என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலையோரம் வீச்சு"

    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
    • குப்பைகளால் வாகன ஓட்டிகள் அவதி

    வேலூர்:

    வேலூர் கருகம்புத்தூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ், சாலையோரம் ஏராளமானவர்கள் குப்பைகளை தொடர்ந்து கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மருத்துவக்கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள் அதிகளவு கொட்டப்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    அதிகாலை மற்றும் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் குப்பைகளை கொண்டு வந்து போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த குப்பைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிக ளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. மேலும் அங்கு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதுதவிர சில நேரங்களில் இறந்த நாய்களின் உடல்களை சாலையோரம் போட்டுவிட்டு செல்கின்றனர். அவை அழுகி அப்பகுதி முழுவதும் துர்நாற் றம் வீசும் நிலை ஏற்படுகிறது.

    தற்போது இறந்த கன்றுக்குட்டி யினை சாலையோரம் வீசிவிட்டு சென்றுள்ளனர். மேலும் அங்கு மருத்துவக்கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளது.

    கழிவுகளை கொட்டும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்திள்ளனர்.

    ×