சந்தவாசல் பாலியம்மன் கோவிலில் பால் குட ஊர்வலம்

205 பெண்கள் கலந்துகொண்டனர்இரவில் அம்மன் திருவீதி உலா
சந்தவாசல் பாலியம்மன் கோவிலில் பால் குட ஊர்வலம்
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் கிராம தேவதை பாலியம்மனுக்கு நேற்று ஆடி மூன்றாம் வெள்ளி முன்னிட்டு 205 பெண்கள் பால் குடங்களுடன் ஊர்வலமாக சென்று அபிஷேகம் செய்தனர்.

தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.

இதேபோல் கண்ணமங்கலம் அருகே உள்ள துவரநதல் கிராமத்தில் காளியம்மன் கோவிலில் பக்தர்கள் 108 பால் குடங்களுடன் ஊர்வலமாக சென்று அபிஷேகம் செய்தனர்.

நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com