என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த நூக்காம்பாடியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). லாரி டிரைவர்.

    வளர்புரத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 23). இவர்கள் இருவருக்கும் பணம் கொடுக்கல் சம்பந்தமாக முன் விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் ராஜேந்திரன் லாரியை ஓட்டிக்கொண்டு வளர்புரத்திற்கு வந்துள்ளார். அப்போது பிள்ளையார் கோவில் அருகே லாரியை நிறுத்தினார்.

    இதனைக் கண்ட பார்த்தசாரதி பணம் சம்பந்தமாக ராஜேந்திரனிடம் தகராறில் ஈடுபட்டார். லாரியின் கண்ணாடியை உடைத்து ராஜேந்திரனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ராஜேந்திரன் செய்யாறு போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து பார்த்த சாரதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • மார்பில் உரல் வைத்து இடித்து பிரசாதம் தயாரிப்பு
    • மொத்தம் ரூ. 21 ஆயிரத்து 900 வருவாய் கிடைத்தது

    கண்ணமங்கலம்:

    போளூர் ஒன்றியத்தில் சந்தவாசல் அடுத்த துரிஞ்சி குப்பம் கீழ்குளக்கரை 8 ஆதிபரா சக்தி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த திருவிழாவில் பக்தரின் மார்பில் உரல் வைத்து இடித்து பிரசாதம் தயாரிக் கப்படும்.

    கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் வடை எடுப்பார்கள். இந்த வடைகள் குழந்தை இல்லாத பெண்களுக்கு ஏலம் விடப்படும்.

    இந்த பிரசாதத்தை சாப்பிடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண் டாகும் என்பது ஐதீகம். அதன்படி ஆதிபராசக்தி அம்மன் கோயிலில் 23-ம் ஆண்டு ஆடிப்பூர திருவிழா நடந்தது. கடந்த வெள்ளியன்று அம்மனுக்கு ஊரணி பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று அதிகாலை அம்மனுக்கு ஆதிஹோமம், மகா அபிஷேகம், மஞ்சள் குடம் சமர்ப்பணம் நடைபெற்றது. மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடித்தல், கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையில் வடை எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த வடையை பக்தர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். முதலாவதாக சுட்ட வடை ரூ.4700, 2-வது வடை ரூ.3800, 3 மற்றும் 4-வது வடை ரூ.3,700, 5-வது வடை ரூ.3300, 6-வது வடை ரூ.1400, 7-வது வடை ரூ.1,300 என வடைகள் ஏலம் விட்டதில் மொத்தம் ரூ. 21 ஆயிரத்து 900 வருவாய் கிடைத்தது.

    மேலும் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் குழந்தையின் எடைக்கு எடை துலாபாரம் செலுத்தி வழிபட்டனர்.

    பின்னர் இரவு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் அம்மன் வீதி உலா வாண வேடிக்கையுடன் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலை மாரியம்மன் கோவில் தெரு அருகில் உள்ள துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி விஜயா. இவர்களது மூத்த மகளான சுகுணாவிற்கும், திருவண்ணாமலை.ராம்ஜி நகரை சேர்ந்த சேகர் என்பவரின் மகனும் சுமை தூக்கும் தொழிலாளியுமான ராம்ஜிக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற் றது. பின்னர் அவர்கள் மாமனார் வீட்டோடு வசித்து வந்தனர்.

    இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராம்ஜி அடிக்கடி குடித்து விட்டு வந்து அவரது மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அவர்க ளுக்கு இடையே சண்டை அதிகமானதால் அவர்களை சுகு ணாவின் தங்கை கல்கி, தடுக்க சென்றார். அப்போது கல்கியை ராம்ஜி கத்தியால் முதுகில் குத்தினார்.

    மேலும் தடுக்க வந்த சுகுணாவின் தாய் விஜயாவையும் அவர் கத்தியால் குத்தினார்.

    இது குறித்து தகவலறிந்த சுகுணாவின் தம்பி பரணி (23), ராம்ஜியிடம் வந்து தட்டி கேட்டு உள்ளார். அவரையும்ராம்ஜி கத்தியால் குத்தி விட்டு தப்பி யோடிவிட்டார். இதில் படுகா யம் அடைந்த பரணி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    படுகாயம் அடைந்த விஜயா, கல்கி ஆகியோர் சிகிச்சைக் காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ராம்ஜியை வலை வீசி தேடி வந்தனர். அவர் அந்த பகுதியில் ரெயில்வே தண்டவளப் பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. நள்ளிரவில் அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    • 4 வாலிபர்கள் கைது
    • ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஒயர்களை மீட்டனர்

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள சுண் டாக்காபாளையம் பகுதியில் தனியார் தொலைபேசி நிறுவ னத்தின் குடோன் செயல் பட்டு வருகிறது. இங்கு சுற்றி லும் கம்பி வேலிகள் அமைக் கப்பட்டு தொலைபேசி வயர் கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

    சம்பவத்தன்று அங்கு வைக்கப்பட்டிருந்த தொலை பேசி ஒயர்களை காண வில்லை என தனியார் நிறுவ னம் சார்பில் புகார் அளிக்கப் பட்டது. இந்த புகார் குறித்து செங்கம் போலீசார் விசா ரணை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கொட்டகு ளம் பகுதியை சேர்ந்த தமிழர சன் (வயது 26), மேர்கன் (27), ரோடுகரியமங்கலம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (27), பெரு மாள் (29) உள்ளிட்ட நாலு பேரை இந்த வழக்கு தொடர் பாக போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

    இதை தொடர்ந்து சிறப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் 4 பேரை யும் கைது செய்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள தொலைபேசி ஒயர்களை மீட்டனர்.

    • கட்டிடம் சீரமைப்பு பணி ஆமை வேகத்தில் நடப்பதாக புகார்
    • நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் வலியுறுத்தல்

    ஆரணி:

    ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே காளசமுத்திரம் ஊராட்சிக்கு பட்ட ரேணுகாபுரம் கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி இயங்கி வருகிறது.

    இதில் 2 ஆசிரியைகளும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை சுமார் 46 மாணவ, மாணவி படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளி கட்டிடம் பழுதுடைந்துள்ளதால் கடந்த கோடை காலத்தில் சீரமைக்கு பணி நடைபெற்றது.

    ஆனால் தற்போது வரையில் சீரமைப்பு பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது . கடந்த ஜூன் மாதம் பள்ளி திறக்கப்பட்டதால் பள்ளி வரும் மாணவர்களை அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் அமர வைத்து பாடம் நடத்துகின்றனர். இதனால் ஆசிரியைகள் பாடம் சரிவர நடத்த முடியாமல் திணறுகின்றனர்.

    இது மட்டுமின்றி மதியம் வெயில் நேரத்தில் மாணவ மாணவிகள் சிரமப்ப டுகின்றனர்.

    இதனால் மாவட்ட நிர்வாகம் கல்வி துறை ஆகியோர் உடனடியாக பள்ளி சீரமைப்பு கட்டிடத்தை விரைந்து முடித்து பள்ளி குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என மாணவ மாணவிகளின் பெற்றோர் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.

    • சக ஊழியர்கள் மீட்டனர்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுக்கா சின்ன ஏழாச்சேரி பெரியார் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30) இவர் அதே பகுதியில் உள்ள கல் குவாரி ஒன்றில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.

    சுரேஷ் நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்குவாரிக்கு வேலைக்கு சென்றார்.

    அப்பகுதியில் மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டரை ஆன் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஜெனரேட்டிலிருந்து வந்த மின்சாரம் சுரேஷ் மீது தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

    உடனிருந்த சக ஊழியர்கள் அவரைக் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் சுரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சுரேசின் தந்தை சீனிவாசன் தூசி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆடி முதல் வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
    • அம்மனை வேண்டிக்கொண்டு உரலில் இடிக்கப்பட்ட மாவை குழந்தை இல்லாத பெண் பக்தர்கள் சாப்பிட்டனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் 19-ம் ஆண்டு ஆடிமாத திருவிழா நேற்று நடைபெற்றது.

    ஆடி முதல் வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பின்னர் அம்மன் வீதியுலா, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

    இதையடுத்து, சு.பொலக்குணம் கிராமத்தில் வசிக்கும் பக்தரின் மார்பு மீது உரல் வைத்து அரிசி, மஞ்சள் ஆகியவை கொட்டப்பட்டு உலக்கையால் மாவு இடிக்கப்பட்டது.

    உரலில் இடிக்கப்பட்ட மாவை உண்ணுபவர்களுக்கு திருமணம் கைகூடும், குழந்தை பேறு உண்டாகும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.

    இதனால், அம்மனை வேண்டிக்கொண்டு உரலில் இடிக்கப்பட்ட மாவை குழந்தை இல்லாத பெண் பக்தர்கள் சாப்பிட்டனர்.

    இதைத்தொடர்ந்து, கோவிலில் அம்மன் ஊஞ்சல் தாலாட்டும், ஆன்மிக சொற்பொழிவு மற்றும் நாடகமும் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

    • இன்று மாலைபராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது.
    • இன்று இரவு அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழாவும் நடைபெறும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஆடிப்பூர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை 6.15 மணிக்கு கடக லக்னத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    இதனை முன்னிட்டு பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

    இன்று மாலை வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது.

    இதனை தொடர்ந்து இரவு அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழாவும் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இன்று முதல் 10 நாட்களுக்கு காலை மற்றும் மாலையில் பராசக்தி அம்மன் மாடவீதி உலா நடைபெறும்

    10-வது நாள் கோவிலில் புனித தீர்த்தவாரி நடைபெறும்.

    ஆடிப்பூர கொடியேற்று விழாவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள் உள்ளிட்ட ஏராளமானமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விடுமுறை தினம் என்பதால் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் கோவிலில் குவிந்திருந்தனர்.

    • ரஜினியுடன் சமூக சேவகர் மணிமாறன் சந்திப்பு
    • ஆம்புலன்ஸ் சாவி, ஆர்.சி.புக், ஆம்புலன்சை எடுத்து செல்ல ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை வழங்கினார்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை சேர்ந்த சமூக சேவகர் மணிமாறன் கடந்த 21 ஆண்டுகளில் 2ஆயிரத்து 46 உடல்களை நல்லடக்கம் செய்து சமூக சேவையில் முத்திரை பதித்துள்ளார்.

    சமூக சேவகர் மணிமாறன் திருவண்ணாமலை மாவட்டம் தலையாம் பள்ளம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி பாண்டுரங்கன் -ராஜேஸ்வரி தம்பதியின் 3-வது மகனாக பிறந்துள்ளார்.

    இவருக்கு லோகநாதன் என்ற அண்ணனும், கலைவாணி என்ற அக்காவும் உள்ளனர்.

    மணிமாறன் 9-ம் வகுப்பு வரை படித்தார். அதன்பின் படிப்பில் நாட்டம் இல்லாததால் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

    அவரிடம் சமூக சேவையில் ஈடுபட்டு வருவது பற்றி கேட்டபோது பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.

    சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் மணிமாறன் சமூக சேவையில் ஈடுபட்டு வருவதை பாராட்டி அவருக்கு பயன்படும் வகையில் ரூ.8லட்சம் மதிப்பிலான ஆம்புலன்சை வழங்கினார்.

    இதுகுறித்து மணிமாறன் கூறியதாவது:-

    நான் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 14-ந்தேதி அன்று முதல் முறையாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தேன்.

    காசியில் எனக்கு கிடைத்த குரு மற்றும் அங்கு ஒரு பெண்ணின் உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட பிரச்சினை, அகோரி பாபா எனக்கு சொன்ன உபதேசங்கள் ஆகியவை குறித்து தெரிவித்தேன்.

    மேலும் எனக்கு குருநாதர் "சிவகர்ம யோகி "என்ற பெயரை சூட்டி 16 ஆண்டுகள் தவ வாழ்க்கை வாழ சொன்னது குறித்து தெரிவித்தேன். தற்போது அவர் சொன்ன 16 ஆண்டுகள் முடிந்து விட்டது.தற்போது 1 ஆண்டு மட்டும் என் விருப்ப படி முடிவெடுத்து கொள்ளலாம்.

    திருமணத்தில் ஆர்வம் இருந்தால் திருமணமும் செய்து கொள்ளலாம்.ஆனால் நீ ஆயுள் முழுவதும் நல்லடக்கம் செய்யும் சேவையை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதும் குருநாதர் கட்டளை என்பதை கூறினேன்.

    உடனே இது கோடியில் ஒருவருக்கு கிடைக்கும் வாய்ப்பு. இது கடவுள் தந்த பரிசு.

    நீங்கள் என்ன உதவி வேண்டும் என்றாலும் என்னிடம் தயங்காமல் கேளுங்கள் என்று ரஜினி காந்த் தெரிவித்தார்.

    அதன் பிறகு கடந்த ஜூன் 22-ந்தேதி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் 2-வது முறையாக ரஜினிகாந்தை சந்தித்தேன்.

    அப்போது ஆம்புலன்ஸ் சாவி, ஆர்.சி.புக், ஆம்புலன்சை எடுத்து செல்ல ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை வழங்கினார்.

    நான் அவரது ஆசிர்வாதம் வேண்டும் என்று கேட்டேன்.அதற்கு உங்களுக்கு எனது முழு ஆசீர்வாதம் என்றும் உண்டு.

    "இந்த ஆம்புலன்சை நான் தந்தேன் என்பதை மறந்து விடுங்கள்.இது அண்ணாமலையார் தந்தது என்று நினைத்து கொள்ளுங்கள்" என கூறி ஆசி வழங்கினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரேத பரிசோதனைக்காக உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு
    • வழக்கு பதிவு செய்து கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்

    போளூர்:

    போளூர் அடுத்த வெண்மணியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 46). கட்டிட தொழிலாளி.

    இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள் உள்ளனர். நேற்று இரவு 7 மணி அளவில் முருகன் பைக்கில் வெண்மணியிலிருந்து வேலை சம்பந்தமாக கரை பூண்டிக்கு சென்றார்.

    வேலைகளை முடித்துக் கொண்டு போளூர் -சேத்துப்பட்டு சாலையில் வந்து கொண்டிருந்தார்.

    வெண்மணி தனியார் பள்ளி அருகே வரும்போது எதிரே வந்த கார் முருகன் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து போளூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    • நாளை தொடங்குகிறது
    • சிவன் கோவில்களில் தீமிதி விழா

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோ றும் ஆடிப் பூரம் பிரமோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டு ஆடிப்பூரம் பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அதையொட்டி, அன்று அதிகாலை 5.45 மணி முதல் 6.45 மணிக்குள், உண்ணா முலையம்மன் சன்னதி எதிரில் உள்ள தங்க கொடி மரத்தில் ஆடிப்பூரம் பிர மோற்சவ கொடியேற்றம் நடைபெறும். அலங்கார ரூபத்தில் உண் ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப் பார்கள். அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா உள்ளிட்ட முக்கிய விழாக் கள் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.

    அதில், உண்ணா முலையம்மன் சன்னதி எதிரில் உள்ள கொடி மரத்தில், கொடி யேற்றத்துடன் தொடங்கும் விழா ஆடிப்பூர பிரமோற்சவம் நடைபெறுவது தனிச் சிறப்பாகும்.

    விழாவை முன்னிட்டு, நாளை மாலை பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், காமதேனு வாகனத்தில் அம்மன் திரு வீதியுலாவும் நடைபெறும்.

    மேலும், ஆடிப்பூரம் பிர மோற்சவ விழாவின்போது, பூரம் நடத்திரம் அமையும் நாளன்று தீமிதி விழா நடை பெறுகிறது . அதன்படி, முதல் நாளன்றே பூரம் நட்சத்திரம் அமைவதால், நாளை இரவு 11 மணியளவில் அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா வும் நடைபெற உள்ளது.

    சிவன் கோவில்களில் தீமிதி விழா நடைபெறும் சிறப்பும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    அதைத்தொடர்ந்து, வருகிற 23-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை தினமும் காலை மற்றும் இரவில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் மாட வீதியில் உலா வந்து அருள் பாலிக்கின்றனர்.

    • கட்டணமில்லா புதிய சேமிப்பு வங்கி கணக்கை தொடங்கி பயன்பெறலாம்
    • அதகாரி தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவு 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக மாவட்டத்தில் உள்ள 991 ரேசன் கடைகள் மூலம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 413 குடும்ப அட்டைதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பம் வழங்கும் பணி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு வங்கி கணக்கு அவசியம் என்பதால் வங்கி கணக்கு இல்லாதவர்கள் அருகில் உள்ள திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் கட்டணமில்லா புதிய சேமிப்பு வங்கி கணக்கை தொடங்கி பயன்பெறலாம் என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன் தெரிவித்தார்.

    ×