என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கணவரை பிரிந்த இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர்
- பொன்னேரி அடுத்த டி.வி. புரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
- இளம்பெண் கேட்டபோது வாலிபர் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதாக தெரிகிறது.
கும்மிடிப்பூண்டி:
பொன்னேரி அடுத்த டி.வி. புரம் பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இவர் கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்த வெங்கல் பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. காதல் ஆசை வார்த்தை கூறி அவர் நெருங்கி பழகினார். மேலும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியதாக தெரிகிறது. இதனால் இளம்பெண், அந்த வாலிபருடன் மிகவும் நெருக்கமானார். இதில் இளம்பெண் கர்ப்பம் அடைந்தார்.
இதுபற்றி அறிந்நதும் அந்த வாலிபர் இளம் பெண்ணுடன் பழகுவதை நிறுத்தினார். இதுபற்றி இளம்பெண் கேட்டபோது திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், இதுபற்றி பொன்னேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






