பைக் திருடிய வாலிபர் கைது

போலீசார் வாகன சோதனையில் சிக்கினர் வந்தவாசி கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
பைக் திருடிய வாலிபர் கைது
Published on: 

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த வடவணக்கம்பாடி கிராமத்தை சேர்ந்த வர் கிஷோர் (வயது 28). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு இவர் வீட்டின் எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். காலை வெளியே வந்து பார்த்த போது பைக் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து வடவணக்கம்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை மழையூர் கூட்டுச் சாலையில் சப் -இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமை யிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சேத்துப்பட்டில் இருந்து வந்தவாசி நோக்கி பைக்கில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் வந்த வழியே திரும்பி செல்ல முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை மடக்கினர்.

அப்போது பைக்கின் பின்னால் வந்தவர் தப்பி யோடி விட்டார். பிடிபட்ட வரிடம் விசாரித்தபோது சேத்அஜீஸ் (30) என்பதும் வடவணக்கம்பாடி பகுதியில் கிஷோரின் மோட்டார்சைக்கிளை திருடியதும் தெரிய வந்தது.

இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து சேத்அஜீசை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அஜீசை வந்தவாசி கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com