என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயிலில் வெளிநாட்டு மதுபாட்டில் சென்னைக்கு கடத்தல்- வடமாநில நபர் கைது
- ஒரு பார்சலில் ஏராளமான வெளிநாட்டு மதுபாட்டில்கள் இருந்தன.
- கைதான அஜய் சிங்கை வண்ணாரப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.
திருவொற்றியூர்:
ராயபுரம் பட்டேல் நகரில் உள்ள தனியார் பார்சல் அலுவலகத்தில் வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் இறக்குமதி செய்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரெயில்வே போலீஸ் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சசிகலா சப்-இன்ஸ்பெக்டர் ஏசுராஜ் ஆகியோர் அந்த அலுவலகத்திற்கு வந்த பார்சல்களை சோதனை செய்தனர்.
அப்போது ஒரு பார்சலில் ஏராளமான வெளிநாட்டு மதுபாட்டில்கள் இருந்தன. இந்த பார்சலை டெலிவரிக்கு எடுக்க வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அஜய் சிங் (வயது58) என்பவரை கைது செய்த னர்.
அவர் டெல்லியில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு வெளிநாட்டு மதுபாட்டில்களை கடத்தி வந்து கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரிந்தது. மொத்தம் 87 வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான அஜய் சிங்கை வண்ணாரப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் ரெயில்வே போலீ சார் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.






