என் மலர்
திருப்பத்தூர்
- யார் என அடையாளம் தெரியவில்லை
- பல்வேறு கோணங்களில் விசாரணை
ஜோலார்பேட்டை:
குடியாத்தம் அடுத்த மேல்பட்டி ரெயில் நிலையம் அருகில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் காட்பாடி- ஜோலார்பேட்டை செல்லும் மார்க்கத்தில் ஏதோ ஒரு ரெயில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார் வாலிபர் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து யார் அவர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடியாத்தத்தை சேர்ந்தவர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் பகுதியில் இருந்து 8 பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு ஆட்டோ கடந்த 18-ந் தேதி காலையில் ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
பெட்ரோல் நிரப்பிக்கொண்டு லாரி தேசிய நெடுஞ்சாலையின் வளைவில் திரும்பியது. அப்போது அந்த வழியாக பைக்கை ஓட்டி வந்த வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த செந்தில்(வயது 50). பாம்பு ஆபரேட்டர் மீதும், ஆட்டோ மீதும் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில் செந்தில், டிரைவர் ராஜசேகரன், 8 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக செந்திலை வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 5 பேர் கைது
- ஜெயிலில் அடைத்தனர்
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியம் பொன்னாகரத்தை சேர்ந்தவர் தமிழ்செல் வன் (வயது 28). கூலி வேலை செய்து வருகிறார்.
இவரது தெருவில் இருந்த பொது குடிநீர் குழாயை உடைத்ததாக கூறப்படுகிறது. இதனை அதேப் பகுதியை சேர்ந்த சிலர் தட்டிக்கேட்டனர். இதில் அவர்களுக்குள் தக ராறு ஏற்பட்டு ஒருவரை ஒரு வர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஒருவர் இரும்பு கம்பியால் தமிழ்செல்வனை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகா யம் அடைந்த தமிழ்செல் வனை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நவீன் குமார், அப்பாவு, ரமேஷ்பாபு, ராஜேஷ், ஹரிஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் கைதானவர்களை வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
- தீயணைப்பு துறையினர் பிடித்தனர்
- ஏலகிரி மலை காட்டுப்பகுதியில் விட்டனர்
ஜோலார்பே ட்டை:
ஜோலா ர்பேட்டையை அடுத்த அம்மை யப்பன் நகர் ஊராட்சி தலைவர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் மனோன்மணி (வயது 63).
நேற்று மாலை இவரது வீட்டு வராண்டாவில் உள்ள ஸ்லாப் மீது 10 அடி நீள சாரைப்பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பாம்பை ஏலகிரி மலை காட்டுப்பகுதியில் விட்டனர்.
- கர்ப்பிணிகளுக்கு எடுக்கப்படும் ஸ்கேன் குறித்தும் கேட்டறிந்தார்
- கருவில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்பதை தெரிவிப்பது சட்டத்திற்கு புறம்பானது என நோட்டீஸ் ஒட்ட வேண்டும்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு சிகிச்சை பெற்றுவரும் காப்பிணிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மேலும் மருத்துவரிடம் கர்ப்பிணிகளுக்கு எடுக்கப்படும் ஸ்கேன் குறித்தும் கேட்டறிந்தார்.
கருவில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்பதை தெரிவிப்பது சட்டத்திற்கு புறம்பானது என தாய்மார்களுக்கு தெரியும் வகையில் நோட்டீஸ் ஒட்ட வேண்டும் என எடுத்துரைத்தார்.
தொடர்ந்து சிகிச்சைக்கு வந்த புறநோயாளிகளிடம், குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த ஆய்வின் போது அரசு டாக்டர்கள் இனியா, வித்தியா மற்றும் சுகாதார செவிலியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- அண்ணன் - தம்பி 3 பேர் கைது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் பழனி வட்டம் பகுதியை சேர்ந்தவர் ரஜினி (வயது 42). இவர் வேலூர் மத்திய ஜெயிலில் டெக்னிக்கல் அசிஸ்டெண் டாக பணிபுரிந்து வருகிறார்.
இவரது குடும்பத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த சுப் பிரமணி குடும்பத்திற்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட் டது.
நேற்று முன்தினம் ரஜினி வீட்டில் இருந்து வேலூர் செல்வதற்காக வந்துள்ளார். அப்போது அங்கிருந்த சுப்பிர மணி என்பவரின் மகன்கள் முருகன் (47), காத்தவராயன் (37), சுரேஷ் (35) அன்பழகன் (40) மற்றும் சின்ன மூக்கனூர் பகுதியை சேர்ந்த ஞானஒளி என்பவரின் மனைவி சாலம் மாள் (45) ஆகியோர் ரஜி னியை வழி மறைத்து ஏன் இந்த வழியில் வருகிறாய் என
திட்டி உள்ளனர்.
இதில் அவர்களுக்குள் வாக் குவாதம் ஏற்பட்டு, ஆத்திரம் அடைந்த முருகன், காத்தவ ராயன், சுரேஷ், அன்பழகன் ஆகியோர் ரஜினியை தாக்கி உள்ளனர். இதை ரஜினியின் தாயார் ராணி தடுக்க முயன்ற போது அவரை கீழே தள்ளியதில் காலில் முறிவு ஏற்பட் டது. சாலம்மாள் என்பவர் கல்லை எடுத்து ரஜினி மீது வீசியதில் வாய் மீது பட்டு மூன்று பற்கள் உடைந்தது.
இது குறித்து ரஜினி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக் டர் பிரபு வழக்குப் பதிவு செய்து முருகன், காத்தவரா யன், சுரேஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்தார். அன் பழகன் மற்றும் சாலம்மாள் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- 2 மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
- கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்
ஆம்பூர்:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந் திரன் மனைவி சுமதி (வயது 55). இவர் நேற்று ஆம்பூர் இந்திரா நகர் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் தாங்கள் போலீஸ் எனக்கூறி சுமதியிடம் பேச்சு கொடுத்துள்ளனர். பின்னர் தாங்கள் அணிந்திருக்கும் செயினை கழற்றிபையில் வைத்துக்கொண்டு ஜாக்கிரதையாக செல்லுங்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அதன்படி சுமதி தான் அணிந்திருந்த செயினை கழற்றி பைக்குள் வைத்துள்ளார். அப்போது அவரது கவனத்தை திசைதிருப்பி, அவருக்கு தெரியாமல் செயினை எடுத்து சென் றுள்ளனர். சுமதி சிறிது தூரம் சென்று பார்த்தபோது பையில் வைத்திருந்த 5 பவுன் செயின் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிளாஸ்டிக் கவர்கள், காலாவதியான தின்பண்டங்களையும் பறிமுதல் செய்து அழித்தனர
- அபராதம் விதித்து எச்சரிக்கை
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில், வாணியம்பாடியில் நகராட்சி ஆணையா ளர் சதீஷ்குமார் தலைமையில், நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் செந்தில்குமார். சரவணன் மற்றும் சுகாதார பணியாளர்கள் பஜார் வீதி, முகமது அலி பஜார், ஆத்துமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்கள் உள்ளதா? என சோதனை செய்தனர்.
மேலும் கடைகளில் இருந்த பிளாஸ்டிக் கவர்கள், காலாவதி யான தின்பண்டங்களையும் பறிமுதல் செய்து அழித்தனர்.
பிளாஸ்டிக்கவர்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர். தொடர்ந்து மீண்டும் இவற்றை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
- ரூ.8 ½ லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள கதிர் அடிக்கும் களம்
- கட்டிடம் பழுது பார்த்தல் பணிகளையும் பார்வையிட்டார்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளியை அடுத்த வேட்டப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
மேலும் ரூ.8 ½ லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள கதிர் அடிக்கும் களம், கோனேரிகுப்பம் வட்டத்தில் ரூ.1.42 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அங்கன்வாடிமைய கட்டிடம் பழுது பார்த்தல், வேட்டப்பட்டு ஊராட்சியில் ரூ.1.37 லட்சம் மதிப்பீட்டில் அங்கன் வாடி மையம் பழுது பார்த்தல் ஆகிய பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, ஜோலார் பேட்டை ஒன்றியக் குழு தலைவர் எஸ்.சத்தியா சதிஷ் குமார், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- நீளம், அகலம், ஆழம் போன்றவற்றை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தினார்
- 4 தொகுதிகளில் 1400 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி நடக்கிறது
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 1400 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஜோலார்பேட்டை ஒன்றியம் தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் 4 லட்சம் மதிப்பீட்டில் 2 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் இ.சுதா இளங்கோ அவர்களிடம் பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் பணிகளை நீளம், அகலம், ஆழம் போன்றவற்றை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, வட்டார வளர்ச்சி அலுவலர் துரை உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மகன்களுடன் அடிக்கடி குடும்ப பிரச்சினை
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி
வாணியம்பாடியை அடுத்த தேவஸ்தானம் அருகே உள்ள நடுப்பட்டறைகிராமத்தை சேர்ந்தவர் வள்ளிகண்ணன். இவ ரது மனைவி சரசா (வயது 63). இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர்.இவர்களில் இரண்டு பேர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையி்ல் மற்ற மகன்களுடன் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சரசா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத சார் சம்பவ பரிசோதனைக்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லேபிள் ஒட்டாத 3 கிலோ பொருட்கள் பறிமுதல்
- 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுரையின்படி, வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வி.செந்தில் குமார் மற்றும் வாணியம்பாடி நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் எம். பழனிசாமி ஆகியோர் வாணியம்பாடி பஸ் நிலையம் பகுதி களில் உள்ள கடைகள், பேக்கரி, சுவீட்ஸ்டால், ஓட்டல்களில் ஆய்வு செய்தனர்.
அப்போது உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்த ஒரு கடைக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட் டது. மூன்று இனிப்பகத்தில் இனிப்புகளுக்கு அதிகப்படியாக வண்ணம் சேர்க்கப்பட்டிருந்தது. அந்த கடைகளுக்கு முன் னேற்ற அறிக்கை அளிக்கப்பட்டது. இரண்டு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் இருந்ததால் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டு கடைகளில் லேபிள் ஒட்டாத 3 கிலோ பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். இரண்டு கடைகளுக்கும் தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் போண்டா, பஜ்ஜி போன்றவற்றை வாழை இலை மற்றும் மந்தாரை இலை, சில்வர் பிளேட்டில் வழங்க அறிவுறுத்தப்பட்டது.






