என் மலர்
திருவண்ணாமலை
தடை உத்தரவு முடிவுக்கு வந்ததால் இன்று அருணாசலேஸ்வரர் கோவில் வழக்கம்போல் திறக்கப்பட்டது.
4 நாட்கள் தொடர் விடுமுறை விஜயதசமி தினம் என்பதால் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர். அவர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில், வள்ளிமலை, ரத்தினகிரி முருகன் கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் இன்று தரிசனம் செய்தனர்.
செங்கம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கரியமங்கலம் பகுதியில் தனியார் பால்பண்ணை அருகே நேற்று இரவு கட்டமடுவு-குட்டை பகுதியை சேர்ந்தவர் கல்பனா (வயது32). இளங்குன்னி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (36) உள்ளிட்ட இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது.
பைக்கில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கல்பனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் கோவிந்தராஜ் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த கல்பனாவின் உடலை மீட்டு செங்கம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள சாத்தனூர் அணை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 119அடி உயரம் கொண்ட இந்த அணையில் 7,321 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும்.
தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக கிருஷ்ணகிரி அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் தென்பெண்ணை ஆற்று பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட தொடங்கி உள்ளது. அதன் காரணமாக சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1,227 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 90.45 அடியாக உயர்ந்து உள்ளது. அதாவது அணையில் தற்போது 2,503 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையில் தற்போது மதகுகளை சீரமைத்து புதிய ஷட்டர்கள் அமைக்கும் பணி ரூ.45 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இந்த பணி இன்னும் ஓராண்டு காலம் நடைபெறும் என தெரிகிறது.
எனவே அணையின் முழு கொள்ளளவு நீரை இந்தாண்டு தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அணையில் அதிகபட்சமாக 99 அடி வரை மட்டுமே நீரைத் தேக்கிவைக்க முடியும். அணையின் மதகுகள் 20 அடி உயரம் கொண்டதாகும்.
அணையின் பாதுகாப்பு கருதி 95 அடி வரை நீரை தேக்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு மேல் வரும் உபரி நீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். எனவே அணைக்கு வரும் நீர்வரத்தை 24 மணிநேரமும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
புதுப்பாளையம்:
செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டு ராஜீவ் காந்தி நகரில் வசிப்பவர் தாமோதரன். இவரது மகன் சற்குணன்(4). இவர் அதே பகுதியில் உள்ள ஓடையை நேற்று முன் தினம் கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, ஓடையில் நீர்வரத்து அதிகரித்ததால் தண்ணீரில் மூழ்கி சற்குணன் உயிரிழந்துள்ளான்.
இந்நிலையில், ஓடையை கடக்க பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி இருந்தால், 4 வயது சிறுவனின் உயிர் பறிபோயிருக்காது எனக் கூறி, சிறுவனின் உடலுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், அவ்வழியாக சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி சின்னராஜ் தலைமையிலான போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சி மாவட்ட இயக்குனர் லட்சுமி நரசிம்மன் சம்பவ இடத்துக்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கிராம மக்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
இதையடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது. சிறுவனின் உடலும், வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை தேனிமலை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 53). இவரது சகோதரர் ஆறுமுகம் (36). இவர்கள், ரேஷன் அரிசியை கடத்திய போது திருவண்ணாமலை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 19 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார். தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் ஏழுமலை, ஆறுமுகம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.






