என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • கடந்த சில மாதத்துக்கு முன்பு திடீரென ருகேஷ் தற்கொலை செய்து கொண்டார்.
    • பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த அனுப்பப்பட்டை சேர்ந்தவர் ருகேஷ். இவருக்கும் உப்பரபாளையம் சுந்தரையா தெருவை சேர்ந்த ஷாலினி (வயது21) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 மாதத்தில் பெண்குழந்தை உள்ளது.

    குடும்பப் பிரச்சினை காரணமாக ஷாலினி குழந்தையுடன் உப்பரபாளையத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதத்துக்கு முன்பு திடீரென ருகேஷ் தற்கொலை செய்து கொண்டார்.இதனால் ஷாலினி மிகவும் மனவேதனை அடைந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஷாலினி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இதற்கிடையே சிகிச்சை பலனின்றி ஷாலினி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மூன்று மாடுகளையும் போலீசார் மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
    • தலைமறைவான ஒருவரை போரீசார் தேடி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் அருகே உள்ள பாஷிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன். விவசாயி. இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு இவரது வீட்டில் இருந்த மூன்று மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து இன்று காலை பூபாலன் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர்.

    இதில், சோழவரம் ஒன்றியம், விச்சூர் கிராமம், செம்பியம் பகுதியைச் சேர்ந்தவர்களான சூர்யா(வயது25), மணிகண்டன் என்ற மணி(வயது20) ஆகியோர் தங்களது நண்பருடன் மாடுகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும், அவர்கள் கொடுத்த தகவலின்படி மூன்று மாடுகளையும் போலீசார் மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

    குற்றவாளிகள் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து இன்று இரவு புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான ஒருவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள், போக்குவரத்து ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    ஊராட்சிகளின் வழியாக மீஞ்சூர் திருவள்ளவாயல் பேருந்துகளை இயக்க கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.பொன்னேரி:

    பொன்னேரி அருகே புதிய வழித் தடத்தில் பேருந்து சேவையை எம் எல் ஏக்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

    பொன்னேரி அரசு பேருந்து பணிமனையில் இருந்து டி 44புதிய வழித்தடங்களான தேவதானம், மெரட்டூர், கல்பாக்கம், வேளூர், ஆகிய ஊராட்சிகளின் வழியாக மீஞ்சூர் திருவள்ளவாயல் பேருந்துகளை இயக்க கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் ஆகியோர் உத்தரவின் படி மேற்கண்ட பகுதிகளுக்கு புதிய பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டது. 

    இப்பேருந்துகளை எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகர், டிஜே கோவிந்தராஜன், மீஞ்சூர் சேர்மன் ரவி, ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். 

    இந்நிகழ்ச்சியில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும் காணிப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும் டாக்டர் கா.சு. ஜெகதீசன் மற்றும் திமுக காங்கிரஸ் நிர்வாகி கள் போக்குவரத்து ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • கண்ணன் தொழிற்சாலையில் வேலையில் இருந்தபோது ராஜேஷ் என்பவர் போன் செய்து பழைய இரும்பு பொருட்கள் எடுப்பதை நிறுத்தி விடுங்கள்.
    • கண்ணன் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம், நாராவாரி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 30). இவர் கன்னிகைபேர் கிராமத்தில் உள்ள தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கண்ணனின் முதலாளி பாரதிராஜா கன்னிகைபேர் கிராமத்தில் உள்ள மற்றொரு தொழிற்சாலையில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக பழைய இரும்பு பொருட்களை எடுத்து விற்பனை செய்து வருகிறார்.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் கண்ணன் தொழிற்சாலையில் வேலையில் இருந்தபோது செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் போன் செய்து கன்னிகைபேர் கிராமத்தில் பழைய இரும்பு பொருட்கள் எடுப்பதை நிறுத்தி விடுங்கள். இல்லை என்றால் உன்னையும் உனது முதலாளி பாரதிராஜாவையும் தீர்த்து கட்டி விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து கண்ணன் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் சென்று வரும் மின்சார ரெயில்களில் கூட்டம் எப்போதும் அதிகம் காணப்படும்.
    • அத்திப்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு 2 பாதைகள் மட்டுமே இருக்கிறது.

    பொன்னேரி:

    சென்னை நகர மக்களின் போக்குவரத்துக்கு புறநகர் மின்சார ரெயில் சேவை பெரிதும் கைகொடுத்து வருகிறது. குறைந்த கட்டணம், விரைவான பயணம் என்பதால் மின்சார ரெயில் சேவையை பயணிகள் அதிகம் விரும்புகிறார்கள்.

    சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய மார்க்கங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னை புறநகர் பகுதியில் இருந்து வரும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் அதிகம் பயன்படுத்துவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மின்சார ரெயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    குறிப்பாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் சென்று வரும் மின்சார ரெயில்களில் கூட்டம் எப்போதும் அதிகம் காணப்படும். எனவே கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் கூடுதலாக மின்சார ரெயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    சென்னையில் இருந்து அத்திப்பட்டு வரை 4 ரெயில்பாதைகள் உள்ளன. ஆனால் அத்திப்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு 2 பாதைகள் மட்டுமே இருக்கிறது.

    இந்த பாதையில் புறநகர் ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் இயக்கப்படுவ தால் கூடுதலாக மின்சார ரெயில்களை இயக்க முடியாத நிலை உள்ளதாக தெரிகிறது.

    மேலும் சரக்கு ரெயில், விரைவு ரெயில்கள் காரணமாக பேசின் பிரிட்ஜ் மற்றும் விம்கோ நகர் இடையே குறைந்த வேகத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்படு கின்றன. இதனால் கால தாமதம் ஏற்பட்டு பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    பொன்னேரி, மீஞ்சூர், அத்திப்பட்டு மற்றும் எண்ணூரில் இருந்து புற நகர் ரெயில்களில் வரும் பெரும்பாலானோர் சென்ட்ரலில் இறங்கி, தாம்பரம் அல்லது செங்கல்பட்டு பகுதியில் உள்ள பணியிடங்களுக்குச் செல்வார்கள்.

    கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் ரெயில்கள் விம்கோ நகருக்கு பின்னர் மெதுவாக இயக்கப்படுகிறது. மேலும் பேசின் பாலத்தை கடக்க சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஆகிறது. இதனால் தற்போது பலர் விம்கோ நகர் ரெயில் நிலையத்தில் இறங்கி மெட்ரோ ரெயிலுக்கு மாறி சென்ட்ரலை விரைவாக வந்தடையும் நிலை உள்ளது.

    இதற்கிடையே கும்மிடிப் பூண்டி மார்க்கத்தில் மின்சார ரெயில் சேவையை அதிகரிக்க அத்திப்பட்டு -கும்மிடிப்பூண்டி இடையே புதிதாக 3-வது, 4-வது ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான திட்ட அறிக்கை தயாரானதும் புதிய ரெயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று தெரிகிறது.

    இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, 'சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரெயில் பாதை பிரச்சினை உள்ளது. இதனால் நெரிசல் மிகுந்த நேரங்களில் மின்சார ரெயில் சேவைகளை அதிகரிப்பது சாத்தியமில்லை. சென்னை-கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில், சென்னை - அத்திப்பட்டு இடையே 4 ரெயில் பாதைகள் உள்ளன. அத்திப்பட்டு - கும்மிடிப்பூண்டி இடையே 2 ரெயில் பாதைகள் மட்டுமே உள்ளன. எனவே இந்த பகுதியில் 3-வது, 4-வது வழித்தடத்திற்கான ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த ஆய்வு அறிக்கையின்படி புதிய ரெயில்பாதை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.

    • ஒரு பார்சலில் ஏராளமான வெளிநாட்டு மதுபாட்டில்கள் இருந்தன.
    • கைதான அஜய் சிங்கை வண்ணாரப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

    திருவொற்றியூர்:

    ராயபுரம் பட்டேல் நகரில் உள்ள தனியார் பார்சல் அலுவலகத்தில் வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் இறக்குமதி செய்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ரெயில்வே போலீஸ் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சசிகலா சப்-இன்ஸ்பெக்டர் ஏசுராஜ் ஆகியோர் அந்த அலுவலகத்திற்கு வந்த பார்சல்களை சோதனை செய்தனர்.

    அப்போது ஒரு பார்சலில் ஏராளமான வெளிநாட்டு மதுபாட்டில்கள் இருந்தன. இந்த பார்சலை டெலிவரிக்கு எடுக்க வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அஜய் சிங் (வயது58) என்பவரை கைது செய்த னர்.

    அவர் டெல்லியில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு வெளிநாட்டு மதுபாட்டில்களை கடத்தி வந்து கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரிந்தது. மொத்தம் 87 வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான அஜய் சிங்கை வண்ணாரப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் ரெயில்வே போலீ சார் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • கேபிள் டி.வி. வயரில் ஈரமான துணிபட்டது. இதில் கீர்த்தனா மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.
    • திருவள்ளூர் தாலுகா போலீசார் கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வரதாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி கீர்த்தனா (வயது30).

    இவர் துணி துவைத்து விட்டு அதனை வீட்டின் வெளியே காய வைத்தார். அருகில் இருந்த கேபிள் டி.வி. வயரில் ஈரமான துணிபட்டது. இதில் கீர்த்தனா மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.

    இதுபற்றி அறிந்ததும் 108 ஆம்புலன்சு ஊழியர்கள் விரைந்து வந்து பரிசோதித்தனர். ஆனால் கீர்த்தனா ஏற்கனவே மின்சாரம் தாக்கியதில் இறந்து இருப்பது தெரிந்தது.

    திருவள்ளூர் தாலுகா போலீசார் கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெருமந்தூர் பகுதியில் இயங்கும் அரசு மணல் குவாரியில் மணல் எடுக்க வந்தார். பின்னர் அவர் லாரியின் மேல் தூங்கினார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    சென்னை, அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயத48). மணல் லாரி டிரைவர். இவர் திருவள்ளூரை அடுத்த பட்டறை பெருமந்தூர் பகுதியில் இயங்கும் அரசு மணல் குவாரியில் மணல் எடுக்க வந்தார்.

    பின்னர் அவர் லாரியின் மேல் தூங்கினார். இந்த நிலையில் குமார் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கொல்லகுப்பம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் மின் கம்பம் சேதமடைந்து உள்ளது.
    • சேதமடைந்துள்ள மின்கம்பங்களால் இந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    கனகம்மாசத்திரம்:

    திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு- பொன்பாடி செல்லும் சாலையில் உள்ள கொல்லகுப்பம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் மின் கம்பம் சேதமடைந்து உள்ளது. அதில், சிமெண்ட் பூச்சு உதிர்ந்து, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. எந்நேரமும் உடைந்து விழும் நிலையில் உள்ளது.

    அதே வழியில் உள்ள மின்கம்பம் ஒன்றும் சேதம் அடைந்துள்ளது. சேதமடைந்துள்ள மின்கம்பங்களால் இந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. சேதம் அடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் கம்பங்களையும், சாலையில் உள்ள மின்கம்பத்தையும் உடனடியாக மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணிகர திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவரைப்பேட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ளது தச்சூர். இங்குள்ள கடைகளுக்கு பொன்னேரியை சேர்ந்த பல்பொருள் விற்பனை நிறுவன மேலாளர் மகேஷ் (வயது 41) மற்றும் ஊழியர்களான ஜெயபால், சூர்யா ஆகியோர் பொருட்களை சப்ளை செய்தனர். இதற்காக தாங்கள் கொண்டு வந்த மினி லோடு வேனை சாலையோரம் அவர்கள் நிறுத்தி இருந்தனர்.

    அப்போது அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் வேனின் முன்புறம் ரூ.87 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்த பணப்பையை அபேஸ் செய்து விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பினர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணிகர திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரிஷிக்கு சரியாக படிப்பு வராததால் அவரை ஒழுங்காக படிக்கும்படி பெற்றோரும் உறவினர்களும் கூறியுள்ளனர்.
    • மனமுடைந்த ரிஷி நேற்று குளியல் அறையில் லுங்கியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் ஜோதி நகர் ஸ்கூல் தெருவை சேர்ந்தவர் பரிமளராஜ், இவரது மகன் ரிஷி (வயது 15). எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். ரிஷிக்கு சரியாக படிப்பு வராததால் அவரை ஒழுங்காக படிக்கும்படி பெற்றோரும் உறவினர்களும் கூறியுள்ளனர்.

    இதனால் மனமுடைந்த ரிஷி நேற்று குளியல் அறையில் லுங்கியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாத்தாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகி றார்.

    • திருவொற்றியூர் ஒத்தவாடை தெருவில் தனியாருக்கு சொந்தமான சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனி உள்ளது.
    • மின்சாரம் தாக்கி ரவி தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் ஒத்தவாடை தெருவில் தனியாருக்கு சொந்தமான சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இங்கு பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த தொழிலாளி ரவி (வயது19) வேலை பார்த்து வந்தார். இவர் திருவொற்றியூர் கார்கில் நகரில் தங்கி இருந்தார். நேற்று உருளைக்கிழங்கு சிப்ஸ் போடுவதற்காக மெஷினை ஆன் செய்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ரவி தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரவி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து சாத்தாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    ×