என் மலர்
உள்ளூர் செய்திகள்

செய்யாறு சிப்காட்டில் வடமாநில வாலிபர் கொலை- 50 பேரிடம் விசாரணை
- பெரும்புலி மேடு அருகே சிப்காட் தொழிற்பேட்டையில் புதிதாக பல கம்பெனிகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
- தூசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த செல்ல பெரும்புலி மேடு அருகே சிப்காட் தொழிற்பேட்டையில் புதிதாக பல கம்பெனிகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நிர்வாண நிலையில் தலையில் வெட்டு காயங்களுடன் வாலிபர் ஒருவர் கொலை செய்யபட்டு கிடந்தார்.
இதுகுறித்து தூசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அவரது பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் மேற்குவங்க மாநிலம், தக்சைன் தினஸ்பூரா பகுதியை சேர்ந்த மாட்டேஷ் (வயது 45) என்பது தெரியவந்தது.
இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இங்கு வேலைக்கு வந்ததாக தெரிவித்தனர்.
வடமாநில வாலிபரை நிர்வாணமாக்கி பின்னர் வெட்டி கொலை செய்துள்ளனர்.
இது தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






