என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரு ஆண்டுக்கு முன்பு தண்ணீர் தொட்டி இடிப்பு: பொன்னேரி அருகே குடிநீர் தட்டுப்பாடு
    X

    குடிநீரை சுமந்து செல்லும் மக்கள்


    ஒரு ஆண்டுக்கு முன்பு தண்ணீர் தொட்டி இடிப்பு: பொன்னேரி அருகே குடிநீர் தட்டுப்பாடு

    • குடிநீர் தொட்டி கட்டப்படாமல் அப்பகுதி மக்களுக்கு பைப்லைன் மூலமாக நேரடியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • குடிநீருக்கு அதிக விலை கொடுத்து தண்ணீர் கேன் வாங்கும் நிலையும் ஏற்பட்டு உள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட உப்பளம், பெரியார் நகர், கூடுவாஞ்சேரி, பகுதிகளுக்கு இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து கீழே விழும் நிலை காணப்பட்டதால் பாதுகாப்பு கருதி கடந்த ஆண்டு இடிக்கப்பட்டது.

    ஆனால் இதுவரை குடிநீர் தொட்டி கட்டப்படாமல் அப்பகுதி மக்களுக்கு பைப்லைன் மூலமாக நேரடியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    அடிக்கடி பைப்லைன் உடைப்பு, மின்வெட்டு, மின் மோட்டார் பழுது, ஆகியவற்றால் சீராக குடிநீர் வழங்காததால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் இரண்டு கிலோ மீட்டர் தூரம் உள்ள சின்னக் காவனம் பகுதிக்கு சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளது. மேலும் குடிநீருக்கு அதிக விலை கொடுத்து தண்ணீர் கேன் வாங்கும் நிலையும் ஏற்பட்டு உள்ளது.

    எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகம் புதிதாக மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தடையில்லா குடிநீர் வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×