என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துப்புரவு பணிகளில் ஒப்பந்த முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
    X

    துப்புரவு பணிகளில் ஒப்பந்த முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியர் துப்புரவு தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் குடியாத்தம் நகராட்சி அலுவலகம் முன்பாக ஒப்பந்த முறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் கே. சாமிநாதன் தலைமை தாங்கினார்.நிர்வாகிகள் எம்.முருகானந்தம், டி.பாலகுருவையா, எம். யுவராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்க மாவட்ட தலைவர் எம்.காசி துவக்க உரையாற்றினார்.மாவட்ட செயலாளர் எம்.சரவணன் நிறைவுரை ஆற்றினார்.

    நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பி.காத்தவராயன், மாவட்ட துணை செயலாளர் சி.சரவணன், சங்க செயலாளர் சி.எம். லாரன்ஸ், மாவட்ட துணைத் தலைவர் வி.குபேந்திரன், குணசேகரன், சிலம்பரசன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். சங்கப் பொருளாளர் சி.எம்.தசரதன் நன்றி கூறினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த முறையை ஒழித்திட வேண்டும், ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துக, சட்டப்படி தினக்கூலி தொழிலாளர்களுக்கு ரூ.507 வழங்க வேண்டும்.

    நிரந்தர துப்புரவு தொழிலாளிகள் ஏற்கனவே பணி செய்த பகுதியிலேயே பணி செய்யவும், கூடுதல் தொழிலாளிகளை அவர்களுடன் இணைத்திடு, தனியார் மயமாக்கலை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    Next Story
    ×