என் மலர்
திருவண்ணாமலை
- வருகிற 15-ந் தேதி முதல் தொடங்கம்
- அதிகாரிகள் ஆய்வு
திருவண்ணாமலை:
தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உத்தரவிட்டுள்ளார். காலை 8.15 மணிமுதல் 8.50 மணிக்குள் வழங்கப்படவுள்ளது.
இதையொட்டி நகர பகுதிகளில் தொகுப்பு சமையல் கூடமும், ஊரக பகுதிகளில் அந்தந்த பகுதிகளில் தனி சமையற்கூடம் ஏற்படுத்தப்படுகிறது.
மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் காலை உணவு சமைத்து வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 1,545 தொடக்கப் பள்ளிகளில் இத்திட்டம் வருகிற 15-ந் தேதி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். அதன்படி திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் உள்ள 24 பள்ளிகளில் இத்திட்டம் வரும் 15-ந் தேதி தொடங்கப்படுகிறது.
இதற்காக தொகுப்பு சமையல் கூடம் திருவண்ணாமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இதைமுன்னிட்டு திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான முன்னோட்டமாக பரிசோதனை நடந்தது.
மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் காலை 7 மணியளவில் உணவை சமைத்தனர். அப்போது உணவு தரமாக சமைக்கப்படுகிறதா?, உரிய நேரத்தில் பள்ளிக்கு கொண்டு சென்று மாணவர்களுக்கு வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது.
இந்த உணவு தரமாக உள்ளதாக என நகராட்சி பொறியாளர் நீலேஸ்வரன், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் கார்த்திவேல்மாறன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதையடுத்து வேன்கள் மூலம் நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு உணவு அனுப்பி வைக்கப்பட்டது.
குறித்த நேரத்தில் பள்ளிகளுக்கு உணவு சென்றடைகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டு மாணவர்களுக்கு காலை உணவு பறிமாறப்பட்டது.
- ராஜீவ் மட்டும் வீட்டில் ஆயத்த ஆடைகளை தயாரித்து அனுப்பி வந்தார்.
- நாயின் கழுத்திலும், தனது கழுத்திலும் கயிறை மாட்டி மின்விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையத்தில் வசித்து வந்தவர் ராஜீவ் (வயது 45). சேலத்தை சேர்ந்த இவர் தனது மனைவியுடன் ஆயத்த ஆடை தைத்து வழங்கும் தொழில் செய்து வந்தார். ஆண் நாய் ஒன்றையும் இவர் வளர்த்து வந்தார். இவருக்கு கடன் சுமை இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவரது மனைவி வீட்டை விட்டு சென்று விட்டார். அதன்பின்னர் ராஜீவ் மட்டும் வீட்டில் ஆயத்த ஆடைகளை தயாரித்து அனுப்பி வந்தார். மனைவி பிரிந்து சென்ற நிலையில் நன்றியுடன் தன்னுடன் இருந்த வளர்ப்பு நாய் மீது அவர் அதிக பாசம் காட்டி வந்தார். இந்த நிலையில் கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
தான் இறந்து விட்டால் தான் வளர்த்து வந்த நாய் தெருநாயாகி அனாதையாகிவிடுமே என நினைத்த அவர் அதனையும் தூக்கில்போட்டு தற்கொலை செய்ய திட்டமிட்டார். இந்த நிலையில் அவர் நாயின் கழுத்திலும், தனது கழுத்திலும் கயிறை மாட்டி மின்விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதில் ராஜீவ் தனது வளர்ப்பு நாயுடன் இறந்து விட்டார்.
ஒருவாரம் ஆன நிலையில், துர்நாற்றம் வீசியதால் அவர் தனது நாயுடன் தற்கொலை செய்து கொண்டது நேற்று தான் தெரியவந்தது. இதுபற்றி அறிந்த போலீசார் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று ராஜீவ் மற்றும் நாயின் உடலை தூக்கில் இருந்து இறக்கினர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புகையிலை, பைக் பறிமுதல்
- போலீசார் சோதனையில் சிக்கியது
திருவண்ணாமலை:
செங்கம் தாலுகா சென்னச முத்திரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப் பட்டிருப்பதாகதிருவண்ணா மலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தர வின் பேரில் மாவட்ட குற்றத்தடுப்பு தனிப்படை போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார்சென்னசமுத்திரம் பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது அந்தப் பகு தியை சேர்ந்த ராஜன் ( வயது 37 ) என்பவர் வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு சுமார் ரூ.37 ஆயிரத்து 800 மதிப்பிலான தடை செய் யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்தி ருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து ராஜனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த புகையிலை பொருட்கள் மற்றும் பைக் பறிமுதல் செய்தனர்.
- இரண்டாம் கால யாகபூஜைகள் நடந்தது
- ஆரணி எம்.எல்.ஏ கலந்து கொண்டார்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் கிராம தேவதை செல்லியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைமுன்னிட்டு அம்மன் கரிக்கோலம் நடைபெற்றது மாலை முதல் கால யாகபூஜைகளும். இரண்டாம் கால யாகபூஜைகளுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதேபோல் ராமசாணிக்குப்பம் கன்னியப்பன் நகரில் பாலசுப்பிரமணியர், கன்னிமூல கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஆரணி சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமசாணிக்குப்பம் மகேஸ்வரிபார்த்தீபன், புதுப்பாளையம் நந்தினிகண்ணன், ஒன்றிய செயலாளர் கொளத்தூர் திருமால், ஆரணி நகர கழக செயலாளர் அசோக்குமார், ஆரணி நகர மன்ற துணைத் தலைவர் பாரிபாபு, குண்ணத்தூர் செந்தில், ஆரணி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 42 வீடுகள், 18 கடைகள் இடிப்பு
- நிழற்குடை இடிக்கப்பட்டதால் ெபாது மக்கள் அவதி
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூர் கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது.
இந்த ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் சிலர் ஆக்கிரமித்து வீடு, கடைகள் உள்ளிட்டவை கட்டி கடந்த பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இதையடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடு, கடைகள் உள்ளிட்டவற்றில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அறிவிப்பை வெளிவெளியிட்டது.
இந்த நிலையில் 4 பொக்லைன் எந்திரங்கள் மூலம் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று காலை தொடங்கியது.
வந்தவாசி டிஎஸ்பி கார்த்திக் தலைமையிலான கீழ்க்கொடுங்காலூர் போலீசார் பாதுகாப்புடன், வந்தவாசி தாசில்தார் முருகானந்தம் தலைமையிலான வருவாய்த்துறையினர்,
இளநிலை பொறியாளர் ரமேஷ் தலைமையிலான வந்தவாசி பொதுப்பணித்து றையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் 42 வீடுகள், 18 கடைகள், ஒரு பயணிகள் நிழற்குடை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன.
- பயணிகள் வலியுறுத்தல்
- ஆக்கிரமிப்புகள் அகற்றும் போது பழைய நிழற்கூடம் இடிக்கப்பட்டது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் காட்டுக்காநல்லூர் ரோடு தெரு சந்திப்பில் சிறிய நிழற்கூடம் இருந்தது. வேலூர் மார்க்கம் செல்லும் பஸ்கள் நின்று செல்லும். இதனால் இங்கு பஸ்சிற்க்கு பயணிகள் அதிகமாக காத்திருக்கும் நிலை உள்ளது.
இதேபோல் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பஸ்கள் நின்று செல்ல கண்ணமங்கலம் புதிய சாலை ஏரிக்கால்வாய் செல்லும் கல்வெட்டு அருகே கட்டவேண்டும்.
இந்த இரு இடங்களில் பயணிகள் வசதிக்காக சிறிய நிழற்கூடம் இருந்த நிலையில், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது நெடுஞ்சாலைத்துறையினர் இடித்து விட்டனர். அதன் பின்னர் நிழற்கூடம் அமைக்க வில்லை.
தொடர்ந்து திருவண்ணாமலை செல்லும் மெயின்ரோடு பகுதியில் ஆரணி சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் மதிப்பில் புதிய நிழற்கூடம் கட்டப்பட்டு பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதேபோல் பழைய பஸ் நிறுத்தம் பகுதியில் 2 இடங்களிலும் நிழற்கூடம் அமைத்து தரவேண்டும் என பயணிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் 2 இடங்களிலும் பயணிகள் வசதிக்காக நிழற்கூடம் கட்டித்தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
- மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
- அனைவரையும் தலைமை ஆசிரியர் பாராட்டினார்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் விஜய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா தாளாளர் விஜயகுமாரி தலைமையில் நடைபெற்றது.
இதில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதேபோல் ராமசாணிக்குப்பம்ஊ ராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த ஆசிரியர் தினவிழாவில் முன்னாள் ராணுவ வீரர் பிரபாகரன் கலந்து கொண்டு பள்ளி ஆசிரியர்கள் உள்பட மாணவ மாணவிகளுக்கு இலவச எழுது பொருட்கள் வழங்கினார்.
இதில் தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வி பிடிஏ ஆசிரியர்கள் நளினி, சசிகலா, சுமதி, ரேகா, தனி ஆசிரியர் ஜெயந்தி, வனிதா, பவானி, கிருஷ்ணவேணி உள்பட அனைவரையும் பாராட்டினார்.
- பெரும்புலி மேடு அருகே சிப்காட் தொழிற்பேட்டையில் புதிதாக பல கம்பெனிகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
- தூசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த செல்ல பெரும்புலி மேடு அருகே சிப்காட் தொழிற்பேட்டையில் புதிதாக பல கம்பெனிகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நிர்வாண நிலையில் தலையில் வெட்டு காயங்களுடன் வாலிபர் ஒருவர் கொலை செய்யபட்டு கிடந்தார்.
இதுகுறித்து தூசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அவரது பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் மேற்குவங்க மாநிலம், தக்சைன் தினஸ்பூரா பகுதியை சேர்ந்த மாட்டேஷ் (வயது 45) என்பது தெரியவந்தது.
இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இங்கு வேலைக்கு வந்ததாக தெரிவித்தனர்.
வடமாநில வாலிபரை நிர்வாணமாக்கி பின்னர் வெட்டி கொலை செய்துள்ளனர்.
இது தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விவசாயம் செய்து வந்த னர்
- போலீசார் பாதுகாப்புடன் நடந்தது
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த எறும்பூர் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 350 ஏக்கர் பரப்புள்ள பெரிய ஏரி உள்ளது.
ஏரியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயிரிட்டு வருகின்றனர்.
இந்த ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது.
வந்தவாசி வடக்கு போலீசார் பாதுகாப்புடன், கோவிலூர் பாசனப் பிரிவு இளநிலைப் பொறியாளர் எஸ்.பரந்தாமன் தலைமையிலான பொதுப்பணித் துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
அப்போது, வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் அர்ஜுனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- யாகசாலையில் சிறப்பு பூைஜகள் நடந்தது
- ஏராளமானோர் சாமி தரிசனம்
ஆரணி:
ஆரணி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள கிராம தேவதை செல்லியம்மன் நன்னீராட்டு விழா கும்பாபிஷேக விழா ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
ஏற்கனவே அமைக்கபட்ட யாகசாலையில் கோபூஜை, கணபதி ஹோமம், மகாபூர்ண, பூஜை செய்து புனித கலசநீரை கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் கொண்டாடபட்டது.
பின்னர் புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆரணி நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எஸ். அன்பழகன், சுந்தர், மோகன், துரை மாமது ஆகியோர் பங்கேற்றவர்களுக்கு ஊராட்சி மன்ற கோவில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கபட்டடன.
- மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள வெள்ளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று ஆசிரியர் தினம், தெரசா மற்றும் வ.உ.சி பிறந்த நாள் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தீபாகலைவாணன் தலைமை தாங்கினார்.
ஓய்வு தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, கார்த்திகேயனிடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் தமிழரசி வரவேற்று பேசினார்.
மாணவ மாணவிகளுக்கு சிறார் நூலக புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில் சந்தவாசல் கூட்டுறவு சங்க தலைவர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பிரபு நன்றி கூறினார்.
- மாணவர்கள் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார்
- 134 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர், ஊராட்சி ஒன்றியம் பெரிய கொழப்பலூர், கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 134 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை மூலம் 1 முதல் 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு என்னும், எழுத்தும், என்ற திட்டத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்க வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதை பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், நேரில் சென்று எண்ணும், எழுத்தும், திட்டத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கேள்வி கேட்டு மாணவர்களின் கற்றல் திறன் குறித்த ஆய்வு செய்தார்.
அப்போது 1 முதல் 5 வரை திருக்குறள் வாசித்த மாணவன், மற்றும் தூய்மை, சுகாதாரம், குறித்து கேள்வி கேட்கப்பட்டு இதில் சரியான பதில் அளித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஆய்வின் போது பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், உடன் இருந்தனர்.






