என் மலர்
திருவள்ளூர்
- பாடி மேம்பாலத்தில் இன்று மதியம் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது.
- அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அம்பத்தூர்:
பாடி மேம்பாலத்தில் இன்று மதியம் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடனே அங்கேயே லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். விபத்தில் பலியானது மேத்யூ (வயது68) என்பது தெரிய வந்தது. அவரை பற்றி அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காக்களூரில் உள்ள மதுபான கடை அருகே திருவள்ளூர்-ஆவடி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் ஆவடி நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- இதில் பலத்த காயம் அடைந்த குணசுந்தரியும், முருகனும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். உடனே விபத்து ஏற்படுத்திய டிரைவர் காரை அங்கேயே நிறுத்தி விட்டுதப்பி ஓடி விட்டார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குணசுந்தரி (வயது50). இவர் தனது தம்பி முருகனுடன் (45) திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வந்தார்.
கோவில் விழாவை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை இருவரும் மோட்டார் சைக்கிளில் பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
காக்களூரில் உள்ள மதுபான கடை அருகே திருவள்ளூர்-ஆவடி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் ஆவடி நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த குணசுந்தரியும், முருகனும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். உடனே விபத்து ஏற்படுத்திய டிரைவர் காரை அங்கேயே நிறுத்தி விட்டுதப்பி ஓடி விட்டார்.
அவ்வழியே சென்றவர்கள் படுகாயம் அடைந்த இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குணசுந்தரியும், முருகனும் பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை தேடி வருகிறார்கள்.
விபத்தில் அக்காள்-தம்பி ஒரே நேரத்தில் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- குடிநீர் தொட்டி கட்டப்படாமல் அப்பகுதி மக்களுக்கு பைப்லைன் மூலமாக நேரடியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- குடிநீருக்கு அதிக விலை கொடுத்து தண்ணீர் கேன் வாங்கும் நிலையும் ஏற்பட்டு உள்ளது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட உப்பளம், பெரியார் நகர், கூடுவாஞ்சேரி, பகுதிகளுக்கு இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து கீழே விழும் நிலை காணப்பட்டதால் பாதுகாப்பு கருதி கடந்த ஆண்டு இடிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை குடிநீர் தொட்டி கட்டப்படாமல் அப்பகுதி மக்களுக்கு பைப்லைன் மூலமாக நேரடியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அடிக்கடி பைப்லைன் உடைப்பு, மின்வெட்டு, மின் மோட்டார் பழுது, ஆகியவற்றால் சீராக குடிநீர் வழங்காததால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் இரண்டு கிலோ மீட்டர் தூரம் உள்ள சின்னக் காவனம் பகுதிக்கு சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளது. மேலும் குடிநீருக்கு அதிக விலை கொடுத்து தண்ணீர் கேன் வாங்கும் நிலையும் ஏற்பட்டு உள்ளது.
எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகம் புதிதாக மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தடையில்லா குடிநீர் வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று சிறுமி சோனியா கூறியுள்ளார். இதனால் பெற்றோர் சிறுமியை கண்டித்ததாக கூறப்படுகிறது.
- இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி சோனியா வீட்டில் இருந்த கரப்பான் பூச்சி மருந்தை எடுத்து குடித்தார்.
திருவொற்றியூர்:
எண்ணூர் காட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் சோனியா (வயது 11). ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று சிறுமி சோனியா கூறியுள்ளார். இதனால் பெற்றோர் சிறுமியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி சோனியா வீட்டில் இருந்த கரப்பான் பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். மயங்கி விழுந்த அவரை பெற்றோர் மீட்டு உடனடியாக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி சோனியா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருவள்ளூர் அடுத்த காக்களூர் அப்துல்கலாம் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் என்கிற சேட்டு.
- திருவள்ளூர் டி.எஸ்.பி. சந்திரதாசன், தாலுக்கா இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த காக்களூர் அப்துல்கலாம் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் என்கிற சேட்டு. தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா.கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரிடம் விவாகரத்து கேட்டு மஞ்சுளா, திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது மஞ்சுளாவுடன் தந்தைக்கு எதிராக மகள் ஜெயஸ்ரீயும் ஆஜரானதால் சந்திரன் ஆத்திரம் அடைந்தார்.
இதையடுத்து நேற்று இரவு மஞ்சுளா, அவரது மகள் ஜெயஸ்ரீ உறவினர் வீட்டின் அருகே பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த சந்திரன் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி மஞ்சுளா, மகள் ஜெயஸ்ரீ ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து திருவள்ளூர் டி.எஸ்.பி. சந்திரதாசன், தாலுக்கா இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆவடியை அடுத்த அண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். சாப்ட்வேர் என்ஜினீயர்.
- சுகுமார், தனது மகள் ரம்யாவுடன் மோட்டார் சைக்கிளில் வானகரம் நோக்கி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
ஆவடியை அடுத்த அண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். சாப்ட்வேர் என்ஜினீயர். இவரது மகள் ரம்யா (வயது10). திருவேற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
சுகுமார், தனது மகள் ரம்யாவுடன் மோட்டார் சைக்கிளில் வானகரம் நோக்கி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக சுகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது உரசியது.
இதில் நிலை தடுமாறிய சுகுமார், மகள் ரம்யாவுடன் மோட்டார் சைக்கிளோடு சாலையில் கீழே விழுந்தார். இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய சிறுமி ரம்யா, தந்தையின் கண் முன்பே சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சுகுமார் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கோயம்பேடு போக்கு வரத்து போலிசார் சிறுமி ரம்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி டிரைவரான திருவேற்காடு பகுதியை சேர்ந்த பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரவாயல் பைபாஸ் சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் அம்பத்தூரில் இருந்து தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென பழுதானது. இதையடுத்து கண்டெய்னர் லாரியை டிரைவர் சாலை ஓரமாக நிறுத்தி வைத்தார்.
அப்போது அவ்வழியாக இரும்பு காயில்கள் ஏற்றிக் கொண்டு வந்த 24 டயர் கொண்ட "டாரஸ்" லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலை யோரம் நிறுத்தப்பட்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது வேகமாக மோதி தலைகுப்புற சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 2 லாரி டிரைவர்கள், கிளீனர் ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதிகாலை நேரத்தில் நடந்த இந்த விபத்து காரணமாக மதுரவாயல் பைபாஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போக்கு வரத்து போலீசார் விபத்தில் சிக்கி கவிழ்ந்த லாரி மற்றும் அதில் இருந்து கீழே சரிந்த இரும்பு காயில்களை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
- பெரியபாளையம் அருகே உள்ள ஆரணியை அடுத்த நடுக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் செல்வம்.
- ஆரணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள ஆரணியை அடுத்த நடுக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். மண்பாண்டம் பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு சென்று தங்கினார். இன்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தபோது கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பிரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து ஆரணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அச்சரப்பள்ளம் கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் மனு அளித்துள்ளனர்.
- பிட்காயினில் முதலீடு செய்தால் பல லட்ச ரூபாய் சம்பாதிக்கலாம் என ஆசை ஏற்படுத்தி உள்ளார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அச்சரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களிடம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் அறிமுகம் ஆனார்.
அவர் பிட்காயினில் முதலீடு செய்தால் பல லட்ச ரூபாய் சம்பாதிக்கலாம் என ஆசை ஏற்படுத்தி உள்ளார்.
இதனால் அதிக வட்டியும் தங்க நாணயமும் வந்து சேரும் என்று தெரிவித்தார். இதனை நம்பிய கிராமத்தைச் சேர்ந்த 22 பேர் சுமார் ரூ.80 லட்சம் ரொக்க பணத்தை ஆனந்தனிடம் கொடுத்தனர். ஆனால் அவர் அதற்கு கூடுதல் பணம் கொடுக்க வில்லை. மேலும் அசல் பணத்தையும் திருப்பி கொடுக்க மறுத்து மிரட்டல் விடுத்தார்.
இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அச்சரப்பள்ளம் கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் மனு அளித்துள்ளனர்.
அந்த புகார் மனுவில் மோசடி செய்து பணத்தைப் பறித்த நபரிடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.
- லாரியை முந்தி செல்ல முயன்றபோது லாரி எதிர்பாராதவிதமாக சுப்பராம ராஜூ மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- மோட்டார் சைக்கிளில் உடன் வந்த கேசவலு சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
திருத்தணி:
ஆந்திர மாநிலம், புத்தூர் அடுத்த வடமால் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பராம ராஜூ (வயது 52). விவசாய கூலி தொழிலாளி.
இவர் நேற்று தனது நண்பரான கேசவலு (வயது 50) என்பவருடன் வேலை நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் அரக்கோணத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருத்தணி பைபாஸ் ரவுண்டானா அருகே, முன்னே சென்றுக்கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயன்றபோது லாரி எதிர்பாராதவிதமாக சுப்பராம ராஜூ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுப்பராம ராஜூ லாரி டயரில் சிக்கி படுகாயமடைந்தார்.
அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி சுப்பு ராம ராஜூ பரிதாபமாக இறந்து போனார்.
மோட்டார் சைக்கிளில் உடன் வந்த கேசவலு சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
- திருவள்ளூர் மாவட்ட பொருளாளரும், திருத்தணி தாசில்தாருமான வெண்ணிலா தலைமையில், 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ராஜாநகரம் கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆர்.கே.பேட்டை தாசில்தார் தமயந்தி, ஆர்.கே.பேட்டை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்களை ராஜா நகரம் கிராமத்தில் சிலர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று மாலை திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
திருவள்ளூர் மாவட்ட பொருளாளரும், திருத்தணி தாசில்தாருமான வெண்ணிலா தலைமையில், 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது வருவாய்த்துறை அலுவலர்களை தாக்கிய மர்மநபர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
- பூந்தமல்லி தனி கிளை சிறை வார்டன் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் அறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- பூந்தமல்லி போலீசார் நிஜாம் அலிக்கு செல்போன், பேட்டரிகளை கொடுத்தவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
பூந்தமல்லி:
கும்பகோணம் அடுத்த திருபுவனம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிஜாம் அலி என்பவர் பூந்தமல்லியில் உள்ள தனி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இன்று பூந்தமல்லி தனி கிளை சிறை வார்டன் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் அறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிஜாம் அலி தங்கி இருந்த அறையில் செல்போன், சார்ஜர், பேட்டரி ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை பறிமுதல் செய்த சிறை காவலர்கள் இதுகுறித்து பூந்தமல்லி போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் பூந்தமல்லி போலீசார் நிஜாம் அலிக்கு செல்போன், பேட்டரிகளை கொடுத்தவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.






