என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, அடுத்த வயலூர், கிராமத்தில் ஐம்பொன் ஐயப்ப சிலை நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது. வயலூர் கிராமத்தில் உள்ள திரௌ பதி அம்மன் கோவில் வளாகத்தில் யாக குண்டம் அமைத்து நவகிரக, மற்றும் ஐயப்ப, விநாயகர், உள்பட 12 புனித நீர் கலசங்களை வைத்து. பல்வேறு மூலிகைகள் மூலம் யாகம் வளர்க்க ப்பட்டு, புனித நீர் கலசங்களை கோவிலை சுற்றி வந்து கோவில் வளாகத்தில் ஐம்பொன் ஐயப்பன் சிலை மீது புனித நீரை ஊற்றினார்கள். பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர்.

    இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. நேற்று இரவு 18 படி கன்னிசாமி பூஜை மற்றும் தெய்வீக நாடகம் நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை வயலூர் கிராம ஐய்யப்ப சாமிகள், மற்றும் ஊர் பொதுமக்கள், செய்திருந்தனர்.

    • பஸ் நிலையத்தின் அருகே உள்ள தடுப்பு சுவரை அகற்ற வலியுறுத்தல்
    • சுவர் மீது ஆபத்தான முறையில் அமர்வதாக புகார்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சாலையில் தடுப்பு சுவர் உள்ளது. வேலூர்- திருவண்ணாமலை செல்லும் பயணிகள் ரோட்டில் நின்று கொண்டும் பஸ் நிழற்கூடம் உள்ளே அமராமல் சிலர் சாலையில் உள்ள சிமெண்ட் சுவர் மீது ஆபத்தான முறையில் அமருகின்றனர்.

    எனவே பயணிகள் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக சிமெண்ட் சுவர் மீது, அமருவதை தடுக்க சிமெண்ட் சுவரை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற வேண்டும் என பாஜக சார்பில் வாயில் கருப்பு துணி கட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதில் பா.ஜ.க. மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் ரேகா, மாவட்ட தலைவர் கோதண்டராமன், கீழ்நகர் மல்லிகா, பெரிய அய்யம்பாளையம் கிருத்திகா, பானு, ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் நகரப் பகுதிக்குள் பஸ் கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
    • திருவண்ணாமலை நகரை சுற்றிலும் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் நகரப் பகுதிக்குள் பஸ் கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை நகரை சுற்றிலும் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 13 இடங்களில் தற்காலிக விவசாயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்த விவரங்களையும் போலீசார் ஒளிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.

    போக்குவரத்து கழகம் சார்பிலும் தற்காலிக பஸ் நிலையம் குறித்த விவரங்களை அறிவித்த வண்ணம் உள்ளனர்.

    • சென்னை, புதுச்சேரி, வேலூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து இன்று முதல் 8-ந்தேதி வரை திருவண்ணாமலைக்கு 24 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
    • தென் மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட்டன.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை மகா தீப விழா நடக்கிறது. சுமார் 30 லட்சம் பக்தர்கள் தீபத்தை தரிசிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை, புதுச்சேரி, வேலூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து இன்று முதல் 8-ந்தேதி வரை திருவண்ணாமலைக்கு 24 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை கடற்கரையில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு புறப்பட்டு வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வருகிறது.

    இந்த ரெயில் நாளை அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு காலை 9 மணி அளவில் சென்னை கடற்கரையை சென்றடைகிறது.

    புதுச்சேரியில் இருந்து இன்று மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 10.30 மணிக்கு வருகிறது. இந்த ரெயில் நாளை அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு காலை 6.20 மணிக்கு புதுச்சேரியை சென்றடைகின்றது. நாளை மயிலாடுதுறையில் இருந்து ரெயில் காலை 6 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக காலை 10.55 மணி அளவில் திருவண்ணாமலைக்கு வருகின்றது. அந்த ரெயில் அன்று மதியம் 12.40 மணி அளவில் புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு மீண்டும் மயிலாடுதுறையை சென்று அடைகின்றது.

    அதேபோல் கடலூர் மாவட்டம் திருபாதிரிப்புலியூரில் இருந்து நாளை இரவு 8.50 மணிக்கு ரெயில் புறப்பட்டு விழுப்புரம் வழியாக இரவு 10.55 மணிக்கு திருவண்ணாமலை வருகை தந்து அங்கிருந்து வேலூரை நள்ளிரவு 12.40 மணி அளவில் சென்றடைகின்றது.

    மேலும் வேலூரில் இருந்த திருபாதிரிப்புலியூர் செல்லும் ரெயில் 7-ந் தேதி வேலூரில் அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3 மணி அளவில் திருவண்ணாமலைக்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து திருபாதிரிப்புலியூரை காலை 5.40 மணி அளவில் சென்றடைகின்றது.

    7-ந்தேதி மயிலாடுதுறையில் இருந்து ரெயில் புறப்பட்டு காலை 6 மணிக்கு விழுப்புரம் வழியாக காலை 10.55 மணி அளவில் திருவண்ணாமலைக்கு வருகின்றது. அந்த ரெயில் அன்று மதியம் 12.40 மணி அளவில் புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு மீண்டும் மயிலாடுதுறையை சென்று அடைகின்றது. 7-ந்தேதி திருபாதிரிப்புலியூரில் இருந்து இரவு 8.50 மணிக்கு ரெயில் புறப்பட்டு விழுப்புரம் வழியாக இரவு 10.55 மணிக்கு திருவண்ணாமலை வருகை தந்து அங்கிருந்து வேலூரை நள்ளிரவு 12.40 மணி அளவில் சென்றடைகின்றது.

    அதேபோல் 7-ந்தேதி சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வருகிறது. இந்த ரெயில் 8-ந்தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு காலை 9 மணி அளவில் சென்னை கடற்கரையை சென்றடைகிறது.

    புதுச்சேரியில் இருந்து 7-ந்தேதி மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 10.30 மணிக்கு வருகிறது. இந்த ரெயில் 7-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு காலை 6.20 மணிக்கு புதுச்சேரியை சென்றடைகின்றது.

    மேலும் வேலூரில் இருந்த திருபாதிரிப்புலியூர் செல்லும் ரெயில் 8-ந்தேதி வேலூரில் அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3 மணி அளவில் திருவண்ணாமலைக்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து திருபாதிரிப்புலியூரை காலை 5.40 மணி அளவில் சென்றடைகின்றது.

    சென்னை புதுச்சேரி விழுப்புரம் வேலூர் பகுதியில் இருந்து சிறப்பு ரெயில்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. இதே போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டன.

    தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று முதல் 7-ந் தேதி வரை 3 நாட்கள் 2700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட்டன ‌

    விழுப்புரம்-திருவண்ணாமலை வழித்தடங்களில் 317 பஸ்களும், திண்டிவனம்-திருவண்ணாமலை வழித்தடங்களில் 82 பஸ்களும், புதுச்சேரி-திருவண்ணாமலை வழித்தடங்களில் 180 பஸ்களும், திருக்கோவிலூர்-திருவண்ணாமலை வழித்தடங்களில் 115 பஸ்களும், கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை வழித்தடங்களில் 200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்களின் இயக்கத்தை முன்னிட்டு முக்கிய பஸ் நிலையங்களில் பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கேற்ப பஸ்களை ஏற்பாடு செய்திடவும், பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

    • நாளை காலை பரணி தீபம் ஏற்றப்படுகிறது.
    • 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவமும், தொடர்ந்து 25-ந் தேதி பிடாரி அம்மன் உற்சவமும் விநாயகர் உற்சவம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து நவம்பர் 27-ந்தேதி கோவில் சாமி சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு மகாதீப விழா தொடங்கியது.

    இதனை தொடர்ந்து 10 நாள் காலை இரவு என இரு வேளைகளிலும் பஞ்சபூர்த்திகள் மாடவீதி உலா வருகின்றனர். விழாவில் 7-ம் நாளான கடந்த 3-ந்தேதி பஞ்ச மூர்த்திகள் மகா தேரோட்டம் நடைபெற்றது.

    கார்த்திகை தீப விழாவின் உச்ச நிகழ்வாக நாளை செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணி அளவில் கோவில் சாமி சன்னதி அருகில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    இதற்காக தயார் செய்யப்பட்டுள்ள 5 ½ அடி உயரம் கொண்ட செப்பு கொப்பரை தயார் செய்யப்பட்டு இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலை மீது எடுத்து சென்றனர்.

    இதற்காக 4500 கிலோ நெய் மற்றும் 1500 மீட்டர் காடா துணி தயார் நிலையில் வைக்கப்பட்டு அதனையும் மலைக்கு கொண்டு சென்றனர்.

    கார்த்திகை தீப திருவிழாவில் பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் தமிழ்நாடு உட்பட 4 மாநில கவர்னர்கள் மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் வருகை தர உள்ளனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • பிரம்ம தீர்த்தத்தில் சுப்ரமணியர் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.
    • மகாதீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தீப திருவிழா கோவிலின் வளாகத்திற்குள் பக்தர்களின்றி நடைபெற்றது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு உள்ளதால் இந்த ஆண்டு தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது.

    அதன்படி இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனை முன்னிட்டு நாளை அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற உள்ளது.

    அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படும். இதையடுத்து பிரம்ம தீர்த்தத்தில் சுப்ரமணியர் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.

    மாலையில் பஞ்சமூர்த்திகள், சாமி சன்னதி முன்பாக எழுந்தருள்வார்கள். அதைத்தொடர்ந்து 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும். அதேநேரத்தில் மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

    அப்போது கோவிலில் கூடியிருக்கும் பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்வார்கள். மகாதீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். மகா தீபம் ஏற்றியதும் கிரிவலப்பாதையில் இருக்கும் பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணங்குவார்கள். மகாதீபம் ஏற்றப்படும் நாளில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மலையில் தீபம் ஏற்றும் வரை தங்கள் வீடுகளிலோ, வியாபார நிறுவனங்களிலோ மின்விளக்குகள் போடமாட்டார்கள். அதன்பின்னரே ஏற்றுவார்கள்.

    பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் சென்னை உள்ளிட்ட இடங்களிலிருந்து சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

    இவை இன்று (திங்கட்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது. அதனால் இன்று முதல் திருவண்ணாமலை நகர் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும்.

    பாதுகாப்பு பணிக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் சுமார் 12 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • குடிபோதையில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி பாரதியார் தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 45).இவர், அந்த பகுதியில் நின்றிருந்தபோது, குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவர் அங்கு வந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    பின்னர் அவரை தாக்கி கீழே தள்ளி உள்ளார். இதில் காயம் அடைந்த அருள்தாஸ் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி நகர போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து, வாலிபரை கைது செய்தார்.

    • மரத்தில் தூக்கில் தொங்கினார்
    • போலீசார் விசாரணை

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூரை அடுத்த கீக்களூர் புரவடை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிர மணி, விவசாயி. இவரது மகள் சுபுலட்சுமி (வயது 15), அவலூர்பேட்டை பெண்கள் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது போதையில் தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரம்
    • கடலூர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்

    ஆரணி:

    போளூர் அடுத்த மூலக்காடு பகுதியை சேர்ந்த தொழிலாளிக்கும், ஆரணியை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. பெண்ணிற்கு 17 வயதில் மகன் உள்ளார்.

    இந்த நிலையில் தொழிலாளி அடிக்கடி பெண் வீட்டிற்கு வந்துள்ளார். இது சிறுவனுக்கு பிடிக்கவில்லை. இதனால் தொழிலாளிடம் இனிமேல் எனது வீட்டிற்கு வரக்கூடாது என கண்டித்துள்ளார்.

    கடந்த 1-ந் தேதி மீண்டும் தொழிலாளி மது போதையில் அப்பெண் வீட்டிற்கு வந்து சிறுவனிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    பின்னர் சிறுவனுக்கும் தொழிலாளிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த சிறுவன் மற்றும் அவரது தாயார் சேர்ந்து தொழிலா ளியை கம்பு மற்றும் கையால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் மண்டை உடைந்து படுகாயம் அடைந்தார்.

    இதனைக் கண்டு அக்கம்பக்கத்தினர் தொழிலாளியை மீட்டு ஆரணி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் .

    இது குறித்து தொழிலாளி நேற்று ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்து கடலூர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

    • அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
    • 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் செய்யாறு வட்ட கிளையின் பேரவை கூட்டம் வட்டக்கிளை தலைவர் எல்.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

    பேரவைக் கூட்டத்தினை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சம்பத் வரவேற்றார்.

    இறுதியாக மாவட்ட செயலாளர் பிரபு நன்றி கூறினார்.

    கூட்டத்தில் செய்யாறை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க கோரியும், சார் நிலை அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலேயே கட்டிக் கொடுக்கும் வகையில் இடம் ஒதுக்கீடு செய்யக் கோரியும், பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பேரவையில் 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • தீப திருவிழா முன்னிட்டு நடந்தது
    • ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தீப திருவிழா நாட்களின் போது, சென்னையை சார்ந்த இந்து ஆன்மிக சேவா ஸ்மிதி டிரஸ்ட் (தமிழ்நாடு) சிவனடியார்கள் குழுவினர்கள் திருக்குடைகளை ஆண்டுதோறும் வழங்கிவருகின்றனர்.

    அதன்படி இந்த ஆண்டும் திருக்குடைகள் வழங்கிட சிவனடியார்கள் கீழ்பென்னாத்தூர் வழியாக வந்தனர். அவர்களுக்கு, கீழ்பென்னாத்தூர் ஸ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவில் சார்பில், ஸ்ரீமீனாட்சிசுந்தரேஸ்வர் சேவா சங்க நிர்வாகிகள் மற்றும் சிவபக்தர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    சிவன் கோவிலில் திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, குடைக்குழு சிவனடியார்களை திருவண்ணாமலை கோவிலுக்கு வழி அனுப்பிவைத்தனர்.

    நிகழ்ச்சியில், சிவபக்தர்கள் குமார் (எ) கிருஷ்ணராஜ், ரமேஷ் பாண்டியன், விஜயகுமார், சண்முகம், சதீஷ், ரவிக்குமார், முத்துகுமரன், முத்தழகர், ராஜகோபால் மற்றும் சிவபக்தர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மாட விதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் நீந்தி வந்தது.
    • இந்த தேர் பெண்களால் மட்டுமே இழுக்கப்படும்.

    திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா முன்னிட்டு நேற்று பஞ்ச மூர்த்திகள் தேர்த்திருவிழா நடைபெற்றது முதலில் விநாயகர் தேர் காலை 6 45க்கும் தொடங்கி 10 20க்கு நிலைக்கு வந்தன.

    அதனைத் தொடர்ந்து முருகர் 10.35க்கும் தொடங்கி 2.50 மணிக்கு நிலைக்கு வந்த சேர்ந்தன. தொடர்ந்து அண்ணாமலையார் பெரிய தேர் மாலை 3. 47 க்கு தொடங்கியது பெரிய தேர் தொடங்கியது.

    அப்போது அண்ணாமலையாருக்கு அரோகரா என்று விண்ணதிர கோஷம் மிட்டு பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுக்க தொடங்கினர்.

    மாட விதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் நீந்தி வந்தது. பின்பு இரவு 11 42 மணிக்கு நிலைக்கு வந்து அடைந்தன இதனைத் தொடர்ந்து அம்மன் தேர் நள்ளிரவு ஒரு மணிக்கு தொடங்கியது. இந்த தேர் பெண்களால் மட்டுமே இழுக்கப்படும். இது தேர் மாட வீதியை உலா வந்து விடியற்காலை 4 மணிக்கு வந்து நிலைக்கு சேர்ந்தன. இதனுடன் சண்டிகேஸ்வரர் தேரும் வலம் வந்தது.

    ×