என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சொத்து தகராறில் அண்ணனை பெட்ரோல் ஊற்றி கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள விளைசித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளை. இவருக்கு ரமேஷ், புருஷோத்தமன், ராஜசேகர் என 3 மகன்கள் உள்ளனர்.

    புருஷோத்தமன் நெசவு தொழில் செய்து வந்தார். திருமணமாகி மனைவியை 6 வருடங்களாக பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

    ரமேஷ் மற்றும் ராஜசேகர் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். குடும்பத்தின் பூர்வீக சொத்தாக வீடு உள்ளது. 3 மகன்களுக்கு சொத்தை பிரித்து கொடுத்துள்ளனர்.

    இதில் புருஷோத்தமனுக்கு சொத்தின் பங்கை கொடுப்பதாக கூறி 7 லட்சம் ரூபாயில் முதல் தவனைணயாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    மீதி தொகையை கொடுக்க ராஜசேகர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது.

    சம்பவத்தன்று புருஷோத்தமன் ராஜசேகரின் பைக்கை எடுத்து ஓட்டியுள்ளார்.

    பைக்கை எப்படி எடுத்து செல்லலாம் என்று ராஜசேகர் புருஷோத்தமனிடம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இது தொடர்பாக நேற்று முன்தினம் அண்ணன், தம்பி இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜசேகர் புருஷோத்தமன் வீட்டு மாடியில் தூங்கி கொண்டிருந்த போது அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

    தீயில் கருகிய புருஷோத்தமன் அலறி அடித்து ஓடினார். அப்போது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்தார்.

    படுகாயமடைந்த புருஷோத்தமனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கபட்டார். இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி புருஷோத்தமன் பரிதாபமாக இறந்தார்.

    ஆரணி தாலுகா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி நடந்த அன்னாபிஷேகத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது திரளான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    ஐப்பசி பவுர்ணமியான நேற்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி சாதம் வடிக்கப்பட்டு சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு காய்கனிகளால் அலங்காரம் செய்யப்படும்.

    அதன்படி திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மதியம் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோவிலில் உள்ள சிவ லிங்கங்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை சாமிக்கு அன்னத்தால் அலங்காரம் நடைபெற்றது.

    அந்த சமயத்தில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் ராஜகோபுரம் முன்பும், அம்மணி அம்மன் கோபுரம் முன்பும் காத்திருந்தனர்.

    இதற்கிடையில் மாலை 3 மணி முதல் 4 மணி வரை திருவண்ணாமலையில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் கோபுரங்கள் முன் நனைந்தவாறு பக்தர்கள் காத்திருந்தனர். தொடர்ந்து 6 மணிக்கு பின்னர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து நீண்ட வரிசையில் நின்று அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    இரவில் பவுர்ணமி தொடங்கியதால் மாலையில் போலீசார் கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் கிரிவலப்பாதையில் செல்லாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. திருவண்ணாமலையில் மலையை சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று இரவு 7.56 மணிக்கு தொடங்கி இன்று (புதன்கிழமை) இரவு 8.45 மணிக்கு நிறைவடைகிறது. இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்டது.

    இருப்பினும் சிலர் நேற்று பகலில் தனித்தனியாக கிரிவலம் சென்றனர். இரவில் பவுர்ணமி தொடங்கியதால் மாலையில் போலீசார் கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் கிரிவலப்பாதையில் செல்லாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கிரிவலம் செல்ல வந்த பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இருப்பினும் சிலர் மாற்று பாதையில் கிரிவலப்பாதைக்கு வந்து தங்களது கிரிவலத்தை தொடர்ந்தனர். மேலும் கிரிவலப்பாதையில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்களது அடையாள அட்டையை போலீசாரிடம் காண்பித்து சென்றனர். பக்தர்கள் கூட்டமின்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார் தொடர்ந்து கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை சோமவார பிரதோ‌ஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வாரத்தில் 3 நாட்கள் தரிசன தடை நீக்கப்பட்ட பின்பு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

    இருந்தபோதிலும் நாளை மற்றும் நாளை மறுநாள் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை சோமவார பிரதோ‌ஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கிரிவல தடை தெரியவந்ததால் நேற்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் சென்றனர்.

    மேலும் இன்று அரசு விடுமுறை தினம் என்பதால் வெளிமாநில பக்தர்கள் அதிக அளவில் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் திருவண்ணாமலையில் வசிக்கும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    திருவண்ணாமலையில் பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் 31 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை எம்.ஆர்.டி. நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 39). இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று பகல் சுமார் 12 மணியளவில் அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நூக்காம்பாடி அருகில் உள்ள ராந்தம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று உள்ளார்.

    பின்னர் அவர்கள் மதியம் 3 மணியளவில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பிரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 31 பவுன் நகை, 10 ஆயிரம் ரொக்கம், 1 கிலோ வெள்ளி பொருட்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.9 லட்சத்துக்கு அதிகமாக இருக்கும் என தெரிகிறது.  இந்த சம்பவம் குறித்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்துப்பட்டில் லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜ், முருகன் மற்றும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ்காரர்களை பார்த்ததும் சேத்துப்பட்டு பழம்பேட்டையைச் சேர்ந்த செல்வகணேஷ் (வயது 40) என்பவர் தப்பி செல்ல முயன்றார்.

    அவரை, போலீசார் மடக்கி விசாரித்தபோது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக கூறினார். இதையடுத்து வெளிமாநில லாட்டரி சீட்டுகள் 20, ரூ.1000-த்தை பறிமுதல் செய்தனர்.
    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைவு காரணமாக வழிபாட்டு தலங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு கடந்த 15-ந்தேதி முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம்செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்கள்.

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    தொற்று பரவல் குறைவு காரணமாக வழிபாட்டு தலங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு கடந்த 15-ந்தேதி முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டது.

    இந்த மாதத்துக்கான பவுர்ணமி நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7.56 மணிக்கு தொடங்கி மறுநாள் (புதன்கிழமை) இரவு 8.54 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் 19-வது மாதமாக இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். இதனை கருத்தில் கொண்டு பவுர்ணமி தினங்களான நாளை காலை 6 மணி முதல் 21-ந்தேதி இரவு 12 மணிவரை திருவண்ணாமலை மலைச்சுற்றும் பாதையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது. எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரவேண்டாம்.

    பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் தொற்று பரவலை தடுக்கும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு முற்றிலும் இல்லை என்ற நிலையை அடைய அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கோவில் பின்பக்கம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி உள்பட விசேஷ நாட்களில் பக்தா்கள் கிரிவலம் செல்வது வழக்கம். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் மற்ற நாட்களை விட விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    தொற்று பரவல் காரணமாக கடந்த ஆகஸ்டு மாத இறுதி முதல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் விடுமுறை தினத்தில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியாமல் பலர் தவித்து வந்தனர்.

    இந்த நிலையில் தமிழக அரசு கடந்த 15-ந்தேதி முதல் வெள்ளி, சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபடலாம் என்று அறிவித்தது.

    அதனால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்தனர். இலவச, கட்டண தரிசன கவுண்ட்டர்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்தனர்.

    பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் பலர் கோவிலின் பின்பக்கம் உள்ள மலையை சுற்றி தனித்தனியாக கிரிவலம் சென்றனர். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
    ஆரணி டி.எஸ்.பி. அலுவலகத்தில் காதல் ஜோடிக்கு துணையாக 30-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    ஆரணி:

    ஆரணி அருகே உள்ள சின்ன அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை உஷா தம்பதியினரின் மகள் சுவேதா. இவர் ஆரணி அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். பயிற்சிக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

    அப்போது ஆரணி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் இரும்பேடு கிராமத்தை சேர்ந்த மாதவன் என்பவருடன் காதல் ஏற்பட்டது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற சுவேதா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர்.

    இதுகுறித்து கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சுவேதா, மாதவன் இருவரும் வீட்டை விட்டு வெளியே திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

    இதனையடுத்து நேற்று காலையில் ஆரணி.டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் தலைமையில் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். டி.எஸ்.பி அலுவலகத்தில் காதல் ஜோடி வருகை புரிந்தனர்.

    மேலும் இந்த காதல் ஜோடிக்கு துணையாக 30-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் டி.எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் போலீசார் இந்த இடத்தில் குவிக்கபட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் விசாரணை மேற்கொண்டார்.

    அப்போது சுவேதா தன்னுடைய கணவருடன் செல்வதாக கூறினார்.

    இதனால் அவரது தாயார் உஷா டி.எஸ்.பி. அலுவலக மேஜையில் வைக்கப்பட்டிருந்த சானிடைசரை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    உஷாவை மீட்டு உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    திருவண்ணாமலையில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தம்பி போலீசில் புகார் அளித்துள்ளார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பேகோபுரம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 45) கட்டிட தொழிலாளி.இவரது மனைவி பழனியம்மாள்.

    இவர்களுக்கு தீபா என்ற மகளும், முத்துக்குமார் என்ற மகனும் உள்ளனர். கிருஷ்ணனுக்கும், பழனியம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கிருஷ்ணன் திடீரென மனைவியை தாக்க முயன்றுள்ளார்.அதனை மகன் முத்துக்குமார் தடுத்து தந்தையை தட்டி கேட்டதாக கூறப்படுகிறது.

    பின்னர் தாயும் மகனும் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டனர். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கிருஷ்ணன் வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே கிருஷ்ணனின் தம்பி ரமேஷ் திருவண்ணாமலை டவுன் போலீசில் தனது அண்ணன் சாவில் சந்தேகம் உள்ளது என்று புகார் செய்துள்ளார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்யாறு அருகே கூலி தொழிலாளி விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
    செய்யாறு:

    வெம்பாக்கம் அடுத்த நாட்டேரி கிராம காலனியில் வசித்து வருபவர் முருகேசன் (வயது 48). கூலி தொழிலாளியாக இவருடைய மனைவி மணிமேகலை கடந்த 2 வருடத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்.

    முருகேசனும் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார்.

    மனவேதனையில் இருந்த முருகேசன் நேற்று முன்தினம் பயிருக்கு அடிக்கும் பூச்சி மருந்து சாப்பிட்டு விட்டு மயங்கி கிடந்தார்.

    மயங்கி கிடந்த முருகேசனை அவரது மகள் சரஸ்வதி செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். சிகிச்சை பலனளிக்காமல் முருகேசன் இறந்துவிட்டார்.

    இதுகுறித்து முருகேசன் மகன் சந்தோஷ் பிரம்மதேசம் போலீசில் புகார் கொடுத்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    திருவண்ணாமலை அண்ணாமலையார் தேர் மற்றும் அம்மன் தேரை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பைபர் கண்ணாடிகளை அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டன.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி தொடங்க உள்ளது.

    இதில் முக்கிய நிகழ்வாக மகா தேரோட்டம் நவம்பர் மாதம் 16-ந்தேதி நடைபெற உள்ளது‌. இதையடுத்து 19-ந்தேதி காலை கோவிலின் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணா மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

    இந்த நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 16-ந் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றதை தொடர்ந்து, தீப திருவிழாவுக்கான பணிகளை கோவில் நிர்வாகம் தொடங்கியது.

    இதில் மிக முக்கியமானதாக பஞ்ச ரதங்களை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. விநாயகர், முருகன் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்களை பாதுகாக்க வைத்திருந்த இரும்பு தகடுகளை அகற்றும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.

    இதையடுத்து அண்ணாமலையார் தேர் மற்றும் அம்மன் தேரை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பைபர் கண்ணாடிகளை அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டன.

    இப்பணிகள் நிறைவு பெற்றதும் 5 தேர்களை சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. கார்த்திகை தீப திருவிழாவிற்கு ஏற்பாடு தயாராவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து கோவில் அலுவலர்கள் கூறும் போது:-

    கொரோனாவால் தடை உத்தரவு காரணமாக பஞ்ச ரதங்கள் கடந்த ஆண்டு சீரமைக்க முடியவில்லை. இந்த ஆண்டு சீரமைக்க தொடங்கியுள்ளோம். இது தொடர்ந்து தேர் திருவிழாவை நடத்துவது குறித்து தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றனர்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த ஆண்டு நடத்துவதற்கு அரசு அனுமதிக்கவில்லை.

    இதனால் மாடவீதியில் சாமி வீதிஉலா மற்றும் மகா தேரோட்டம் நடைபெறவில்லை கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் உற்சவ மூர்த்திகள் பவனி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு 2-ம் அலையின் தாக்கத்திலிருந்து தமிழகம் மீண்டு வந்துள்ளதால் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

    கார்த்திகை தீபத் திருவிழாவையும் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதிக்கும் என நம்பிக்கையுடன் காத்திருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
    ×