என் மலர்
திருவள்ளூர்
சென்னை, மேற்கு மாம்பலம் சுப்பிரமணி நகர் பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் அசோக் நகர் 7வது அவின்யூ பகுதியில் உள்ள பாரில் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிரே அமர்ந்து இருந்த 4பேர் கும்பல் அவரிடம் “நீ புதிதாக இங்கு வந்து இருக்கிறாய். எனவே எங்களுக்கும் ஓசியில் பீர் வாங்கி கொடுத்துவிட்டு செல்’ என்று கேட்டு ரகளை செய்தனர்.
இதனை கண்டித்த என்ஜினீயரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அசோக் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து என்ஜினீயரை தாக்கியதாக தமிழ்வளவன், சரவணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தனசேகர். இவரது மனைவி செல்வி(34). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு 2வதாக ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் வீட்டில் இருந்த செல்வி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
குன்றத்தூர் போலீசார் செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே செல்வியின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி விழா நடைபெற்றது.
கொரோனா தொற்று தற்போது குறைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டு உள்ளன. இந்தநிலையில் வீரராகவர் கோவிலில் கடந்த 6ந்தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது.
48 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட திருத்தேரில் காலை 7.30 மணிக்கு உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேரடியில் இருந்து புறப்பட்ட பனகல் தெரு, குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு வழியாக தேர் மீண்டும் தேரடியை வந்தடைந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுப்பாடுகள் இன்றி நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
முன்னதாக தேர் செல்லும் முக்கிய சாலையான பனகல் தெரு, குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு உள்ளிட்ட தெருக்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு இருந்தது.
வருகிற 14ந் தேதி காலை 10 மணிக்கு கோவில் திருகுளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
தேரோட்டத்தையொட்டி துணை போலீஸ் சூப்பிரெண்டு சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. சென்னையில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி கடந்த 5ந் தேதி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஆரம்பத்தில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது அதன்பின்னர் தண்ணீர் திறப்பு 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து கடந்த 8ந்தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது. அன்று இரவே கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது.
ஆரம்பத்தில் பூண்டி ஏரிக்கு 293 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. தற்போது கிருஷ்ணா நீர்வரத்து 450 கனஅடியாக அதிகரித்து உள்ளது. ஜீரோபாயிண்டுக்கு 533 கன அடி நீர் வருகிறது.
வரும் நாட்களில் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தண்ணீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர் மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 1.279 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 653 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதேபோல் பேபி சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
திருவள்ளூர் அடுத்த சத்தரை கிராமம், கொள்ள காலனியைச் சேர்ந்தவர் நம்பிராஜ். இவரது மனைவி சந்திரா(33). இவர்களுக்கு ஒரு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சந்திராவுக்கு பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 5ந் தேதி மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் இரவு சந்திரா, தனது தாயுடன் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தார்.
அப்போது அவரிடம் குழந்தை இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த கணவர் நம்பிராஜ், குழந்தை குறித்து மனைவி சந்திராவிடம் கேட்டார். அப்போது அவர் குழந்தை இறந்து விட்டது, யாரிடமோ கொடுத்து விட்டேன் என மழுப்பலாக பதில் கூறினார்.
இதையடுத்து அருகில் வசிப்போர் மற்றும் உறவினர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து மப்பேடு போலீசார் பேரம்பாக்கம் அரசு மருத்துவமனையில் விசாரித்தபோது குழந்தை நலமாக இருந்ததாகவும், தாயுடன் குழந்தையை அனுப்பியதாகவும் அங்கிருந்த டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மப்பேடு போலீசார் நடத்திய விசாரணையில் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் பச்சிளம் குழந்தையை ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.
போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணிடம் இருந்த குழந்தையை மீட்டு திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக குழந்தையை வாங்கிய பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த வல்லூர் அனல் மின் நிலையத்தில் மொத்தம் உள்ள 3 அலகுகளில் தலா 500 வீதம் 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் 2வது அலகில் உள்ள கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. முதல் மற்றும் 3வது அலகில் மொத்தம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. கொதிகலன் குழாயை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
பொன்னேரி அடுத்த உத்தண்டி கண்டிகையில் வசித்து வருபவர் சுமதி. இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மகன்கள் சாமி, முனுசாமி. இவர்களுடன் சுமதியின் தாய் ஜெயம்மாளும் தங்கி உள்ளார்.
சாமியின் மனைவி பிரசவத்திற்காக கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சுண்ணாம்பு குளம் கிராமத்தில் இருக்கும் பெற்றோர் வீட்டில் உள்ளார். அவரை பார்ப்பதற்காக சாமி சென்று விட்டார்.
இதையடுத்து வீட்டில் சுமதி, அவரது இளைய மகன் முனுசாமி, தாய் ஜெயம்மாள் மட்டும் இருந்தனர். இரவு அவர்கள் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கினர்.
நள்ளிரவு முகமூடி அணிந்த கும்பல் திடீரென வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் பீரோவில் இருந்த ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் வெள்ளி குத்து விளக்கை கொள்ளையடித்தனர்.
பின்னர் அவர்கள் அறையில் தூங்கிக்கொண்டு இருந்த சுமதியின் கழுத்தில் கத்தியை வைத்து தங்க செயினை சுழற்றி தரும்படி மிரட்டினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு எழுந்த முனுசாமி கொள்ளையர்களை தடுக்க முயன்றார்.
ஆத்திரம் அடைந்த கொள்ளை கும்பல் சுமதி, அவரது மகன் முனுசாமி, ஜெயம்மாள் ஆகியோரை குத்திக்கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.
பயந்து போன சுமதி தான் அணிந்து இருந்த 9 பவுன் செயினை கொள்ளையர்களிடம் கழற்றி கொடுத்தார். உடனே முகமூடி கும்பல் நகை-பணத்துடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியில் முகமூடி கும்பல் வீடு புகுந்து கத்திமுனையில் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர் அடுத்த பண்ணூர் சூசையப்பர் தெருவை சேர்ந்தவர் பிரபு. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சத்திய பிரியா.
கடந்த 7-ந்தேதியன்று கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். நேற்று காலை அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக போன் மூலம் பிரபுவுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து அவர்கள் வீட்டுக்கு திரும்பிவந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த கம்மல், மூக்குத்தி, வளையல், செயின் என 5 பவுன் தங்க நகைகளும், 1 கிலோ வெள்ளி பொருட்களும் கொள்ளை போய் இருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த உத்தண்டி கண்டிகையில் வசித்து வருபவர் சுமதி. இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மகன்கள் சாமி, முனுசாமி. இவர்களுடன் சுமதியின் தாய் ஜெயம்மாளும் தங்கி உள்ளார்.
சாமியின் மனைவி பிரசவத்திற்காக கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சுண்ணாம்பு குளம் கிராமத்தில் இருக்கும் பெற்றோர் வீட்டில் உள்ளார். அவரை பார்ப்பதற்காக சாமி சென்று விட்டார்.
இதையடுத்து வீட்டில் சுமதி, அவரது இளைய மகன் முனுசாமி, தாய் ஜெயம்மாள் மட்டும் இருந்தனர். இரவு அவர்கள் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கினர்.
நள்ளிரவு முகமூடி அணிந்த கும்பல் திடீரென வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் பீரோவில் இருந்த ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் வெள்ளி குத்து விளக்கை கொள்ளையடித்தனர்.
பின்னர் அவர்கள் அறையில் தூங்கிக் கொண்டு இருந்த சுமதியின் கழுத்தில் கத்தியை வைத்து தங்க செயினை சுழற்றி தரும்படி மிரட்டினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு எழுந்த முனுசாமி கொள்ளையர்களை தடுக்க முயன்றார்.
ஆத்திரம் அடைந்த கொள்ளை கும்பல் சுமதி, அவரது மகன் முனுசாமி, ஜெயம்மாள் ஆகியோரை குத்திக் கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.
பயந்து போன சுமதி தான் அணிந்து இருந்த 9 பவுன் செயினை கொள்ளையர்களிடம் கழற்றி கொடுத்தார். உடனே முகமூடி கும்பல் நகை பணத்துடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியில் முகமூடி கும்பல் வீடு புகுந்து கத்திமுனையில் நகை, பணத்தை கொள்ளை டித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருக றார்கள்.
ஆவடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை முதல் விட்டு, விட்டு பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக மழையில் நனைந்து இருந்த ஆவடி தாசில்தார் அலுவலகத்தின் சுற்றுச்சுவர் சுமார் 50 அடி நீளத்துக்கு திடீரென இடிந்து அருகில் நிறுத்தப்பட்டு இருந்த கார் மீது விழுந்தது.
இதில் காரின் கண்ணாடிகள் நொறுங்கின. காரில் இருந்த டிரைவர் நாச்சியப்பன் என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சுவர் இடிந்து விழுந்த போது அருகில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இதுகுறித்து பட்டாபிராம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவாபுரியில் புகழ்பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் வந்தால் பக்தர்கள் வேண்டிய வரமான வீடு, திருமணம், பிள்ளைப்பேறு, வேலைவாய்ப்பு, வியாபாரம் உள்ளிட்டவை சிறப்பாக அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
எனவே இந்த கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் அதி்காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். கோவிலில் உள்ள உண்டியல் கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி திறக்கப்பட்டு பணம் கணக்கிடப்பட்டு வங்கியில் செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், கோவிலில் உள்ள உண்டியல்கள் அனைத்தும் நிறைந்ததால் நேற்று மதியம் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.
கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் செயல் அலுவலர்கள் பிரகாஷ், சரவணன், இந்து சமய அறநிலை நிலைய துறை ஊத்துக்கோட்டை ஆய்வாளர் சுனில்குமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் பணத்தை கணக்கிட்டனர்.
இது நேற்று இரவு முடிவடைந்தது. இதில் மொத்தம் ரூ.49 லட்சத்து 72 ஆயிரத்து 658 வசூலாகி இருந்தது. இதையடுத்து கோவிலுக்கு வந்திருந்த வங்கி ஊழியர்களிடம் பணம் டெபாசிட் செய்யப்பட்டது. மேலும், உண்டியலில் தங்கம், வெள்ளி, தகரம் உள்ளிட்டவையும் இருந்தது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னையில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்த 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.757 டி.எம்.சி. ஆகும். கோடைக்காலத்தில் இந்த குடிநீர் ஏரிகள் வறண்டு விடுவதால் சென்னையில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
இதனை கருத்தில் கொண்டும், பலத்த மழைக்கு பின் ஏரிகளில் இருந்து திறந்து விடும் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்த்து புதிய நீர்த்தேக்கம் கட்டவும் நீர்வள ஆதார துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி சென்னைக்கு குடிநீர் வழங்கும் வகையில் 6வது புதிய ஏரியாக பூண்டி அருகே உள்ள ராமஞ்சேரியில் 800 ஹெக்டேர் நிலப்பரப்பில் 2 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கக்கூடிய பிரமாண்ட நீர்த்தேக்கத்தை கட்ட திட்டமிட்டு உள்ளது. இதற்கு ரூ.700 கோடி செலவிட நீர்வள ஆதாரத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
இந்தநிலையில் புதிய நீர்த்தேக்கம் அமைய உள்ள பகுதியை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், சார் ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பொதுப்பணித் திலகம், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் நாராயணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.






