகவல் தெரிவித்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரம ணியம், சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று கத்தியை காட்டி மிரட்டிய நபரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் மாதனூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் மோகன்குமார் (27) என்பது தெரியவந்தது.
இவர் மீது ஆம்பூர் போலீஸ் நிலை யத்தில் கொலை வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளதும், குடிபோதையில் காரை ஓட்டி வந்தபோது மோட்டார் சைக்கிள் மீது மோதி, கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டியதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து மோகன்குமாரை கைது செய்து, அவர் ஓட்டி வந்த கார் மற்றும் பட்டாக் கத்தியை பறிமுதல் செய்தனர்.
- மத்திய ரெயில்வே மந்திரிக்கு கதிர் ஆனந்த் எம்.பி. கடிதம்
- மக்களின் மிக அவசர மற்றும் முக்கியமான கோரிக்கையாகும் என தகவல்
வேலூர்:
சென்னை- மைசூர் வந்தே பாரத் ரெயிலுக்கு காட்பாடி சுற்றுப்புற மக்கள் பெரும் ஆதரவை அளித்து வருவதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னை - கோவை இடையே விரைவில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இந்த வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. சென்னையில் இருந்து புறப்பட்ட வந்தே பரத் ரெயில் காலை 7.5 மணிக்கு காட்பாடியை கடந்து சென்றது.
கோவையில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரெயில் மாலை 5 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்தை கடந்து சென்றது.
இந்த ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காட்பாடி ரெயில் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக வேலூர் தி.மு.க., எம் பி கதிர் ஆனந்த் மத்திய ரெயில்வே மந்திரி ஸ்ரீ அஸ்வினி வைஷ்ணவுக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில் கூறி இருப்பதாவது;
சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகப்படு த்தப்பட்டதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
எனது வேலூர் மக்களவைத் தொகுதி மக்களின் சார்பாக, சென்னை - கோவை வந்தே பாரத் ரெயில் காட்பாடி அல்லது வாணியம்பாடி அல்லது ஆம்பூர் ஆகிய இடங்களில் நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இது இப்பகுதியில் வாழும் மில்லியன் கணக்கான மக்களின் மிக அவசர மற்றும் முக்கியமான கோரிக்கையாகும்.
எனவே சென்னை-கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் விரைவு ெரயிலுக்கு காட்பாடி அல்லது வாணியம்பாடி அல்லது ஆம்பூரில் நிறுத்தத்தை ஏற்படுத்துமாறு மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 20-ந் தேதிக்குள் முடிக்க உத்தரவு
- அதிகாரிகள் பலர் உடன் சென்றனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம் மேல்மொணவூர் பகுதியில் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்காக ரூ.11 கோடி மதிப்பீட்டில் 220 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகளை விரைந்து முடிக்கவும் இப்பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, தெருவிளக்குகள் போன்ற பணிகளையும், கட்டுமான பணிகளுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
அனைத்து பணிகளையும் வருகிற 20-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் கவிதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, செயற்பொறியாளர் செந்தில்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
- 50-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்
- அதிகாரிகளிடம் ஏலத்தாரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட வாரச் சந்தைகளில் பெரிய சந்தையானது பொய்கை மாட்டுச்சந்தை ஆகும்.
இவை கடந்த மாதம் முதலே 2023- 24 -ஆம் ஆண்டுக்கான ஏலம் விடுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டிருந்தது. 4 முறை ஏலம் விடப்பட்டு அரசுக்கு சராசரியான தொகை வரவில்லை எனவும் பலதரப்பட்ட காரனத்திற்க்காகவும் ஏலம் தள்ளி வைக்கப்பட்டது. மீண்டும் நேற்று 5 வது முறையாக ஏலம் விடப்பட்டது. இதில் அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி தலைமையிலும், அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் குமார பாண்டியன், மேளாலர் சத்தீஸ்குமார், பொய்கை ஊராட்சிமன்ற தலைவர் பி.கே வெங்கடேசன் ஆகியோரின் முன்னிலையிலும் நடைப்பெற்றன.
இதில் சுமார் 23 ஏலத்தாரர்கள் முன்பணமாக ரூ.15 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் ஏலத்தாரர்களாக கலந்து கொண்டனர். முதலில் பொய்கை மாட்டுச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும், இதனை அடுத்து பொய்கை ஊராட்சியில் நடக்கும் மாட்டுச்சந்தைக்கு சத்தியமங்கலம் கிராமங்கள் வழியாகவே வாகனங்கள் வந்து செல்கின்றன.
இதனால் சத்தியமங்கலம் ஊராட்சிகளில் சாலை போக்குவரத்து நெரிசல் மற்றும் அசுத்தம் ஏற்படுகிறது எனவும் சத்தியமங்கலம் ஊராட்சி சேர்ந்தவர்கள் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.
மேலும் பொய்கை சந்தையில் விடப்படும் ஏலத்தில் நிதி ஒதுக்கும் போது சத்தியமங்கலம் ஊராட்சிக்கும் சேர்த்து நிதி ஒதுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் ஏலத்தாரர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து முதலில் குறைந்தபட்ச ஏலத் தொகை ரூ. 65 லட்சத்திலிருந்து கேட்கப்பட்டது தொடர்ந்து ஏலத்தரர்கள் ஏலம் கேட்டு வந்த நிலையில் ரூ. 80 லட்சத்து ஓராயிரம் என ஏலம் கேட்கப்பட்டது. இதில் 18 சதவீதம் ஜிஎஸ்டி மற்றும் இரண்டு சதவீதம் வருமான வரி ஆகியவை சேர்த்து ரூ. 96 லட்சத்து ஆயிரத்து 200 ரூபாய்க்கான பொய்கை ஊராட்சியை சேர்ந்த லோகநாதன் என்பவர் ஏலத்தை எடுத்தார்.
அரசுக்கு சராசரி தொகை வந்துவிட்டதாக லோகநாதன் என்பவருக்கு பொய்கை மாட்டுச் சந்தை ஏலம் வழங்கப்பட்டது. இதில் 50 க்கும் மேற்பட்ட ஏலத்தாரர்கள் கலந்துக்கொண்டனர்.
- தெற்கு ெரயில்வே பொது மேலாளர் தகவல்
- ரூ.330 கோடியில் பணிகள் நடக்கிறது
வேலூர்:
காட்பாடி ரெயில் நிலையம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுகிறது. இந்தவழியாக தினமும் 120-க்கும் அதிகமான ரெயில்கள் சென்னை, ஜோலார்பேட்டை, திருப்பதி உள்ளிட்ட ஊர்கள் மார்க்கமாக இயக்கப்படுகின்றன. இதனால், எப்போதும் பயணிகள் நிறைந்து காணப்படும்.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள ரெயில நிலையங்களை மேம்படுத்த ரெயில்வே துறை திட்டமிட்டது. அதேநேரம், பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அந்தவகையில், முதல்கட்டமாக 50 ரெயில் நிலையம் சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதில், தமிழகத்தில் காட்பாடி, சென்னை எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய 5 ரெயில் நிலையம் அடங்கும். மேலும், இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன்படி, காட்பாடி ரெயில் நிலையத்தில் 330 கோடி ரூபாயில் சீரமைப்பு செய்யும் பணிகள், கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இந்நிலையில், தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் குசல் கிஷோர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வுசெய்தனர்.
இதில், ஆர்பிஎப் குடியிருப்பு மற்றும் அலுவலகம் அமையவுள்ள இடம், ரெயில்வே அலுவலர்கள் குடியிருப்பு மற்றும் அலுவலகம், பயணிகள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வாயில் அமையவுள்ள இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
1-வது பிளாட்பாரம் முழுதும் இடிக்கப்படவுள்ளதால் அதையும் பார்வையிட்டதோடு, இந்த பணிகளை ஏப்ரல் முதல்வாரத்தில் தொடங்க அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, காட்பாடி ரெயில் நிலைய மேலாளர் நீலமேகன் உடனிருந்தார்.
- வேலூர் பிராமணர் சங்கத்தின் சார்பில் பரிசு வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் பிராமணர் சங்கத்தின் சார்பில் பரதநாட்டிய கலைஞருக்கு பாராட்டு விழா மற்றும் ரொக்கப் பரிசு வழங்கும் விழா நேற்று சத்துவாச்சாரியில் நடைபெற்றது.
விழாவிற்கு வேலூர் பிராமணர் சங்கத்தின் கிளைத் தலைவர் ஆர். மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். மகளிரணி செயலாளர் மாலதி சத்தியமூர்த்தி வரவேற்று பேசினார். பொருளாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சிக்கு வேலூர் கிளை பிராமணர் சங்கத்தின் ஆலோசகர் அ. சத்தியமூர்த்தி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.
மாவட்ட அளவில் சிறந்த பரதநாட்டிய கலைஞருக்கான சிறப்பு விருது, பொற்கிழி மற்றும் கலை வளர்மணி என்ற பட்டம் பெற்ற செல்வி. ர. வர்சிதா என்பவரது திறமையை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டதை பாராட்டும் வகையில், வேலூர் பிராமணர் சங்கம் சார்பில் பாராட்டுச் சான்று மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது. செய்தி தொடர்பாளர் க.ராஜா நன்றி கூறினார்.
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
- நெல்வாய் ஸ்ரீபட்டாபிராமசாமி கோவிலில் நடந்தது
அணைக்கட்டு:
ராம நவனியை முன்னிட்டு ஸ்ரீ ராம பெருமாள், சீதைக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.
வேலூர் மாவட்டம் நெல்வாய் கிராமத்தில் அமைந்திருக்கும் 750 வருடங்கள் வரலாற்று சிறப்பு மிக்க பழமை வாய்ந்த ஸ்ரீபட்டாபிராமசாமி பெருமாள் கோவிலில் ஸ்ரீராமநவமியை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.
புனர்பூசம் நட்சத்திரத்தில், ஸ்ரீ பட்டா பிராமசாமி பெருமாளுக்கு அதிகாலையில் பால், பழம், தேன் கொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து மாலை ஸ்ரீராமருக்கு காப்புக்கட்டுதல் வைபோவம் நடைபெற்றது. அதன்பின் ஸ்ரீராமபெருமாளுக்கும் அன்னை சீதைக்கும் ராஜ அலங்காரத்துடன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
அதற்கு முன்னதாக பட்டாட்சியர்களால் நடனமாடி ஸ்ரீராமபெருமாளுக்கும் சீதைக்கும் மாலை மாற்றுதல் வைபவம் நடைபெற்றது. இதில் சீதை நடனம் ஆடிய நிலையில் கொண்டுவரப்பட்டார்.
இந்த திருக்கல்யாண நிகழ்வில் நெல்வாய் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிளில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீராமர் சீதை திருக்கல்யாண வைபவத்தில் கலந்துகொண்டு கல்யாணத்தை கண்டுகளித்து தரிசனம் செய்து சென்றனர்.
பின்னர் திருக்கல்யாணம் கான வந்த அனைத்து பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.
- காலாவதியான சுங்க சாவடிகளை மூடக்கோரி நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு சாலை போக்குவரத்து சங்க மாவட்ட தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் முரளி, பரசுராமன் மாவட்ட துணை தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும் ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் காலாவதியான சுங்க சாவடிகளை மூட வேண்டும் அடிக்கடி சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உடல் முழுவதையும் மறைக்கும் வகையில் சில பெண்கள் உடையணிந்து தங்களது காதலர்களுடன் வந்து பேசிக் கொண்டிருந்தனர்.
- வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
வேலூர்:
வேலூர் கோட்டைக்கு ஏராளமான காதல்ஜோடிகள் வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் வேலூர் கோட்டைக்கு முகம் உள்பட உடல் முழுவதையும் மறைக்கும் வகையில் சில பெண்கள் உடையணிந்து தங்களது காதலர்களுடன் வந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வாலிபர்கள் சிலர் அந்த காதல் ஜோடிகளை வீடியோ எடுத்து விரட்டினர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காதல் ஜோடிகளை அத்துமீறி வீடியோ எடுத்தது வேலூரை சேர்ந்த சந்தோஷ் (வயது 22), கணியம்பாடியை சேர்ந்த இர்பான்பாஷா, கருகம்புத்தூரை சேர்ந்த இப்ராஹிம்பாஷா (24), கொணவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் (20), முகமதுபயாஸ் (22), ஆஜ்புராவை சேர்ந்த அஷ்ரம்பாஷா (20) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களை வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்டவர்களின் தரப்பை சேர்ந்தவர்கள் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் திரண்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கைதானவர்களை போலீசார் வேலூர் கோர்ட்டுக்கு பலத்த காவலுடன் அழைத்து சென்று ஆஜர்படுத்தி சிறுவனை தவிர 6 பேரை ஜெயிலில் அடைத்தனர். இதற்கிடையே வீடியோவை பரப்புபவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.






