பூந்தமல்லியில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

ஏடிஎம் மையத்திற்குள் இருந்து 2 நபர்கள் வெளியே ஓடினார்கள். அவர்களை அப்பகுதியை மக்கள் பிடிக்க முயன்றனர். ஆனால் மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.பின்னர் உள்ளே சென்று பார்த்த அப்பகுதி மக்கள் ஏடிஎம் எந்திரம் உடைந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பூந்தமல்லியில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
Published on

பூந்தமல்லி:

பூந்தமல்லி ஆஞ்சநேயர் கோவில் அருகே தனியாருக்கு சொந்தமான வங்கி மற்றும் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை ஏடிஎம் எந்திரத்தை உடைக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்ற பொது மக்கள் உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது ஏடிஎம் மையத்திற்குள் இருந்து 2 நபர்கள் வெளியே ஓடினார்கள். அவர்களை அப்பகுதியை மக்கள் பிடிக்க முயன்றனர். ஆனால் மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த அப்பகுதி மக்கள் ஏடிஎம் எந்திரம் உடைந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்க்கொண்டனர். இதில் ஏடிஎம் எந்திரத்தை மர்மநபர்கள் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com