என் மலர்
திருவள்ளூர்
- பொன்னேரி அடுத்த டி.வி. புரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
- இளம்பெண் கேட்டபோது வாலிபர் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதாக தெரிகிறது.
கும்மிடிப்பூண்டி:
பொன்னேரி அடுத்த டி.வி. புரம் பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இவர் கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்த வெங்கல் பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. காதல் ஆசை வார்த்தை கூறி அவர் நெருங்கி பழகினார். மேலும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியதாக தெரிகிறது. இதனால் இளம்பெண், அந்த வாலிபருடன் மிகவும் நெருக்கமானார். இதில் இளம்பெண் கர்ப்பம் அடைந்தார்.
இதுபற்றி அறிந்நதும் அந்த வாலிபர் இளம் பெண்ணுடன் பழகுவதை நிறுத்தினார். இதுபற்றி இளம்பெண் கேட்டபோது திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், இதுபற்றி பொன்னேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருத்தணி அருகே உள்ள சந்தான கோபாலபுரம் கிராமத்தில் வசிப்பவர் பாபு.
- போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள சந்தான கோபாலபுரம் கிராமத்தில் வசிப்பவர் பாபு (வயது 30). இவர் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 24-ந் தேதி திருத்தணி ரெயில் நிலையம் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணி செய்து வந்துள்ளார். பின்னர் பணி முடிந்து மோட்டார் சைக்கிளை எடுக்க வந்த போது, மோட்டார் சைக்கிள் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ரெயில் நிலையம் முன்பு போலீசாரின் மோட்டார் சைக்கிள் திருடபட்ட சம்பவம் திருத்தணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் பெரிய தெருவை சேர்ந்தவர் சேகர்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் பெரிய தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 45). விவசாயியான இவர், சில ஆண்டுகளாகவே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 24-ந் தேதி வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சேகரின் மனைவி ஜெயந்தி அவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சேகர் உயிரிழந்தார். தற்கொலை செய்து கொண்ட சேகருக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பெண்மணி வாங்கி கொடுத்த உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிவசக்தி உள்ளிட்ட சிலர் மயக்கமடைந்துள்ளனர்.
- அப்போது சிவசக்தி கழுத்தில் அணிந்திருந்த 13 சவரன் நகையை பெண் திருடிச் சென்றுள்ளார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சிவசக்தி. இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை.
இதனையடுத்து எரையூர் கிராமத்தில் பூஜை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று அக்கம் பக்கத்தினர் கூறியதையடுத்து நேற்று சண்முகம், அவரது மனைவி சிவசக்தி ஆகிய இருவரும் திருவள்ளூர் தேரடியில் இருந்து ஆட்டோ மூலம் எரையூர் கிராமத்திற்கு செல்வதற்காக ஏறியுள்ளனர்.
அதே ஆட்டோவில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஏறியுள்ளார். செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் என தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு தானும் எரையூர் செல்வதாக கூறி ஆட்டோவில் பயணித்தவர் நட்பாக பழகியுள்ளார்.
இரவு நேரமானதால் அந்த 35 வயது பெண்மணி உணவு வாங்கி வந்து கொடுத்துள்ளார். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிவசக்தி உள்ளிட்ட சிலர் மயக்கமடைந்துள்ளனர்.
அப்போது சிவசக்தி கழுத்தில் அணிந்திருந்த 13 சவரன் நகையை அந்த பெண் திருடிச் சென்றுள்ளார்.
இது குறித்து சரவணன் புல்லரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன், தாலுக்கா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உணவு சாப்பிட்டு மயக்கமடைந்த 3 பேர் தற்போது திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- சிறுவாபுரி கிராமத்தில் உள்ள பால சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு கடந்த 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
- சிறுவாபுரி முருகன் கோவிலில் திருப்பணிகள் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டு கடந்த 21-ந் தேதி கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பொன்னேரி:
சிறுவாபுரி கிராமத்தில் உள்ள பால சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு கடந்த 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 19 ஆண்டுகளுக்கு பிறகு மூலவர் சந்நிதி, அண்ணாமலையார் சந்நிதி உள்ளிட்ட சந்நிதிகள் புதுப்பித்தல், கருங்கல் தரைதளம் அமைத்தல், எஸ்எஸ் கியூ லைன் அமைத்தல், திருக்குளம் பாதுகாப்பு வேலி அமைத்தல் முதலான திருப்பணிகள் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டு கடந்த 21-ந் தேதி கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்ட பக்தர்களின் வசதிக்காக 4 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள், 32 இடங்களில் தற்காலிக கழிப்பறைகள், 25 இடங்களில் குடிநீர் வசதி, 7 இடங்களில் காவல் கண்காணிப்பு கோபுரம், 2 இடங்களில் காவல் கட்டுப்பாட்டு அறை, 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், இரண்டு இடங்களில் அகன்ற டி.வி. திரைகள், சுமார் 2 கி.மீ தூரத்திற்கு பேரிகாட், 100 நபர்களுக்கு விபத்து காப்பீடு, 4 இடங்களில் தற்காலிக மருத்துவ முகாம் பந்தல், ஒரு இடத்தில் தீயணைப்பு பந்தல் ஆகிய வசதிகள் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படி கோவில் நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டன.
விழாவில் மத்திய மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்
விழாவினை சிறப்பாக நடத்திய கோவில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில் குமார், ஒன்றிய கவுன்சிலர் து.சந்திர சேகர், ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சிராணி தேவராஜ், துணைத்தலைவர் சேகர் ஆகியோருக்கு சிறுவாபுரி கிராம மக்கள் சால்வை, மாலைகள் அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
- மாணவி தனது பெற்றோரிடம் சண்டை போட்டுவிட்டு கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
- மாணவிக்கு ஆறுதல் கூறுவது போல் நடித்து அவரை வெள்ளவேடு அருகே மறைவான இடத்துக்கு கடத்தி சென்று மாணவியை ஆட்டோ டிரைவர் கற்பழித்தார்.
ஆவடி:
ஆவடியை அடுத்த பட்டாபிராம் பாரதியார் நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி பட்டாபிராமில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 24-ந்தேதி மாலையில் மாணவி பள்ளியில் இருந்து வீடு திரும்பினார். அப்போது அவர் சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர் கண்டித்தனர்.
இதனால் மாணவி தனது பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு அன்று இரவு கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
அப்போது ஆவடியை அடுத்த பட்டாபிராம் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராமகிருஷ்ணன் (வயது38). தனது ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். வீட்டை விட்டு வெளியேறிய மாணவி சாலையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது ஆட்டோ டிரைவர் ராமகிருஷ்ணன் மாணவியிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்டுள்ளார். ஆட்டோவில் ஏறிய மாணவி எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் எனக் கூறினார்.
இதையடுத்து மாணவிக்கு ஆறுதல் கூறுவது போல் அவரை வெள்ளவேடு அருகே மறைவான இடத்துக்கு கடத்தி சென்று மாணவியை கொடூராக கற்பழித்தார்.
அப்போது மாணவி கூச்சலிட்டார். உடனே அங்கிருந்து ராமகிருஷ்ணன் தப்பி சென்று விட்டார். பின்னர் அந்த மாணவி அங்கிருந்து சாலை வழியாக தப்பி ஓடி வந்தார். இதைப் பார்த்து அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும், பொதுமக்களும் அவரை மீட்டு வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் ஆவடி மகளிர் போலீசுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
இது குறித்து மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ஆட்டோ டிரைவர் ராமகிருஷ்ணனை ஆவடி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- மெதூர் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருபவர்கள் காளிதாஸ்.
- பொன்னேரி போலீஸ் நிலையத்தில் காளிதாஸ் புகார் கொடுத்தார்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த மெதூர் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருபவர்கள் காளிதாஸ், ராகுல். நேற்று இரவில் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரம்பி கொண்டிருந்தபோது 3 இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் ஒரு இருசக்கர வாகனத்திற்கு 1000 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பினர்.
ஊழியர் காளிதாஸ் பணம் கேட்ட போது மற்ற 2 வண்டிகளையும் சேர்த்து பெட்ரோல் நிரப்ப வேண்டும். பின்னர் பணம் கொடுப்பதாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காளிதாசை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் காளிதாஸ் புகார் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து தப்பி ஓடிய பொன்னேரி பகுதியை சேர்ந்த தீபக் (22), மணி (22), அபூபக்கர் (21), கண்ணன் (21), சித்திக் பாஷா (23), விஜய் (24) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் விசாரணை செய்ததில் அவர்கள் பல்வேறு குற்றவழகில் ஈடுபட்டவர்கள் என்பதும் போதை மாத்திரை உபயோகிருப்பதும் தெரியவந்தது. பின்னர் அவர்களை விசாரணை செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை கலைஞர் நகரை சேர்ந்தவர் சீனிவாசன்.
- பென்னலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஊத்துக்கோட்டை:
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை கலைஞர் நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 27). வேன் டிரைவர். சீனிவாசன் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் புறப்பட்டார். ஊத்துக்கோட்டை நகர எல்லையில் புதிய மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அனந்தேரியிலிருந்து ஊத்துக்கோட்டை நோக்கி நெல் முட்டைகளுடன் வந்து கொண்டிருந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசன் படுகாயம் அடைந்தார். அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் இறந்தார். இதுகுறித்து பென்னலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கடந்த 16-ந் தேதி பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
- ரெயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் ரெயில் நிலையத்தில் கடந்த 16-ந் தேதி பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது ஜல்லி கற்கள் மற்றும் கத்திகளால் தாக்கிக் கொண்டனர். இதில் பச்சையப்பன் கல்லூரியில் பிஏ மூன்றாம் ஆண்டு படிக்கும் தக்கோலம் ராஜம்பேட்டை கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார் (20) என்பவரை கத்தியால் தலையில் வெட்டினர். அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனை சென்று விசாரித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதில் ரெயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி காயம் அடைந்த கல்லூரி மாணவன் தினேஷ்குமார் கொடுத்த தகவலின் பேரில் கடம்பத்தூரைச் சேர்ந்த ராகுல் (18), ரோகித் (18) மற்றும் திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த ராகுல் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
ஆனால் இவர்கள் 3 பேரும் மாநிலக் கல்லூரி மாணவர்களுடன் ரெயிலில் பயணிக்கும் நண்பர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் மாணவனை கத்தியால் வெட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த பூண்டி அடுத்த நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்த மெர்லின் (19), சுமன் என்ற சூர்யா (19) ஆகிய 2 மாணவனை கைது செய்து கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்படும் உண்டியல் பணம் எண்ணும் பணி திருத்தணி முருகன் மலைக்கோவிலில் தேவர் மண்டபத்தில் நடைபெற்றது.
- கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, கோவில் தக்கார் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் பணியாளர்களைக் கொண்டு உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.
திருத்தணி:
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்து விட்டு செல்கின்றனர்.
பக்தர்கள் அனைவரும் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்துகின்றனர்.
பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்படும் உண்டியல் பணம், திருத்தணி முருகன் மலைக்கோவிலில் தேவர் மண்டபத்தில் கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, கோவில் தக்கார் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் பணியாளர்களைக் கொண்டு எண்ணும் பணி நடைபெற்றது.
இதில் கடந்த 24 நாட்களில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 38 லட்சத்து 93 ஆயிரத்து 359 ரூபாய் பணமும், தங்கம் 320 கிராமும், வெள்ளி 11 ஆயிரத்து 480 கிராமும் காணிக்கையாக செலுத்தி இருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குப்பைகளை மக்கும் குப்பைகளாக மாற்றும் 20 குதிரை திறன் கொண்ட மோட்டார் எந்திரம் ஒன்று காணாமல் போனது.
- போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் நுங்கம்பாக்கம் கிராமத்தில் திருவள்ளூர் நகராட்சிக்கு சொந்தமான மங்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரிக்கும் கூடம் உள்ளது. இங்கு உள்ள குப்பைகளை மக்கும் குப்பைகளாக மாற்றும் 20 குதிரை திறன் கொண்ட மோட்டார் எந்திரம் ஒன்று காணாமல் போனது. இது குறித்து திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூர் ஊராட்சி மணவூர் சாலையை சேர்ந்தவர் கிரண்குமார்.
- திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூர் ஊராட்சி மணவூர் சாலையை சேர்ந்தவர் கிரண்குமார் (வயது 30). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் பணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சின்னம்மாபேட்டை உயர்மட்ட பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி கிரண்குமார் உயிரிழந்தார்.
இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






