என் மலர்
திருவள்ளூர்
- பழைய குற்றவாளிகள் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- தொடர் கண்காணிப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கை மூலம் திருவள்ளூர் மாவட்டத்தை கஞ்சா இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் நிருபர்களிடம் கூறியதாவது:-
போதைப் பொருட்களை ஒழிக்க அனைத்து துறையினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளது குறித்து சோதனை மேற்கொண்டதில் 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 47 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடமிருந்து ரூபாய் 1,25,640 மதிப்புள்ள 184.660 கிலோ கிராம் குட்கா கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த 9 நாட்களில் 77.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு கடத்தலில் ஈடுபட்டதாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 11 பேர் சிக்கி உள்ளனர்.
பழைய குற்றவாளிகள் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர் கண்காணிப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கை மூலம் திருவள்ளூர் மாவட்டத்தை கஞ்சா இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஏடிஎம் மையத்திற்குள் இருந்து 2 நபர்கள் வெளியே ஓடினார்கள். அவர்களை அப்பகுதியை மக்கள் பிடிக்க முயன்றனர். ஆனால் மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.
- பின்னர் உள்ளே சென்று பார்த்த அப்பகுதி மக்கள் ஏடிஎம் எந்திரம் உடைந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி ஆஞ்சநேயர் கோவில் அருகே தனியாருக்கு சொந்தமான வங்கி மற்றும் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை ஏடிஎம் எந்திரத்தை உடைக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்ற பொது மக்கள் உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது ஏடிஎம் மையத்திற்குள் இருந்து 2 நபர்கள் வெளியே ஓடினார்கள். அவர்களை அப்பகுதியை மக்கள் பிடிக்க முயன்றனர். ஆனால் மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த அப்பகுதி மக்கள் ஏடிஎம் எந்திரம் உடைந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்க்கொண்டனர். இதில் ஏடிஎம் எந்திரத்தை மர்மநபர்கள் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பொன்னேரி அடுத்த காட்டாவூர் தனியார் கொய்யா பண்ணையில் ஒடிசாவை சேர்ந்த கொரியாபா வேலை செய்து வருகிறார்.
- பொன்னேரி போலீஸ் நிலையத்தில் கொய்யா பண்ணை சூப்பர்வைசர் திலகவதி புகார் கொடுத்தார்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த காட்டாவூர் தனியார் கொய்யா பண்ணையில் ஒடிசாவை சேர்ந்த கொரியாபா வேலை செய்து வருகிறார். இவரது மகன் ராஜ் பால் பாக் (வயது 15). நேற்று முன்தினம் தனது தந்தை திட்டியதால் கோபம் அடைந்து ராஜ்பால்பாக் பண்ணையை விட்டு வெளியே சென்றான். இதுவரை வீடு திரும்பாததால் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் கொய்யா பண்ணை சூப்பர்வைசர் திலகவதி புகார் கொடுத்தார்.
போலீசார் காணாமல் போன ராஜ் பால் பாக்கை தேடி வருகின்றனர்.
- திருத்தணி வழியாக கஞ்சா கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணுக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் தமிழக எல்லை பகுதியில் பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
திருத்தணி:
ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக கஞ்சா கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் திருத்தணி டிஎஸ்பி. விக்னேஷ் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் தமிழக எல்லை பகுதியில் பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திரா மாநிலத்திலிருந்து தமிழகத்தை நோக்கி சந்தேகப்படும்படி வந்த நபரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த நபர் 2 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவர் ஆந்திரா மாநிலம் புத்தூர் பகுதியை சேர்ந்த சேகர் (வயது 44) என்பதும் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
- கிராம மக்கள் தங்கள் தேவைகளுக்கு மளிகை கடை, கூல்ரிங்ஸ் கடை, பால் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை வைத்து வியாபாரிகள் வியாபாரம் நடத்தி வருகின்றனர்.
- அடிக்கடி இரவு நேரங்களில் மர்மநபர்கள் கடையை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவது வழக்கமாகியுள்ளது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி காவல் சரக எல்லைகளான ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி, சிப்காட் கவரப்பேட்டை ஆகிய நான்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள கிராம மக்கள் தங்கள் தேவைகளுக்கு மளிகை கடை, கூல்ரிங்ஸ் கடை, பால் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை வைத்து வியாபாரிகள் வியாபாரம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அடிக்கடி இரவு நேரங்களில் மர்மநபர்கள் கடையை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவது வழக்கமாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நான்கு கடைகளிலும், சிப்காட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஆவின் பால் உள்ளிட்ட நான்கு கடைகளிலும் கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் உள்ள சூப்பர் மார்க், கவரப்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பேக்கரி மற்றும் வீடுகளில் 15 சவரன் நகை, உள்ளிட்ட 10 கடைகளில் 3 லட்சம் ரூபாய் பணம் மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் 3 குழுக்களாக பிரிந்து தனியார் வாகனத்தில் கொள்ளையடித்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மர்மநபர்களை இரண்டு தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
- ஏற்கனவே ஒரு மாணவியும், மாணவர்களும் ரெயிலில் சாகச பயணம் செய்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- தற்போது மாணவி ஒருவர் மீண்டும் ரெயிலில் சாகச பயணம் செய்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநின்றவூர்:
மின்சார ரெயிலில் இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் அரசு பள்ளி மாணவி ஒருவர் ரெயில்வே பிளாட்பாரத்தில் கால்களை தரையில் உரசியவாறு ஆபத்தான முறையில் பயணம் செய்த பதை பதைக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆவடி ரெயில் நிலையத்தில் நேற்று மாலை வேளச்சேரியில் இருந்து திருவள்ளூர் வரை செல்லும் மின்சார ரெயில் வந்து நின்றது. அப்போது ஒரு பெட்டியின் வாசலில் பள்ளி சீருடையில் மாணவியும், மாணவரும் நின்றனர்.
ரெயில் புறப்படும் வரை பிளாட்பாரத்தில் இறங்கி நின்ற நபர்கள் ரெயில் புறப்பட்டதும் ஏறினர். அப்போது மாணவி மட்டும் தனது ஒரு காலை பிளாட்பாரத்தில் உரசியபடி சாகசம் செய்தார்.
இதனை கண்டு ரெயில் பெட்டியில் இருந்த மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் மாணவி எந்த பயமும் இல்லாமல் பிளாட்பாரம் முடியும் வரை தனது சாகசத்தை தொடர்ந்தார்.
இதனை பயணி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வீடியோவில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இதேபோல் ஏற்கனவே ஒரு மாணவியும், மாணவர்களும் ரெயிலில் சாகச பயணம் செய்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மாணவி ஒருவர் மீண்டும் ரெயிலில் சாகச பயணம் செய்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- வாலிபர் ஒருவரை சிகிச்சைக்காக மோட்டார் சைக்கிளில் 2 பேர் அழைத்து வந்தனர்.
- வாலிபரை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு தப்பி ஓடிய நபர்கள் குறித்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு நேற்று காலை வாலிபர் ஒருவர் சிகிச்சைக்காக மோட்டார் சைக்கிளில் 2 பேர் அழைத்து வந்தனர்.
வாலிபரை ஆஸ்பத்திரியில் இறக்கிவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதற்கிடையே சிகிச்சைக்காக வந்தவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
உடனடியாக அங்கிருந்த டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது வாலிபர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.
அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு தப்பி ஓடிய நபர்கள் குறித்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அவர்கள் பிடிபட்டால் தான் ஆஸ்பத்திரியில் இறந்த நபருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதா? அல்லது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் தாக்குதலில் காயம் அடைந்தாரா? என்பது தெரியவரும்.
- இந்த கோவிலில் வருகிற 21-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
- கடந்த 2003-ம் ஆண்டு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
செங்குன்றம் அருகே உள்ள சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் மிகவும் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். கடந்த 2003-ம் ஆண்டு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதற்கிடையே ரூ.1 கோடி மதிப்பில் கோவிலை புனரமைத்து மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து வருகிற 21-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை கோவில் வளாகத்தில் கோ பூஜை, தன பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம், ஸ்ரீ நவகிரக ஹோமம், பூர்ணா ஹூதி, தீப ஆராதனை மற்றும் யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று காலை சாந்தி ஹோமம், யாகசாலை நிர்மாணம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் கும்பஅலங்காரம், முதல்கால ஹோமம், பூர்ணாஹூதி நடைபெற உள்ளது.
நாளை(19-ந்தேதி) காலை 2-ம் கால யாகபூஜை, மாலையில் 3-ம் காலயாக பூஜை, அஷ்டபந்தனம் சாத்துதல், விசேஷ திரவிய ஹோமம் நடக்கிறது. 20-ந்தேதி 4,5-ம் கால யாக பூஜை, மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு அஷ்ட பந்தனம் சாத்துதல் நடக்கிறது. வருகிற 21-ந்தேதி காலை 9.45 மணி முதல் 10.15 மணிக்குள் மகா கும்பாபிஷேம் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார தரிசனம், மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 7.30 மணிக்கு சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது.
- ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் வந்தபோது அங்கிருந்த வேகத்தடை மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் வேகமாக ஏறி இறங்கியது.
- நிலை தடுமாறிய கண்ணன் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார்.
போரூர்:
மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வைரவன். இவரது மகன் கண்ணன் (வயது 25) கார்பெண்டராக வேலை பார்த்து வந்தார்.
இவர் நள்ளிரவு 1.30மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் வந்தபோது அங்கிருந்த வேகத்தடை மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் வேகமாக ஏறி இறங்கியது. இதில் நிலை தடுமாறிய கண்ணன் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார்.
இதில் தலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் போகும் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்.
- ரெயில் பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர்:
அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். இவர் சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று காலை அவர் வழக்கம் போல் கல்லூரிக்கு உடன் படிக்கும் நண்பர்களுடன் மின்சார ரெயிலில் சென்றார். மின்சார ரெயில் ஏகாட்டூர் ரெயில் நிலையத்தில் நின்றபோது அங்கிருந்த சென்னை மாநில கல்லூரி மாணவர்களுக்கும், தினேஷ் மற்றும் அவரது நண்பர்களான பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
இருதரப்பு மாணவர்களும் அரிவாள், கத்தியால் மோதிக் கொண்டனர். இந்த தாக்குதலில் மாணவர் தினேசின் தலையில் பலத்த அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் பல மாணவர்களும் காயம் அடைந்தனர். பின்னர் மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த மாணவர் தினேஷ் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 12 தையல் போடப்பட்டது.
தாக்குதலின் போது ரெயில் நிலையத்தில் மாணவர்கள் விட்டுச்சென்ற கத்தி, அரிவாளை போலீசார் கைப்பற்றினர். இச்சம்பவம் ரெயில் பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இந்த மோதல் தொடர்பாக சென்னை மாநில கல்லூரியை சேர்ந்த 10 பேர் மீது திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
அவர்களை அடையாளம் காண கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
பொன்னேரி:
அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2 நிலைகளில் மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 1-வது நிலையின் 1-வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிக்காக 210 மெகாவாட்டும், 1-வது நிலையின் 2வது அலகில் கொதிகலன் பழுது காரணமாக 210 மெகா வாட் என மொத்தம் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
- திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் பெரிய தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார்.
- மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மகிந்தரை கைது செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் பெரிய தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் பேரம்பாக்கம் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஜெயக்குமாரை வழிமறித்த நரசிங்கபுரம் பெரிய தெருவை சேர்ந்த மகிந்தர் என்பவர் கத்தியால் வெட்டி ரூ. 700-யை பறித்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மகிந்தரை கைது செய்தனர்.






