என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Milk Jug Procession"

    • 205 பெண்கள் கலந்துகொண்டனர்
    • இரவில் அம்மன் திருவீதி உலா

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் கிராம தேவதை பாலியம்மனுக்கு நேற்று ஆடி மூன்றாம் வெள்ளி முன்னிட்டு 205 பெண்கள் பால் குடங்களுடன் ஊர்வலமாக சென்று அபிஷேகம் செய்தனர்.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.

    இதேபோல் கண்ணமங்கலம் அருகே உள்ள துவரநதல் கிராமத்தில் காளியம்மன் கோவிலில் பக்தர்கள் 108 பால் குடங்களுடன் ஊர்வலமாக சென்று அபிஷேகம் செய்தனர்.

    நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • நாக சதுர்த்தியை முன்னிட்டு நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நடுப்பேட்டை ராஜாஜிதெரு சக்தி ஸ்ரீ நாகாலம்மன் கோவிலில் நாக சதுர்த்தி மற்றும் ஆடிப்பூரம் முன்னிட்டு பால்குட ஊர்வலம் மற்றும் அபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவை தொடர்ந்து நேற்று காலையில் கெங்கையம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடங்கள் ஏந்தி ஊர்வலமாக புறப்பட்டு நாகாலம்மன் கோவிலுக்கு வந்தடைந்தனர்.

    தொடர்ந்து அம்மனுக்கு பக்தர்கள் முன்னிலையில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது, தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், நகரமன்ற உறுப்பினர்கள் இந்துமதி கோபாலகிருஷ்ணன், தேவகிகார்த்திகேயன், என்.கோவிந்தராஜ், ம.மனோஜ், கெங்கையம்மன் கோவில் திருப்பணி குழு தலைவர் ஆர்.ஜி.எஸ். கார்த்திகேயன், திமுக பிரமுகர்கள் ஜம்புலிங்கம், தண்டபாணி, மகாலிங்கம், பாபு உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழா குழுவினர், அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×