என் மலர்
திருவண்ணாமலை
- போலீசார் பரிசோதனையில் சிக்கியது
- பொதுமக்கள் புகாரால் நடவடிக்ைக
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் அடுத்த பிரசித்தி பெற்ற பருவத மலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த வாலிபரிடம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.
கலசப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்மகா தேவமங்கலம், கடலாடி ஆகிய ஊராட்சிகளுக்கு இடையில் பருவதமலை அமைந்துள்ளது.
மூலிகை செடி கொடி மரங்கள் நிறைந்த இம்மலை மீது பக்தர்கள் ஏறி சென்று உச்சியில் உள்ள மல்லிகா அர்ஜுனேஸ்வர் சாமியை தரிசனம் செய்துவிட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாதம் பவுர்ணமி, அமாவாசை மற்றும் வார விடுமுறை நாட்களில் திரளான பக்தர்கள் வருகை தந்து சுமார் 4ஆயிரத்து 560 அடி உயரம் உள்ள மலை மீது ஏறி சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.
இதில் சென்னை, பாண்டிச்சேரி, வேலூர், ராணிப்பேட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வாலிபர்கள் கஞ்சாவை எடுத்துக்கொண்டு மலை மீது சென்று பயன்படுத்துவதாகவும் மற்றும் சில அசம்பாவிதங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு, வனத்துறையினருக்கும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதன் அடிப்படையில் வனத்துறையினரும் கடலாடி போலீசாரும் மலை மீது ஏறி செல்லும் பக்தர்களை பரிசோதனை செய்து அனுப்பி வைக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று ராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து சுமார் 5 வாலிபர்கள் பருவதமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
அவர்களை கடலாடி போலீசார் பரிசோதனை செய்தனர். அதில் ஒரு வாலிபர் கஞ்சாவை பையில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதயடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போக்குவரத்து பாதிப்பு
- போலீசார் விசாரணை
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே உள்ள செய்யாற்றை வென்றான் கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் வயது 52 இவரது மனைவி ஆரவல்லி இவர்கள் குடும்ப த்துடன் சென்னை தண்டா ரப்பேட்டையில் வசித்து வருகின்றனர்.
நேற்று சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்கு வருவதற்காக தனது மனைவியுடன் காரில் சுமார் 8.30 மணி அளவில் செய்யாறு பஸ் நிலையம் எதிரில் ஆற்காடு சாலையில் வந்து கொண்டி ருந்தார்.
அப்போது காரில் இருந்து காஸ் கசிந்து வாசனை யுடன் சத்தம் வரவே உடனடியாக காரில் இருந்த ஞானசேகரன் மனைவியுடன் இறங்கி விட்டார்.
சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது. சாலை ஓரத்தில் இருந்து பக்கோடா கடை, பூக்கடை வைத்திருப்ப வர்கள் மற்றும் பொதுமக்கள் அலறடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்து தீயணைப்பு அலுவலர்கள் உடனடியாக வந்து தீயை அணைத்தனர் இருப்பினும் கார் முழுவதும் எரிந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது. தீ விபத்து ஏற்பட்டது. பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பஸ் நிலையம் என்பதால் பரபரப்பாக காணப்பட்டது.
செய்யாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சங்கர், ஜெயச்சந்திரன் தீ விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை செய்து போக்குவரத்தை சரி செய்தனர்.
- உபரி நீர் வெளியேற்றம்
- சரவணன் எம்.எல்.ஏ. மலர் தூவி வரவேற்றார்
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேலும் ஜவ்வாது மலையில் பெய்த கனமழையின் காரணமாக மிருகண்டா அணை, செண்பகத்தோப்பு அணை, குப்பநத்தம் அணை என 3 அனைகளும் நிரம்பி வருகிறது.
மேலும் செய்யாற்றில் வெள்ளம் வருவதால் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஆலத்தூர், சி நம்மியந்தல், மஷார், பெரியகிளாம்பாடி ஆகிய ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறுகின்றன.
துரிஞ்சாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகிளாம்பாடி ஏரி நிரம்பி வழிந்து ஓடும் தண்ணீரில் சரவணன் எம்.எல்.ஏ. மலர் தூவி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சிவராமன் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி, துணைத்தலைவர் ராமன் உட்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- போலீசில் புகார்
- கொலையா? விசாரணை
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த ஏழாச்சேரி கிராமத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.
தகவல் தெரிந்த ஏழாச்சேரி கிராம நிர்வாக அலுவலர் கோகுல ராமன் தூசி போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் தூசி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்றும் பாதி உடல் எரிந்த நிலையில் உள்ளதால் கொலையா தற்கொலையா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- போலீஸ் எனக்கூறி மோசடி
- டிரைவர் கைது
ஆரணி:
ஆரணி அடுத்த அடையபுலம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 25). இவர் வெட்டியான் தொழுவம் காப்பு காட்டில் சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பையூர் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் பெருமாள், என்பவர் தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் எனக்கூறி விஸ்வநாதனை மிரட்டி ரூ. 5 ஆயிரத்தை பறித்து சென்றார்.
பின்னர் இது குறித்து விஸ்வநாதன் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர்.
- பெண்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்
- ஏராளமானோர் தரிசனம் செய்தனர்
வந்தவாசி:
வந்தவாசி நெமந்தகார தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ துலுக்கானத்தம்மன் ஆடி திருவிழா வெகு விமரிசியாக நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கு காலையில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, பெண்கள் கோவில் அருகில் பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
மாலை அம்மன் விசேஷ புஷ்பங்களால் அலங்காரம் செய்து, சிறப்பு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு மேல தாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக அம்மன் ஊர்வலம் நடைபெற்றது.
திருவிழாவில் வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர் அம்மனை வழிபட்டு சென்றனர்.
- பணி சரிவர வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு
- 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
வந்தவாசி:
வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெள்ளூர் ஊராட்சியைச் சேர்ந்த 100 நாள் திட்ட தொழிலாளர்கள் வந்தவாசி-ஆரணி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
எங்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணி சரிவர வழங்கப்படுவதில்லை. எங்கள் ஊராட்சி செயலரும் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்.
இதுகுறித்து புகார் தெரிவித்தால் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. எனவே சரிவர பணி வழங்காததைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
தகவலறிந்து அங்கு சென்ற வந்தவாசி வடக்கு போலீசார் சமரசம் செய்ததின்பேரில் அவர்கள் மறியலை கைவிட்டனர். இந்த போராட்டத்தினால் அந்த சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- 205 பெண்கள் கலந்துகொண்டனர்
- இரவில் அம்மன் திருவீதி உலா
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் கிராம தேவதை பாலியம்மனுக்கு நேற்று ஆடி மூன்றாம் வெள்ளி முன்னிட்டு 205 பெண்கள் பால் குடங்களுடன் ஊர்வலமாக சென்று அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.
இதேபோல் கண்ணமங்கலம் அருகே உள்ள துவரநதல் கிராமத்தில் காளியம்மன் கோவிலில் பக்தர்கள் 108 பால் குடங்களுடன் ஊர்வலமாக சென்று அபிஷேகம் செய்தனர்.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆலோசனை
- விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு தர வேண்டுகோள்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள பாளைய ஏகாம்பர நல்லூர் கிராமத்தில் ஆரணி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடக்கிறது.
இப்பணிகளை ஆரணி சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். மேலும் சாலையாக அமைத்து, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு தர வேண்டும் என அதிகாரிகள், ஒப்பந்ததாரரிடம் கேட்டுக்கொண்டார்.
- பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு
- போக்குவரத்து பாதிப்பு
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நேற்று மூன்றாம் ஆடி வெள்ளி விழா நடைபெற்றது.இதைமுன்னிட்டு அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்கக் கவச அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் ஏராளமான பக்தர்கள் வரிசையில் சென்று அம்மனை தரிசனம் செய்தனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் படவேடு ஆற்றுப் பாலம் அருகே உள்ள தற்காலிக பஸ் நிறுத்தத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
படவேடு ரேணுகாம்பாள் கோவில் செல்லும் சாலையில் இருபுறமும் நடைபாதைக் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து நெரிசலில் பக்தர்கள் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டது.
ஏராளமான பெண்கள் தங்கள் உடம்பில் வேப்பன் சீலை அணிந்து கோவிலை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். மேலும் அம்மன், பரசுராமன் சிலைகளை தங்கள் தலையில் தூக்கிக் கொண்டு கோவிலை வலம் வந்தனர்.
இரவில் காமதேனு வாகனத்தில் சிவலிங்க பூஜை அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.அப்போது வாணவேடிக்கை, நையாண்டி மேளம், கரகாட்டம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரணோ கட்டுப்பாடு காரணமாக ஆடி வெள்ளி விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு கொரணோ கட்டுப்பாடு நீங்கியதால் பக்தர்கள் குடும்பம் குடும்பமாய் மாட்டு வண்டி, டிராக்டர், மினி டார் உள்பட பல்வேறு வாகனங்களில் வந்து ஆங்காங்கே பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
- 3 குழந்தைகளின் உடலையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
- அமுதா சுயநினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வாணாபுரம் :
வாணாபுரம் அருகே உள்ள சதாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன் (வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி அமுதா (27). இவர்களது மகன்கள் நிலவரசு (5), குறளரசு (4). மகள் யாஷினி (7 மாதம்). இதில் நிலவரசு அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மதியம் அமுதா தனது மகன்களான நிலவரசு, குறளரசு மற்றும் 7 மாத கைக்குழந்தையான யாஷினி ஆகிய மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு தென்பெண்ணை ஆற்றின் கரைக்கு வந்தார். ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து சென்று கொண்டிருந்தது.
அங்கு அமுதா திடீரென தனது 3 குழந்தைகளையும் துணியால் இடுப்பில் கட்டிக்கொண்டு ஆற்றுக்குள் குதித்தார்.
பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் 3 குழந்தைகளும், அமுதாவும் மூழ்கினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதில் 3 குழந்தைகளும் பரிதாபமாக இறந்து விட்டனர்.
அமுதா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை பொதுமக்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 3 குழந்தைகளின் உடலையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்த வாணாபுரம் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் 3 குழந்தைகளின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ரமேஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அமுதா குடும்ப தகராறு காரணமாக 3 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்தாரா? அல்லது வறுமை காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமுதா சுயநினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நினைவு திரும்பிய பின்னர் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
3 குழந்தைகள் இறந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஜி.எஸ்.டி உயர்வுக்கு எதிர்ப்பு
- ஏராளமானோர் பங்கேற்றனர்
ஆரணி:
ஆரணி டவுன் மணிகூண்டு அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் ஜி.எஸ்.டி உயர்வு எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் எடுத்துரைக்கபட்டடன.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற மாணவர் அணி தலைவர் பொன்னையன் எஸ்.டி.செல்வம் பிரபு உதயகுமார், உள்ளிட்டோர் பங்கேற்பு.






