என் மலர்
திருவள்ளூர்
- குபேந்திரன், பூபதி ஆகிய இருவரும் கூவம் அரசுப் பள்ளியில் சத்துணவு உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சத்தை வாங்கினர்.
- ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுரேஷ் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணிடம் புகார் அளித்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த குபேந்திரன், பூபதி ஆகிய இருவரும் கூவம் அரசுப் பள்ளியில் சத்துணவு உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சத்தை வாங்கினர். ஆனால் அவர்கள் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுரேஷ் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணிடம் புகார் அளித்தார்.
மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட குபேந்திரன், பூபதி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
- கடையில் இருந்த இனிப்பு, குளிர் பானம், பிஸ்கெட் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து நாசமானது.
- திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் எம்.ஜி.எம். நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவர் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் பேக்கரி கடை வைத்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். இன்று அதிகாலை 3 மணி அளவில் பஸ் நிலையத்தில் திருவள்ளூர் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பேக்கரி கடை தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
எனினும் கடையில் இருந்த இனிப்பு, குளிர் பானம், பிஸ்கெட் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து நாசமானது.
மேலும் கடையில் இருந்த ரூ.35 ஆயிரம் ரொக்கம் எரிந்து சாம்பல் ஆனது. புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை வர இருப்பதால் அதிக அளவிலான இனிப்பு பொருட்களை வாங்கி கடையில் வைத்திருந்ததாகவும், ரூ.5 லட்சம் மதிப்பிலான உணவுப் பொருட்கள், பிரிட்ஜ் உள்ளிட்டவை எரிந்து நாசமானதாகவும் தெரிகிறது.
இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நசரத்பேட்டை போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட கண்ணப்பா தெருவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேறி சாலைகளில் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் கழிவு நீரால் சூழப்பட்டுள்ளது.
வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வர முடியாத நிலை உள்ளது. கடும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அிறந்ததும் நசரத்பேட்டை போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- திருத்தணி சித்துார் சாலையில் மருந்து கடை நடத்தி வருகிறார்.
- கொள்ளை சம்பவம் தொடர்பாக திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருத்தணி:
திருத்தணி அடுத்த தாழவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் திருத்தணி சித்துார் சாலையில் மருந்து கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு விற்பனை முடிந்ததும் வழக்கம் போல் கடையை பூட்டிச்சென்றார்.
இந்தநிலையில் நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ. 35 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த மருந்து, மாத்திரைகளை அள்ளிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருவள்ளூரை அடுத்த திருவாலங்காட்டில் வட ஆரண்யேஸ்வரர் கோவில் உள்ளது.
- வருகிற 5-ந் தேதி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த திருவாலங்காட்டில் வட ஆரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் சிறப்பு பெற்ற இந்த கோவில் நடராஜ பெருமானின் 5 சபைகளில் முதலாவதாக உள்ள ரத்தின சபையாக திகழ்கிறது.
இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் வரும் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா அடுத்த மாதம் (ஜனவரி) 5-ந் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக திருவாலங்காடு கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆருத்ரா தரிசன விழா இன்று காலை 5.45 மணிக்கு மாணிக்க வாசகர் உற்சவத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நடராஜர் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
விழாவையொட்டி வருகிற 5-ந் தேதி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு ரத்ன சபாபதி பெருமாள் கோவில் வளாகத்தின் பின்புறத்தில் உள்ள தல விருட்சகத்தின் கீழ் அபிஷேக மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.
அதைத்தொடர்ந்து விபூதி அபிஷேகத்துடன் ஆருத்ரா தரிசன விழா தொடங்குகிறது. நடராஜருக்கு நெல்லிப்பொடி, வில்வப்பொடி, பால், தேன் மற்றும் பழங்கள் என 41 வகையான அபிஷேகங்கள் விடிய விடிய மறுநாள் காலை வரை நடத்தப்படுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெறும்.
மறுநாள் (6-ந் தேதி) அதிகாலை 5 மணிக்கு, கோபுர தரிசனம், பகல், 12 மணிக்கு, அனுக்கிரக தரிசனமும் 7-ந் தேதி காலை, 8.45 மணிக்கு, சாந்தி அபிஷேகமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- ஆரணியில் காட்டன் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பேரை கைது செய்தனர்.
பெரியபாளையம்:
ஆரணியில் காட்டன் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்ட போது காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சுப்ரமணி, சுதாகர், சேகர் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
- கூடப்பாக்கம் பகுதியில் உள்ள கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
- போலீசார் விசாரணையில் என்ஜினீயர் விஜயகுமார் மற்றும் ஊழியர் ஆறுமுக நயினார் கூட்டாக சேர்ந்து பொருட்களை திருடியது தெரியவந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கூடப்பாக்கம் பகுதியில் உள்ள கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இங்கிருந்த ரூ.14 லட்சம் மதிப்புள்ள உதிரி பாகங்கள் திருடு போனது. விசாரணையில் என்ஜினீயர் விஜயகுமார் மற்றும் ஊழியர் ஆறுமுக நயினார் கூட்டாக சேர்ந்து பொருட்களை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து வெள்ளவேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவரை காணவில்லை என புகார்.
- பல இடங்களில் உறவினர்கள் தேடியும் அனிதா கிடைக்க வில்லை.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே உள்ள ஆவாஜிப்பேட்டை கிராமத்தில், லட்சுமி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் அனிதா(வயது22. இவர் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டிலிருந்த குப்பைகளை வெளியே கொட்டி வைத்து வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து காணாமல் போன அனிதாவை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடியும் கிடைக்க வில்லை. இதனால் காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறு இளம்பெண் அனிதாவின் தந்தை மாணிக்கம் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
- கொத்தனார் வேலைக்குச் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் இருவரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
- அப்போது எதிரே வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரை ஊராட்சி, செங்காத்தா குளம் கிராமம், அருந்ததியர் காலனி, மாத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சூர்யா(27), கொத்தனாராக பணியாற்றி வருகிறார்.
ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கொத்தனாராக பணியாற்றி வரும் இவரது நண்பர் சுதாகர் (26), என்பவரும் நேற்று முன்தினம் இரவு கொத்தனார் வேலைக்குச் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
பெரியபாளையம் அருகே செங்காத்தாகுளம்- ஏனம்பாக்கம் ரோட்டில் செங்காத்தாகுளம் அருகே வந்தபோது எதிரே வந்த மினி லாரி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சூர்யா மற்றும் சுதாகர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
அருகிலிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தகவலறிந்த பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி லாரியை பறிமுதல் செய்தனர். விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர். தலைமறைவான டிரைவரை வலை வீசி தேடிவருகின்றனர்.
- தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக காவல்துறையில் தனி பாதுகாப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது.
- திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்ட் சுவாமிநாதன் தலைமையிலான குழுவினர் வந்தனர்.
திருத்தணி:
தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக காவல்துறையில் தனி பாதுகாப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு பிரிவின் போலீஸ் சூப்பிரண்டாக சுவாமிநாதன் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்ட் சுவாமிநாதன் தலைமையிலான குழுவினர் வந்தனர். இதனை தொடர்ந்து அங்குள்ள மண்டபத்தில் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ், வருவாய் ஆர்.டி.ஓ.ஹஸ்ரத்பேகம், முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா, தாசில்தார் வெண்ணிலா, இன்ஸ்பெக்டர் ஏழுமலை, தலைமை மருத்துவர் லட்சுமி நரசிம்மன், தீயணைப்பு நிலைய அலுவலர் அரசு, சுகாதாரத்துறை, மின்சார துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கோவிலின் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து, கோவில் தங்க கோபுரம், கோவிலில் உள்ள அறைகள், கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள், ஜெனரேட்டர் அறை, கோவிலில் பணிபுரியும் ஊழியர்களின் விவரங்கள், மலை மேல் உள்ள கடைகள், கோவில் தங்கத்தேர், வெள்ளி தேர் உள்ள பாதுகாப்பு அறைகள் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
- புலிக்குளம் பகுதியைச் சேர்ந்த வேல்ராஜ் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
- காலை வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் கடையில் இருந்தார்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த புலிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்ராஜ். அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் கடையில் இருந்தார்.
பின்னர் மதியம் வீட்டிற்கு சென்றபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு கிராம் தங்கம், வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக நீர்வரத்து அதிகமாக காணப்பட்டன.
- காட்டூரான் கால்வாய் அணைக்கட்டு 4 அடி உயரம் உயர்த்தி கட்டியதால் தண்ணீர் வெளியேற முடியாமல் ஊருக்குள் சென்று 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர் விவசாய நிலங்கள் கடந்த இரண்டு மாதமாக நீரில் மூழ்கியுள்ளன.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த காட்டூர் தத்தை மஞ்சி ஏரிகளை இணைத்து பொதுப்பணித்துறை மூலம் நீர்த்தேக்க சேமிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. காளியம்பாக்கம் வெள்ளகுளம் சிங்கிலி மேடு சிறுவாக்கம் தடப்பெரும்பாக்கம் ஆளாடு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வெளியேறும் மழை நீர் மற்றும் ஆரணி ஆற்றின் உபரி நீர் கால்வாய் வழியாக காட்டூர் தத்தை மஞ்சு ஏரியில் சென்று உபரி நீர் பழவேற்காடு கடலில் கலக்கின்றன.
கடந்த பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக நீர்வரத்து அதிகமாக காணப்பட்டன. இந்நிலையில் ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள காட்டூரான் கால்வாய் அணைக்கட்டு 4 அடி உயரம் உயர்த்தி கட்டியதால் தண்ணீர் வெளியேற முடியாமல் ஊருக்குள் சென்று வேலூர் அத்தமஞ்சேரி எரிபிள்ளை குப்பம் மனோபுரம், கொளத்தூர், பகுதியில் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர் விவசாய நிலங்கள் கடந்த இரண்டு மாதமாக நீரில் மூழ்கியுள்ளன. இதனால்பாதிக்கப்பட்ட விவசாயிகள் இரண்டு போகும் விளைவிக்கக்கூடிய இடத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் அழுகியுள்ளன எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் தேங்கியுள்ளமழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி விவசாயி தேவராஜ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொன்னேரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து விவசாயிகளிடம் பேசிய அதிகாரிகள், சார் ஆட்சியரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததின் பேரில் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் வந்து அலுவலகம் முன்பு சமையல் செய்து சாப்பிடுவோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.






