என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்"

    • நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
    • ஆக்கிரமிப்புகள் அகற்றி வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகரமன்ற அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, பொறியாளர் பெ.சிசில்தாமஸ்,நகராட்சி மேலாளர் சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கெங்கையம்மன் கோவில் அருகே ஆற்றின் குறுக்கே நீர் போக்குகளுடன் கூடிய தரைப்பாலம், தாழையாத்தம் முதல் சேம்பள்ளி ஆற்றங்கரை வரை சாலை மற்றும் நடைபாதை அமைக்க 47 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்த தமிழக முதல்-அமைச்சர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், வேலூர் எம்.பி.கதிர்ஆனந்த், குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன் ஆகியோர்களுக்கு குடியாத்தம் நகரமக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு குடியாத்தம்- வேலூர் செல்லும் சாலையில் நகராட்சி எல்லைக்குள் நூற்றாண்டு பிறந்தநாள் நினைவு வளைவு அமைத்திட வேண்டும்.

    குடியாத்தம்-மேல்பட்டி செல்லும் சாலைக்கு சுதந்திரபோராட்ட தியாகி அண்ணல்தங்கோ பெயரும், அண்ணாசிலை முதல் சந்தைப்பேட்டை வரை பேரறிஞர் அண்ணா சாலை என்ற பெயரும், பெரியார் சிலை முதல் புதிய பஸ்நிலையம் வரை பெரியார் சாலை எனவும் பெயர் வைக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

    குடியாத்தம் நகரில் உள்ள முக்கிய பெரிய கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றி கழிவுநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என நகரமன்ற தலைவர் தெரிவித்தார்.

    ×