என் மலர்tooltip icon

    வேலூர்

    • 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் லால் பகதூர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.மாவட்ட போராட்ட குழு தலைவர் ரவி வரவேற்பு உரையாற்றினார். முன்னாள் மாநில துணைத்தலைவர் தர்மலிங்கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

    விவசாய கடன், நகை கடன் மற்றும் மகளிர் சுய உதவி கடன் தள்ளுபடிக்குரிய தொகையினை வட்டியுடன் முழுமையாக வழங்கப்பட வேண்டும். ரேசன் கடை பணியாளர்களின் பல்வேறு பிரச்சினைகளை குழு அமைத்து தீர்த்திட வேண்டும். ஒரு துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கடன் தள்ளுபடி விதிமீறல் நகை ஏல நடவடிக்கையில் நஷ்டம் என்று பணியாளர்களின் ஓய்வு கால நிதி பயன்களை நிறுத்தக்கூடாது.

    பொதுப்பணி நிலை த்திறனில் உள்ள குள றுபடிகளை தீர்க்க வேண்டும்

    .ஓய்வூதியம் கருணை ஓய்வூதியம் அரசு ஆணைப்படி பணியாளர்களுக்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து தற்போது ஓய்வு பெற்றுள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற சங்க பொறுப்பாளர்கள் மாணிக்கம், வேலாயுதம், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • லாரி பறிமுதல்
    • கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த தட் டாங்குட்டை ஏரிக்கரை பகுதியில் ரேஷன் அரி சியுடன் மினி லாரி ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இத னைத்தொடர்ந்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் தட்டாங்குட்டை ஏரி பகுதிக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது ஏரிக்கரை பகுதியில் கர்நாடக மாநில பதிவெண் கொண்ட லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

    போலீசார் அந்த லாரியை சோதனை செய்தபோது லாரியில் 40-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் 2 டன் ரேசன் அரிசி இருந்தன. இதனை தொடர்ந்து போலீசார் ரேசன் அரிசி மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண் ணன் உத்தரவின் பேரில் பிடிபட்ட ரேசன் அரிசி மற்றும் லாரியை மேல் நடவடிக்கையாக வேலூர் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • ஆஞ்சநேயர் சிலையையும் சேதப்படுத்தி சென்ற மர்மகும்பல்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் கிராமத்தில் ஆர்.எம்.பி. நகரில் ஸ்ரீ குரு ராகவேந்திரர் சுவாமி ம்ருத்திகா பிருந்தாவன கோவில் உள்ளது.

    நேற்று மாலையில் கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் நிர்வாகிகள் வந்துள்ளனர். அப்போது கோவிலின் நுழைவாயிலில் இருந்த ஆஞ்சநேயர் சிலையின் வலது கை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

    கண்டு அதிர்ச்சிய டைந்துள்ளனர். உள்ளே சென்று பார்த்த போது கோவிலின் கதவின் பூட்டு உடைக்கப்படும், பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் சிதறி இருந்தது. உண்டியல் உடைக்கப்பட்ட அதிலிருந்து பணமும் திருடப்பட்டு இருந்தது தெரிந்தது. இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் கோவில் நிர்வாகிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உள்ள வர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம்-வேலூர் செல்லும் முக்கிய சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் சிலையை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • யார்? என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் கோட்டை அகழியில் பெண் பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் கோட்டை யில் கடந்த வாரம் காதல் ஜோடியிடம் சிலர் அத் துமீறி மிரட்டல் விடுத்து பேசும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இச்சம்ப வம் தொடர்பாக 17 வயது சிறுவன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் வேலூர் கோட்டையில் கண்கா ணிப்பு கேமரா, புறக்கா வல் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வேலூர்

    கோட்டை அகழியில் நேற்று காலை 9 மணி யளவில் படகு சவாரி நடைபெறும் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் மிதப்பதாக வேலூர் வடக்கு போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீ சாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அகழியில் மிதந்த பெண்ணின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

    போலீசார் பிரேத பரிசோதனைக் காக உடலை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? சமீபத்தில் காணாமல் போன பெண்களின் விவரங்கள் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டிற்கு சுண்ணாம்பு அடித்து கொண்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அருணாசலநகர் கம்பர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 50). பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    குடியாத்தம் அடுத்த செதுக்கரை பொன்னம்பட்டி பகுதியில் சீனிவாசன் புதிதாக வீடு கட்டி வருகிறார். வீட்டிற்கு அவரே சுண்ணாம்பு அடித்து வந்தார்.

    நேற்று வழக்கம்போல் வீடு கட்டும் பணியில் பணியாளர்கள் இருந்துள்ளனர். அதன் பின்னர் பணியாளர்கள் சென்ற பின்னர் சீனிவாசன் மட்டும் தனியே வீட்டிற்கு சுண்ணாம்பு அடித்து கொண்டிருந்தனர்.

    மாலை நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சீனிவாசனின் குடும்பத்தினர் வீடு கட்டும் இடத்திற்கு வந்து பார்த்துள்ளனர்.

    அப்போது வீட்டில் மோட்டர் போட சென்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி சீனிவாசன் இறந்தது தெரியவந்தது.

    இச்சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற டவுன் போலீசார் சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்க ம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறப்பு பூஜைகள் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த விரிஞ்சிபுரம் மார்க்க பந்தீஸ்வரர் கோவில் உள்ளது.

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்றம் தொடங்கி பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறும்.

    இன்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆரா தனைகள் செய்யப்பட்டு தேரோட்டம் நடந்தது. மார்க்கபந்தீஸ்வரர் திருத்தேரில் ஏற்றி பக்தர்கள் அரோகரா கோஷங்களுடன் வடம்பிடித்து மாட வீதியில் சுவாமி வலம் வந்தது.இரவு 8 மணி வரை தேரோட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேரோட்டத்தை ரத்தினகிரி பாலமுரு கனடிமை சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்து தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    இதில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அசோகன், அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் மற்றும் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

    • சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் பகுதிகளில் உள்ள சர்ச்சுகளில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    குருத்தோலை ஞாயிறு முன்னிட்டு அதிகாலை முதலே சர்ச்சுகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சிஎஸ்ஐ நல்மேய்ப்பர் ஆலயத்தில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான கிறிஸ்தவர்கள் திரண்டனர்.

    தொடர்ந்து நல் மேய்ப்பர் ஆலய ஆயர் நோவாஜேம்ஸ் தலைமையில் சபை செயலாளர் சி.சுதாசந்தர், பொருளாளர் ஜெ.ஜோன்ஸ் ஆனந்தகுமார் மற்றும் திருச்சபை மக்கள் கலந்து கொண்ட குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நல் மேய்ப்பர் ஆலயத்தை வந்தடைந்தது தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    குடியாத்தம் நகரின் பல பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு முன்னிட்டு ஊர்வலமும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    • வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதி
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த அக்ராவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 78) முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.

    நேற்று மதியம் ஜெயராமன் அக்ராவரம் ஏரிக்கரை பகுதியில் பூச்சி மருந்து குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் விரைந்து சென்று மயங்கிய நிலையில் இருந்த ஜெயராமனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

    ஆம்புலன்சில் வந்தவர்கள் ஜெயராமனை பரிசோதனை செய்தனர். அப்போது ஜெயராமன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசில் அவரது மகன் சரவணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் ஜெயராமன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னையில் பிடிபட்டனர்
    • பார்ஸ்டல் சிறைக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை

    வேலூர்:

    வேலூர் காகிதப்ப ட்டறையில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் அரசினர் பாதுகாப்பு இல்லம் செயல்படுகிறது. பல வகையான குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை வரும் சிறுவர்கள் 42 பேர் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதில் ஏ பிளாக்கில் 28 பேரும் பிளாக்கில் 12 பேர் உள்ளனர்.

    இவர்களில் 6 பேர் காவலர்களை தாக்கிவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தப்பி சென்று விட்டனர். அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

    இது தொடர்பாக வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இவர்கள், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    வேலூர், காட்பாடியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதன் மூலம் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்ற அவர்கள் அங்கிருந்து சென்னை சென்ற ரெயிலில் தப்பி சென்றது தெரிய வந்தது. மேலும் சிறுவர்களின் சொந்த ஊர்களிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு சிறுவனை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் 5 பேரை தேடி வந்தனர்.

    சென்னை மணலி மற்றும் கோயம்பேடு பகுதியில் சிறுவர்கள் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று இரவு தனிப்படை போலீசார் அங்கு அதிரடி வேட்டை நடத்தினர்.அப்போது கோயம்பேட்டில் பதுங்கி இருந்த ஒரு சிறுவன் மற்றும் மணலியில் பதுங்கி இருந்த 4 சிறுவர்கள் போலீசாரிடம் சிக்கினர். அவர்களை வேலூருக்கு அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளனர்.

    அதேபோல், பாதுகாப்பு இல்லத்தின் 'ஏ' பிளாக்கில் உள்ள பொருட்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டதாக 12 பேர் மீது வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய 12 பேரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று தெரியவந்தது. இவர்கள் 12 பேரையும் பார்ஸ்டல் சிறைக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

    • சிறுவர்களின் சொந்த ஊர்களிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    • பாதுகாப்பு இல்லத்தின் ’ஏ’ பிளாக்கில் உள்ள பொருட்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டதாக 12 பேர் மீது வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    வேலூர்:

    வேலூர் காகிதப்பட்டறையில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் அரசினர் பாதுகாப்பு இல்லம் செயல்படுகிறது. பல வகையான குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை வரும் சிறுவர்கள் 42 பேர் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதில் ஏ பிளாக்கில் 28 பேரும் பிளாக்கில் 12 பேர் உள்ளனர்.

    இவர்களில் 6 பேர் காவலர்களை தாக்கிவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தப்பி சென்றுவிட்டனர். அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

    இது தொடர்பாக வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இவர்கள், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    வேலூர், காட்பாடியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதன் மூலம் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்ற அவர்கள் அங்கிருந்து சென்னை சென்ற ரெயிலில் தப்பி சென்றது தெரிய வந்தது. மேலும் சிறுவர்களின் சொந்த ஊர்களிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு சிறுவனை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் 5 பேரை தேடி வந்தனர்.

    சென்னை மணலி மற்றும் கோயம்பேடு பகுதியில் சிறுவர்கள் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று இரவு தனிப்படை போலீசார் அங்கு அதிரடி வேட்டை நடத்தினர். அப்போது கோயம்பேட்டில் பதுங்கி இருந்த ஒரு சிறுவன் மற்றும் மணலியில் பதுங்கி இருந்த 4 சிறுவர்கள் போலீசாரிடம் சிக்கினர். அவர்களை வேலூருக்கு அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளனர்.

    அதேபோல், பாதுகாப்பு இல்லத்தின் 'ஏ' பிளாக்கில் உள்ள பொருட்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டதாக 12 பேர் மீது வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய 12 பேரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று தெரியவந்தது. இவர்கள் 12 பேரையும் பார்ஸ்டல் சிறைக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

    • அதிகாரிகள் பேச்சுவார்த்தை
    • போக்குவரத்து பாதிப்பு

    வேலூர்:

    வேலூர் அப்துல்லாபுரத்தில் இருந்து அணைக்கட்டு செல்லும் சாலையில் உள்ள இலவம்பாடியில் அந்த ஊராட்சியின் சார்பில் பசுமை பூங்கா அமைக்க முடிவு செய்தனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள ஓடை புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பழனி என்பவர் விவசாயம் செய்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பசுமை பூங்கா பணிகள் அந்த இடத்தில் தொடங்கப்பட்டது.அப்போது விவசாயி பழனி இந்த இடத்தை தனக்கு விட்டு தர வேண்டும் எனக் கூறி பணியை தடுத்து நிறுத்த முயன்றார்.

    இந்த நிலையில் இன்று காலை பழனி மற்றும் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் 10 பேர் இலவம்பாடியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வேலூர் அணைக்கட்டு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர். போக்குவரத்து சீரானது.

    தொடர்ந்து வருவாய் துறையினர் விவசாயி பழனியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வீட்டின் கதவை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் ராஜாஜி பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது 43). இவர் பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இன்று காலை இவர் குடும்பத்துடன் பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார்.

    அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. அதிலிருந்த 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரம், ஒரு ஜோடி வெள்ளி குத்து விளக்கு மற்றும் அரிசி மூட்டையை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

    இது குறித்து சுந்தரராஜன் பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×