100 நாள் திட்ட பணியாளர்கள் திடீர் மறியல்

பணி சரிவர வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பொதுமக்கள் சாலை மறியல் செய்த காட்சி.
பொதுமக்கள் சாலை மறியல் செய்த காட்சி.
Published on

வந்தவாசி:

வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெள்ளூர் ஊராட்சியைச் சேர்ந்த 100 நாள் திட்ட தொழிலாளர்கள் வந்தவாசி-ஆரணி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

எங்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணி சரிவர வழங்கப்படுவதில்லை. எங்கள் ஊராட்சி செயலரும் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்.

இதுகுறித்து புகார் தெரிவித்தால் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. எனவே சரிவர பணி வழங்காததைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

தகவலறிந்து அங்கு சென்ற வந்தவாசி வடக்கு போலீசார் சமரசம் செய்ததின்பேரில் அவர்கள் மறியலை கைவிட்டனர். இந்த போராட்டத்தினால் அந்த சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com