என் மலர்
திருவண்ணாமலை
- வீரவணக்கம் செலுத்தப்பட்டது
- பலர் கலந்து கொண்டனர்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு தெற்கு மாவட்ட பாமக செயலாளர் ஏந்தல் பக்தவச்சலம் தலைமையில் மெழுகுச் சுடர் ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர் இரா.காளிதாஸ், முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், வக்கீல் ஆனந்தன், மாவட்ட பொருளாளர் வீரம்மாள், மாவட்ட துணை செயலாளர் கான்டீபன், நகர செயலாளர்கள் உதயகுமார், கார்த்திகேயன், ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் பாலு, ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், ராஜ்குமார், நகர தலைவர் ரவி, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி, கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை எழுச்சி மாநாட்டின் தீர்மானங்கள் குறித்து விளக்கினர்
- பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் மதுரை எழுச்சி மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மண்டி தெருவில் நடைபெற்றது.
நகர கழக செயலாளர் கே.வெங்கடேசன் தலைமை வகித்தார். நகர அவைத் தலைவர் ஜனார்த்தனம், ரவிச்சந்திரன், அருணகிரி, பூக்கடை கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் சுப்பிரமணியன், சேவூர் எஸ். ராமச்சந்திரன் கழக அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, கழகப் பேச்சாளர் சிட்கோ சீனு ஆகியோர்கள் கலந்து கொண்டு அண்ணாவின் அரசியல் வாழ்வு, அரசியல் பண்பாடு, நாகரிகம், தற்போதைய ஆட்சியின் அவலங்களை சுட்டிக்காட்டி பேசினர்.
இக்கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அரங்கநா தன், மகேந்திரன், குணசீலன், துரை, மற்றும்தணிகாசலம், சுரேஷ், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- ஹீட்டரை ஆன் செய்த போது விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
போளூர்:
போளூர் அடுத்த பொன்நகரை சேர்ந்தவர் சுதாகர் (25). விவசாயி. மனைவி வினோதினி (வயது 23).
மகன் மிதுன் (3). வினோதினி நர்சிங் முடித்துவிட்டு போளூர் தனியார் மருத்துவ மனையில் வேலை செய்து வந்தார். தற்போது அவர் 8 மாத கர்ப்பமாக உள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை குளிப்பதற்காக வினோதினி ஹீட்டர் சுச்சை ஆன் செய்தார். அப்போது அதிலிருந்த மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி எரியப்பட்டு மயங்கி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.
வெகு நேரம் ஆகியும் வினோதினி வராததால் சந்தேகம் அடைந்து உறவினர்கள் குளியலறைக்கு சென்று பார்த்தனர். அப்போது வினோதினி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் அவர்கள் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து போளூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வினோதினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 மாத கர்ப்பிணி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உபகரணங்கள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆரணி:
ஆரணி அடுத்த பையூர் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகரில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் சாலை பணியாளர் சங்கத்தின் 24-ம் ஆண்டு விழா செய்யாறு கோட்ட தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆசிரியர் சங்கத் தலைவர் மனோகரன் பங்கேற்று சாலை பணியாளர் சங்க கொடியை ஏற்றினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.
மேலும் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இதில் அரசு ஊழியர்கள் வட்ட தலைவர் பாஸ்கரன்,வட்டக் கிளைச் செயலாளர் பரசுராமன்,ஓய்வூதிய சங்க தலைவர் அமர்தலிங்கம் மற்றும் கோட்டை நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இறுதியில் சாலை பணியாளர் சங்க நிர்வாகி எழிலன் நன்றி கூறினார்.
- சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு
- சாமி தரினம் செய்தனர்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் ஸ்ரீ சுந்தர விநாயகருக்கு, கொழுக்கட்டை, சுண்டல், கரும்பு பொறி உள்ளிட்ட உணவு பொருட்களை வைத்து படையிலிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரினம் செய்தனர்.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
- புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் லட்சுமி நாராயணன் பெருமாள் கோவிலில் கடந்த 1993-ம் ஆண்டுக்கு பின்னர் பக்தர்கள் சார்பில், மகாசம்ரோக்ஷனம் நடந்தது.
கோவில் வளாகத்தில் யாக பூஜை செய்து பாலாய பூஜைகள் செய்யப்பட்டன. இதனையடுத்து மூலவர், ராஜகோபுரம், கருடாழ்வார், விநாயகர், ஆண்டாள், ஆஞ்சநேயர் ஐயப்பன், துர்க்கையம்மன் ஆகிய சிலைகளுக்கு புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது.
மேலும் அத்தி மரப்பலகையில் ஆவாகனம் செய்து தனி அறையில் வைத்து தினமும் பூஜைகள் நடத்தப்பட உள்ளது.
இதில் கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், துணை தலைவர் குமார், வார்டு உறுப்பினர்கள், பெரிய தனம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- நேருக்கு நேர் மோதிக்கொண்டன
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
செங்கம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள விருப்பாச்சிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 21). இவர் திருப்பத்தூர் பகுதியில் தனியார் கல்லூரியில் கலை அறிவியல் படித்து வந்தார்.
இவருடைய உறவினர் பெயரும் கவுதம் (24). இருவரும் நேற்று திருவண்ணா மலையி லிருந்து கல்லாவி கிராமத்து க்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
செங்கம் அருகே உள்ள ரோடு கரியமங்கலம் பகுதியில் சென்றபோது ஓசூரில் இருந்து கும்பகோணம் நோக்கிச்சென்ற தக்காளி மற்றும் காய்கறி ஏற்றி வந்த லாரியும் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் கல்லூரி மாண வர் கவுதமும், அவரது உற வினரான கவுதமும் படுகா யம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். அக்க ம்பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் டாக்டர்கள் பரிசோதித்த போது இருவரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விபத்து குறித்து செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்இன்ஸ்பெக்டர் பிரசாந்த் உள்ளிட்டோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- வளைவில் திரும்பும் போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
களம்பூர் அடுத்த சென்னானந்தல் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் முருகன் (வயது 33). ஆட்டோ டிரைவர்.
இவரது மனைவி காவியா, 1 வயதில் மகன் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஆரணியிலிருந்து சென்னானந்தல் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆட்டோவுடன் வந்து கொண்டிருந்தார்.
பெருமாள் என்பவரின் நிலத்திற்கு அருகில் ரோட்டின் வளைவில் திரும்பும் போது ஆட்டோ திடீரென நிலை தடு மாறி கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து களம்பூர் போலீசில் பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
- போலீசார் வாகன சோதனையில் சிக்கினர்
- வந்தவாசி கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த வடவணக்கம்பாடி கிராமத்தை சேர்ந்த வர் கிஷோர் (வயது 28). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு இவர் வீட்டின் எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். காலை வெளியே வந்து பார்த்த போது பைக் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து வடவணக்கம்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை மழையூர் கூட்டுச் சாலையில் சப் -இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமை யிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சேத்துப்பட்டில் இருந்து வந்தவாசி நோக்கி பைக்கில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் வந்த வழியே திரும்பி செல்ல முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை மடக்கினர்.
அப்போது பைக்கின் பின்னால் வந்தவர் தப்பி யோடி விட்டார். பிடிபட்ட வரிடம் விசாரித்தபோது சேத்அஜீஸ் (30) என்பதும் வடவணக்கம்பாடி பகுதியில் கிஷோரின் மோட்டார்சைக்கிளை திருடியதும் தெரிய வந்தது.
இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து சேத்அஜீசை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அஜீசை வந்தவாசி கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
- ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் தகுதியான குடும்ப தலைவிகள் தேர்வு
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள தச்சம்பட்டு கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்ட தொடக்க விழா நடந்தது.
கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். சி.என்.அண்ணாதுரை எம்பி, எம்.எல்.ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, அம்பேத்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றியக்குழுத் தலைவர் கலைவாணி கலைமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திட்டத்தை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைக்க எனக்கு அனுமதி அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பெண்களுக்கான திட்டங்கள் அதிக அளவில் தீட்டப்படுகிறது. திமுகவையும், கருணாநிதியையும் உருவாக்கியவர் அண்ணா. உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு வாக்குரிமை அளித்த கட்சி நீதிக்கட்சி.
சொத்தில் பெண்களுக்கு சம பங்கு உண்டு என்ற ஆணை, விதவை பெண்களுக்கு அரசின் சார்பில் தையல் எந்திரம், காவல் துறையில் பெண்கள் பணியாற்ற ஆணை, தேர்தலில் 33 சதவிகித இட ஒதுக்கீடு ஆகியவற்றை வழங்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. பெண்களுக்காக கருணாநிதி திட்டங்களை தீட்டினார்.
தற்போதைய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 16 திட்டங்களை தீட்டி நடைமுறை படுத்தி வருகிறார்.
அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்ற புதுமைப்பெண் திட்டம், அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் ஆகியவற்றை கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி இருக்கிறார்.
இது பெண்களுக்கான ஆட்சி. ஆயிரம் ரூபாயை எதிர்பார்த்திருக்கும் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் முன்னாள் எம்பி த.வேணுகோபால், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தொழிலாளர் நலன் மேம்பாட்டு அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்திவேல்மாறன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரமணன், முன்னாள் எம்.எல்.ஏ எதிரொலிமணியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இல.சரவணன், தொழிலதிபர் பன்னீர்செல்வம், ஒப்பந்ததாரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி நன்றி கூறினார்.
- சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு டவுன் கொடநகரை சேர்ந்தவர் (சிவா 30).பால்காரர்.
இவர் பெருங்களத்தூரில் பால் ஊற்ற சென்றார். அப்போது அங்கு இருந்த அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து சிவாவிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முன்விரோதம் காரணமாக சிவா தரப்பை சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் சந்துருவின் தம்பி சரத் (17) என்பவரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதுகுறித்து செய்யாறு டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரத் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய நிலையில் அவரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கணவர் போலீசில் புகார்
- அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டு வந்துள்ளது
வெம்பாக்கம்:
வெம்பாக்கம் அடுத்த தென்னம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). மனைவி லட்சுமி. இவர்களுக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.
கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கோபித்து கொண்டு லட்சுமி தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தினார்.
இந்த நிலையில் வீட்டில் அனைவரும் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். காலையில் செல்வராஜ் எழுந்து பார்த்த போது மனைவி மற்றும் குழந்தை மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து பிரம்ம தேசம் போலீசில் செல்வராஜ் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணையும், குழந்தையும் தேடி வருகின்றனர்.






