என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருவள்ளூர் அருகே விவாகரத்து கேட்டு வழக்கு போட்டதால் மனைவி, மகளை வெட்டிய தொழிலாளி
  X

  திருவள்ளூர் அருகே விவாகரத்து கேட்டு வழக்கு போட்டதால் மனைவி, மகளை வெட்டிய தொழிலாளி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருவள்ளூர் அடுத்த காக்களூர் அப்துல்கலாம் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் என்கிற சேட்டு.
  • திருவள்ளூர் டி.எஸ்.பி. சந்திரதாசன், தாலுக்கா இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருவள்ளூர்:

  திருவள்ளூர் அடுத்த காக்களூர் அப்துல்கலாம் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் என்கிற சேட்டு. தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா.கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

  கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரிடம் விவாகரத்து கேட்டு மஞ்சுளா, திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது மஞ்சுளாவுடன் தந்தைக்கு எதிராக மகள் ஜெயஸ்ரீயும் ஆஜரானதால் சந்திரன் ஆத்திரம் அடைந்தார்.

  இதையடுத்து நேற்று இரவு மஞ்சுளா, அவரது மகள் ஜெயஸ்ரீ உறவினர் வீட்டின் அருகே பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த சந்திரன் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி மஞ்சுளா, மகள் ஜெயஸ்ரீ ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

  இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

  இதுகுறித்து திருவள்ளூர் டி.எஸ்.பி. சந்திரதாசன், தாலுக்கா இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×