ரூ.86.2 லட்சத்தில் புதிய திட்ட பணிகள் மேற்கொள்ள ஒப்புதல்

ஒடுகத்தூர் பேரூராட்சி கூட்டம் நடந்தது பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
ஒடுகத்தூர் பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்த காட்சி.
ஒடுகத்தூர் பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்த காட்சி.
Published on

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சத்தியவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார், செயல் அலுவலர் உமாராணி முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு துணைத் தலைவர் ரேணுகாதேவி பெருமாள்ராஜா அனைவ ரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் சரவணன் முக்கிய தீர்மானங்களை வாசித்தார். அதில் தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒடுகத்தூர் பேரூராட்சியில் ஒட்டுமொத்தமாக பணிகளை மேற்கொள்ள ரூ.86.2 லட்சம் நீதி ஒதுக்கீட்டில் ஒப்பந்த தாரருக்கு பணி உத்தரவு வழங்க 15 வார்டு கவுன்சில ர்களின் ஒப்புதலுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரூரா ட்சிக்கு ட்பட்ட 15 வார்டு களிலும் மழைநீர் வடிகால் அமைத்தல், எரி மேடை அமைத்தல், தெரு விளக்கு அமைத்தல், குடிநீர் வசதிகள், சாலை அமைத்தல், சமுதாயக்கூ டம், பொது கழிப்பிடம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஏகமனதாக தீர்மானி க்கப்பட்டது.கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com