என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  அசோக்நகரில் ஓசியில் பீர் கேட்டு என்ஜினீயர் மீது தாக்குதல்- 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை அசோக்நகரில் ஓசியில் பீர் கேட்டு என்ஜினீயரை தாக்கியது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
  போரூர்:

  சென்னை, மேற்கு மாம்பலம் சுப்பிரமணி நகர் பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் அசோக் நகர் 7வது அவின்யூ பகுதியில் உள்ள பாரில் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிரே அமர்ந்து இருந்த 4பேர் கும்பல் அவரிடம் “நீ புதிதாக இங்கு வந்து இருக்கிறாய். எனவே எங்களுக்கும் ஓசியில் பீர் வாங்கி கொடுத்துவிட்டு செல்’ என்று கேட்டு ரகளை செய்தனர்.

  இதனை கண்டித்த என்ஜினீயரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அசோக் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து என்ஜினீயரை தாக்கியதாக தமிழ்வளவன், சரவணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
  Next Story
  ×