என் மலர்
திருவண்ணாமலை
- வேலை முடிந்து மாலை வீடு திரும்பும் போது பரிதாபம்
- அறுந்து கிடந்த மின்கம்பியால் விபரீதம்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சதுப்பேரி பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மணி (வயது 58). இவருக்கு விஜயா என்ற மனைவியும் பரசுராமன் ஜீவரத்தினம் என்ற 2 மகனும் ஜீவஜோதி என்ற மகளும் உள்ளனர்.
மணி தினமும் காலையில் விவசாய நிலத்திற்கு தன்னுடைய மாட்டை அழைத்து கொண்டு மீண்டும் விவசாய வேலை முடிந்து மாலை நேரத்தில் வீடு திரும்புவது வழக்கம்.
இதே போல் நேற்று காலையில் தன்னுடைய விவசாய நிலத்திற்கு மாட்டை அழைத்து கொண்டு விவசாய பணியை முடித்து மீண்டும்வீட்டிற்கு திரும்பினார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு நபரின் விவசாய நிலத்தில் அருகில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது.
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மாடு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது. இதனை கண்ட மணி மாட்டை காப்பாற்ற முயன்ற போது மணி மீது மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்தார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மணியை மீட்டு தச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் மேல்சி கிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து களம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மின்சார துறையினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டாக்டர் கம்பன் திறந்து வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அனைத்து அமைப்புசாரா சார்பில் ஆட்டோ, மின்வாரிய தொ.மு.ச பால் மற்றும் பால் பவுடர் தொழிற்சாலைகள் ஆகியவற்றின் பெயர் பலகைகள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
அனைத்து அமைப்புசாரா தொ.மு.ச மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கலசப்பாக்கம் தி.சரவணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக திமுக மருத்துவரானி துணைத்தலைவர் டாக்டர் கம்பன் கலந்து கொண்டு பெயர் பலகைகளை திறந்து வைத்து நல திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் பொதுக்குழு உறுப்பினர் பிரியா விஜயனங்கன் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு திட்டம்
- சென்னை கோட்ட பொறியாளர் ஆய்வு
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர், அருகே மழையூர்- தெள்ளார், சாலையில் உள்ளகுன்னகம்பூண்டி - வெடால், கூட்ரோடு பகுதியில் சாலை பாதுகாப்பு, மற்றும் விபத்து தடுப்பு, திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளது.
இதை சென்னை கோட்ட பொறியாளர் (சாலை பாதுகாப்பு) விசாலாட்சி, வரைபடத்தை வைத்து பணிகள் நடைபெற உள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் செய்யாறு கோட்டபொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) ராஜகணபதி, வந்தவாசி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தியாகராஜன், சாலை ஆய்வாளர் அஜீஸ்உல்லா, மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- பல்வேறு வண்ண மலர்களால் தேர் அலங்காரம்
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த பெரிய கொழப்ப லூர், கிராம தேவதையான பனையம்மன், கோவில் தேர் திருவிழா நடந்தது.
காலையில் பனையம்ம னை பல்வேறு மூலிகைகள் மூலம் அபிஷேகங்கள் செய்து, பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைத்துசிறப்பு பூஜைகள் செய்தனர்.
பின்னர் திருத்தேரை பல்வேறு வண்ண மலர்கள், வண்ணத்துணிகள், ஆகியவை மூலம் அலங்காரம் செய்து வைத்து வாழைமரம் மா இலை, நுங்கு, இளநீர், ஆகியவை தேரில் கட்டி வைத்து அலங்காரம் செய்தனர்.
பின்னர் உற்சவர் பனையம்மனை, திருத்தேரில் வைத்து 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருத்தேரை இழுத்தனர்.
பனையம்மன், திருத்தேர் பெரிய கொழப்பலூர், கிராமத்தில் உள்ள மாடவீதி வழியாக ஊர்வலம் வந்தது.முன்னதாக மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர், பாண்டுரங்கன், திருத்தேர் வடம் பிடித்து இழுத்து திருவிழாவை தொடங்கி வைத்தார்.
விழாவில் பெரணமல்லூர், ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், ஒன்றிய குழு துணைதலைவர் லட்சுமி லலிதா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நித்திய பிரியா நடராஜன், மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஊர் பொதுமக்கள் சுற்றுப்புற கிராமத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருத்தேர் விழா ஏற்பாடுகளை.பெரண மல்லூர் ஒன்றிய குழு உறுப்பினர் காமாட்சி வெங்கடேசன், செய்திருந்தார்.
- 2 மாதங்களுக்கு முன்பு ஜமாபந்தி நடைபெற்றது
- 40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்பு
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, போளூர், சாலையில் உள்ள தாலுகா அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் மோகன்ராஜ், தலைமை தாங்கினார்.மாவட்ட போராட்ட குழு தலைவர் ரகுராமன், வட்ட பொருளாளர் ராஜசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் வட்ட செயலாளர் ஜான்சன், வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் போராட்டத்தை வரைமுறைப்படுத்த வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் அனைத்து பணி சார்ந்த பதிவேட்டில் விடுபட்டுள்ள அனைத்து பணிகளையும் பதிவேட்டில் ஏற்ற வேண்டும், மேலும் 2 மாதங்களுக்கு முன்பு ஜமாபந்தி நடைபெற்றது.
இதற்கான கிராம நிர்வாக அலுவலருக்கான படியை உடனடியாக வழங்க வேண்டும், உள்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது, சேத்துப்பட்டு கிராம நிர்வாக அலுவலர்கள் 40மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட இணை செயலாளர் சதீஷ், நன்றி கூறினார்.
- பொதுமக்கள் அவதி
- உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வலியுறுத்தல்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
மார்க்கெட் பகுதி பஜார் வீதி ஆகிய முக்கிய சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
நகராட்சி நிர்வாக அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைக்க வேண்டும் என்றும், மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதத்தை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- மாற்றுத்திறனாளிகள் மகளிர் சுயஉதவிகுழுவினர்கள் பங்கேற்பு
- விண்ணப்பம் வழங்கப்பட்டது
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மாங்கால் கூட்டு ரோடு கிளை சார்பில் அழிஞ்சல் பட்டு கிராமத்தில் நிதிசார் கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கிளை மேலாளர் பி ஜெயந்தி தலைமை தாங்கினார் ஊராட்சி மன்ற தலைவர் ஷகிலா மற்றும் வார்டு உறுப்பினர்கள் மாற்றுத்திறனாளிகள் மகளிர் சுய உதவி குழுவினர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் வங்கிமூலம் வழங்கப்படும் சேவைகள் மாற்றுத்திறனாளி கடன்கள் கால்நடை பராமரிப்பு மூலதான கடன் கடன் நடமாடும் ஏடிஎம் நடமாடும் வாகனம் மூலம் கணக்குதுவக்குதல் ஆகிய குறித்து விளக்கப்பட்டது தொடர்ந்து கறவை மாட்டு கடன் மாற்றுத்திறனாளி கடன் சிறுகுறு தொழில் கடன் களின் விண்ணப்பம் வழங்கப்பட்டன.
இதில் வங்கி உதவியாளர் தீபா காசாளர் சபரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் விளையாடினர்
- 56 அரசு பள்ளிகள் பங்கேற்பு
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டை மைதானத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டு போட்டியை உடற்கல்வி ஆசிரியர் ஜெயகாந்தன் அனைவரையும் வரவேற்றார்.
தலைமையாசிரியை தாமரைசெல்வி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ் பங்கேற்று போட்டியை தொடங்கி வைத்தார்.
மேலும் இதில் 14,16,17, வயதுக்குப்பட்ட ஆரணி பெண்கள் மேல்நி லைப்பள்ளி குன்னத்துர் தேவிகாபுரம் வடுகசாத்து உள்ளிட்ட 56 அரசு பள்ளிகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு ஆரணி கோட்டை மைதானத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டு போட்டியை ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர் நடத்தி வருகின்றனர்.
இதில் கபடி வாலிபால் ரிங்பால் பேட்மிண்டன் கால்பந்து கோ-கோ உள்ளிட்ட 11 விளையாட்டு போட்டிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று ஆர்வத்துடன் விளையா டினார்கள்.
இந்த விளையாட்டு போட்டியால் மனதளவில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்ப தாகவும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் எங்களுக்கு உறுதுணையாக உள்ளதாகவும் அரசு பள்ளி மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
- 2 மாதத்துக்கு முன்பு பழனியின் தாய் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார்.
- இறுதிச் சடங்கில் பங்கேற்க சொந்த கிராமத்துக்கு வந்த ராணி, அங்கேயே தங்கி விட்டார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த புதூர்செக்கடி, ஜம்போடை கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது48). இவரது மனைவி ராணி (43). இவர்களுக்கு ராஜபாண்டி (24), சிவா (22) என்ற 2 மகன்களும், பரணி (21) என்ற மகளும் உள்ளனர். ராணி வெளிநாட்டில் தங்கி வீட்டு வேலை செய்து பணம் சம்பாதித்து வந்தார்.
2 மாதத்துக்கு முன்பு பழனியின் தாய் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்க சொந்த கிராமத்துக்கு வந்த ராணி, அங்கேயே தங்கி விட்டார். இதற்கிடையில், இவர்களது மகள் பரணி புதூரை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் தந்தை பழனி மற்றும் உறவினர்கள் ஆதரவுடன் அந்த வாலிபரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் மகளின் காதல் திருமணம் தாய் ராணிக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் மகளின் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. அதேநேரம் தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டியில் உள்ள ராணியின் சகோதரி வீட்டில் நடந்த விசேஷத்தில் பங்கேற்க தேவையான பொருட்களை தானிப்பாடியில் உள்ள கடைகளில் வாங்கிக் கொண்டு நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ராணி வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த பழனி, வீட்டில் வைத்திருந்த கத்தியால் ராணியின் கழுத்தில் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த ராணி, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.
சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த மகன் சிவா, ரத்த வெள்ளத்தில் தாய் பிணமாகக்கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடன் அக்கம் பக்கத்தினர் வந்து தானிப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் டி.எஸ்.பி.அஸ்வினி, தண்டராம்பட்டு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, தானிப்பாடி சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தானிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பழனியை தேடி வந்தனர். பக்கத்து கிராமத்தில். பதுங்கியிருந்த பழனியை போலீசார் கைது செய்தனர்.
போலீசில் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனது மனைவி ராணி கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்தார்.
எனது மகள் காதல் திருமண செய்வது குறித்து அவரிடம் கூறினேன். அவர் வர மறுத்தார். எனது மகன்களும் திருமணத்திற்கு வரவில்லை. நான் மட்டும் மகள் திருமணத்திற்கு சென்று வாழ்த்தி விட்டு வந்தேன். சம்பவத்தன்று இரவு நான் வீட்டுக்கு வந்த போது ராணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடுவது போல இருந்தது. இது பற்றி நான் ராணியிடம் கேட்டேன். அவர் யாரும் வீட்டுக்கு வரவில்லை என கூறினார். ஆனால் அவரது நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.
சந்தேகம் தீராததால் தொடர்ந்து இதுபற்றி அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன். இதனால் எங்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் கத்தியால் ராணியை கழுத்தில் வெட்டினேன். அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு
- 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த காவனியாத்தூர் கிராமத்திற்கு செல்லும் கூட்டுச்சாலையில் பயணிகள் நிழற்குடை இடிந்து தரமட்டமானது. இந்த நிலையில் பொதுமக்கள் பயணிகள் நிழற்குடை இல்லாததால் மழை நேரங்களிலும் மற்றும் வெயில் காலங்களிலும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பயணிகள் நிழற்குடை கட்டி தர வேண்டும் என்று பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வந்தவாசி ஒரத்தி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த திமுக மாவட்ட செயலாளர் தரணிவேந்தனை பொதுமக்கள் முற்றுகையிட்டு பஸ் நிழற்குடை கட்டித் தர வேண்டும் என்று முறையிட்டனர்.
இதையடுத்து பயணிகள் நிழற்குடை கட்டித் தரப்படும் என்று திமுக மாவட்ட செயலாளர் பொதுமக்களிடம் உறுதியாக கூறிய பிறகு சாலை மறியலை கைவிட்டனர்.
இதனால் வந்தவாசி ஒரத்தி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- 2 பேரை பிடிக்க வனத்துறை வேட்டை
- கறியை பறிமுதல் செய்தனர்
செங்கம்:
செங்கம் அருகே உள்ள வலசை இந்திராநகர் பகுதியை சேர்ந்த 2 பேர் வலசை மலைப்பகுதியில் சுற்றி திரிந்த காட்டு எருமையை வேட்டையாடி அதனை கூறு போட்டு சுமார் 15 கிலோ கறியை அவர்களது வீட்டினில் காய வைத்திருப்பதாக வனத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து வனசரகர் ராமநாதன் தலைமையில் இந்திரா நகர் பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்கு அதிரடியாக சென்ற வனத்துறையினர் அங்கு சோதனை நடத்தினர். வீட்டினுள் காட்டெருமை கறியை துணி காய வைப்பது போல் காய வைத்திருந்தனர்.
இதனை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். காட்டெருமை கறியை பறிமுதல் செய்தனர்.
வனத்துறையினர் வரும் தகவல் அறிந்து 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பிச்சென்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.
- கீழ்பென்னாத்தூர் அங்காளம்மன் கோவிலில் நடந்தது
- பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் அங்காளம்மன் கோவிலில் புனரமைப்பு பணிகள் துவங்கிட யாக பூஜை நடத்தப்பட்டது. கீழ்பென்னாத்தூரில் மிகவும் பழமையான வாய்ந்த ஆலயமான ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் புதியதாக கருவறை அம்மன் அமைத்திடவும், கோவில் சுற்றுசுவர்கள் அமைத்திடவும் கிராம மக்கள் ஒன்றிணைந்து புனரமைப்பு பணிசெய்திட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, புனரமைப்பு பணிகள் துவங்கும் பணிக்காக அங்காளம்மன் கோவில் வளாகத்தில் 11 கலசங்கள் அமைக்கப்பட்டு அஸ்திரயாகபூஜை நடத்தப்பட்டது.
பின்னர், அங்காளம்மன் கருவறை அமையும் இடத்திலும், சுற்றுசுவர் அமையும் இடத்திலும் வாஸ்து பூஜைமுறைப்படி பூமிபூஜை போடப்பட்டது. ஆலய நிர்வாகிகள், திருப்பணி குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.






