என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றி திரியும் மாடுகள்"

    • பொதுமக்கள் அவதி
    • உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வலியுறுத்தல்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    மார்க்கெட் பகுதி பஜார் வீதி ஆகிய முக்கிய சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

    நகராட்சி நிர்வாக அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைக்க வேண்டும் என்றும், மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதத்தை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×